பிரதிபலிப்பான்களின் முகத்தில்!
இல்லையொரு புதுப்புன்னகை!
இல்லையொரு புது மொழி!
இல்லையொரு புதுக்குரல்!
இல்லையெந்தப்புதிதும் !
உண்மையும்!
இல்லையென்றும்!
பிரதிபலிப்பான்களுக்குச் சொந்த முகமும் !
ஓரிதயமும்.!
!
நீ அனைப் பிரதிபலிக்கிறாய்!
அவன் அவரைப் பிரதிபலிக்கின்றான்!
அவர் பிரதிபலிக்கவும் ஒருவரிருக்கிறார் !
உன்னை இவன் பிரதிபலிக்கிறான்.!
கடவுளே !
இவனைப் பிரதிபலிக்காதிருக்கட்டும்!
ஒருவரும்.!
!
பிரதிபலிப்பான்களின் சம்பாஷணையில்!
ஒழிந்திருக்கிறது கபடத்தின் சர்ப்ப நிழல்;!
பிரதிபலிப்பான்களின் !
செயல்களிலில்லைச் சுயமும் துளிர்ப்பும்.!
பரதிபலிப்பான்களிடம் எப்போதுமிருப்பதில்லை!
அன்புக்கும் நட்புக்குமான !
அந்ததரங்கமும் வெளிப்படையும்.!
!
ஒரு மாறாத புண்ணை !
ஒவ்வொரு பிரதிபலிப்பான்களும் !
வைத்துக்கொண்டிருக்கிறார்கள்!
இதயமென்றதற்குப் பெயரிட்டு!
அதில் நெளிகின்றன !
புழுத்த பொய்கள்.!
!
பிரதிபலிப்பான்களிடமிருந்து !
நழுவிக்கொண்டிருக்கிறது நிகழ்காலத்தின் மூச்சும்!
எதிர் காலத்தின் விதையும்
கருணாகரன்