முருகனைக் கண்டவுடன்!
மூன்று முறை குட்டிவிட்டு!
வருக என்றழைத்து !
வாங்கினிலே உட்கார்த்தி!
பருக ஏதுனக்கு!
பழரசங்கள் வேண்டுமென்று!
உருகக் கேட்டதற்காய்!
ஓரு செம்பு தண்ணீர் என்றான்.!
மூன்று முடறுதன்னும்!
முற்றாகக் குடிக்கவில்லை!
சான்றுண்டா கேட்டுடுவீர்!
சத்தியமாய் ஏதெனக்கு!
ஈன்று வளர்த்தவளின்!
வன் சொல்லால் கோபமுற்று!
தோன்றும் மன உழைச்சல்!
நீங்குதற்காய் வந்ததென்றான்.!
ஒருத்தி அருகிருந்தே!
அமைதியற்ற மானுடத்தின்!
இருத்தி இரு பக்கம்!
இல்லாளாய்க் கொண்டதனால்!
உருத்துப் பெருத்திருப்பாய்!
உன் நிலையை மனத்திருத்த!
கருத்துக் கருவாடாய்!
காண்பதுவும் கனவதுவோ.!
நீட்டி நிமிர்ந்திருக்கா!
நீள் உடம்பு குனிந்திருக்க!
வாட்டி எடுக்குமவன்!
வேதனைதான் ஏதுவென!
மூட்டி நெருப்பதனை!
மூழவிடா அமைதியுடன்!
காட்டி என் நிலையை!
கச்சிதமாய் அமர்ந்திருந்தேன்.!
தந்திரங்கள் ஏதுமற்று!
தம் பாட்டில் வாழ்ந்தவர்கள்!
மந்திரங்கள் செய்தனரோ!
புகலிடுத்து வாழ் பெண்களுமோ!
இந்திரன் சபையினிலே !
நாள் நடக்கும் விழாக்களுக்கு!
தந்திடவே வேண்டுகிறார்!
புது நகையும் புடவைகளும்.!
வாங்கிக் கடன் நீண்டு!
வாசலிலே காத்திருக்க!
தாங்க முடியாதெண்ணி!
தாயிடமும் கேட்டுவிட!
வாங்கு வாங்கென்று!
வாங்கியதால் கவலைகொண்டு!
தாங்க வட்டிக்கென்று!
கேட்பதற்காய் வந்ததென்றார்.!
அன்றே பழநிக்கு!
ஆண்டியாய் வேல் கொண்டு!
சென்றே இருந்திருந்தால்!
சேதியிது நானறியேன்!
சாதுபோல் இருந்த என்னை!
சந்திக்கே வரவழைத்த!
போதுமப்பா நீபடைத்த!
பொன்னும் புடவைகளும்.!
த.சு.மணியம்
த.சு.மணியம்