விளைநிலம் ஒன்றில்!
ஒற்றை ஆடும் அதன் குட்டியும்!
மேய்ந்தபடி இருந்தன..!
கழுகு ஒன்று!
குட்டி ஆட்டினைப்!
பசி பொங்கும் விழிகளால் பார்த்தபடி!
வட்டமடித்து வந்தது..!
கீழிறங்கி!
இரையினைக் கவ்வும் நேரத்தில்!
இன்னொரு கழுகும்!
பசியோடு வந்து சேர்ந்தது..!
எதிரிகளின்!
ஆவேசப் போராட்டத்தின்!
கூக்குரல்!
வானமெங்கும் நிரம்பி வழிந்தது..!
ஆடு மேலே நிமிர்ந்து பார்த்து!
ஆச்சர்யப்பட்டுப் போனது..!
குட்டியிடம் சொன்னது,!
பார்த்தாயா குழந்தாய்..!
எத்தனை விநோதம் இது??!
இவ்விரு பெரிய பறவைகளுக்கும்!
விரிந்து பரந்த இந்த காயம்!
போதவில்லையோ??!
இப்படி ஒருவரை ஒருவர்!
தாக்கிக் கொள்கிறார்களே..!!!
சிறகு முளைத்த அந்த!
உன்னிரு சகோதரர்களுக்கிடையில்!
சமாதானம் ஏற்படட்டும் என்று!
இதயபூர்வமாய் நீ!
இறைவனை வேண்டிக் கொள்..!!!
குட்டியும் அவ்வாறே!
வேண்டிக் கொண்டது..!!!
-கலீல் கிப்ரான்
கலீல் கிப்ரான்