மெய் உறங்கும் நாட்களின் கோடை - சித்தாந்தன்

Photo by Sajad Nori on Unsplash

எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்!
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்கு!
இசை மதுவூற்றி கிண்ணங்களை ததும்ப வைக்கிறாய்!
ததும்பி வழிந்த மதுவில்!
என் கனவுகள் குமிழியிட்டுடைவதாய்!
நொருங்கிச் சிதறும் சொற்களால் பாடுகிறாய்!
இன்றேன் எம் புன்னகையில் ஈரம் வடிந்திற்று!
காலாற நிழலற்ற பெருந்தெருவில்!
கானலில் ஈர்ப்புற்று அலையும்!
நாய்களின் இளைப்பின் அதிர்வு!
சாகடிக்கப்பட்ட கணங்களாய் நீள்கிறது.!
இனி இரவுகள் தொங்கும் கயிற்றில்!
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி!
நீ செல்லப் போகிறாய்!
எத்தனை ஆந்தைகள் அலறுகின்றன என்னுள்!
மழையற்ற நெடுங்காலமிது!
பாழாக்கப்பட்ட கட்டடங்களின் மேலிருந்து!
சிறகுலர்த்துகிறது கொண்டைக்குருவி ஒற்றையாய்!
இடிபாடுகளுக்குள் கேட்கும் குரல்!
வெளவால்களை துரத்திச் செல்கிறது!
அவற்றின் பறப்பெல்லைவரை.!
நீ காலியான மதுக்குவளைகளை முகர்கிறாய்!
மீதமிருக்கும் போதையையும்!
அவற்றின் நெடியால் நிறைக்கிறாய்!
பின்னும்!
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி!
எனது காலத்தை நிர்வாணப்படுத்துகிறாய்!
எச்சிலாய் வழிகிறது மிஞ்சியுள்ள சொற்களும்.!
நீ சொல்கிறாய்!
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்!
வாழ்தலின் இழையறுத்து வலைபின்னுகிறது காலம்!
கத்திக்கும் வாளுக்குமான பேதந்தான் எமக்கு!
நீ செல்லப்போகிறாய்!
காரணமற்ற குரோதத்தின் பழியுணர்ச்சியுடனும்!
நான் பருகமறுத்த மதுவின் போதையுடனும்.!
உனக்கு வழிவிடப்போகும் கடலை!
விசமாக்கிற்று உனது பார்வை.!
மீன்கள் செத்து மிதக்கின்றன!
கடல் நாறி மணக்கிறது!
இன்னும் நீ சொல்கிறாய்!
எம்மிடை விரியும் வெளியில்!
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்.!
சித்தாந்தன்!
27-05-2007 இரவு- 11.51
சித்தாந்தன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.