தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இத்தரை மீதினிலே

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
இத்தரை மீதினிலே எனை அன்னை!
இட்டதினாலே நான் பட்டது போதும்!
இதுவரை யென்றொரு சத்தமென்!
இத்யத்தில் பலமாய் எழுந்ததுவே!
முற்தரைதான் இவ்வாழ்க்கைப் பாதை!
முட்களை வைத்து பச்சைக்கம்பளம்!
மூடியவர் செய்தது ஓர் சதியென்றறிந்ததும்!
முழுதாய்ப் புலர்ந்தது உலகின் கோலம்!
கற்றவைய னைத்தும் ஓர் புத்தகமாய்!
கட்டியென் நெஞ்சத்தில் வைத்தவைக்கு!
கொடுத்தொரு பெயர் அனுபவம் என்றே!
கண்டது அவைதாம் மிச்சம் புவியினில்!
சித்திரைத் திங்கள் தோறும் ஒரு!
சித்திரத் தமிழ்ப்பாவை புதுவருடமென!
செழிப்புடன் குதிர்ந்து முன்வந்துமேனோ!
சீரான ஓர் மனநிலை ஏனில்லை ?!
முத்திரை போலே ஏழ்மை இவ்வுலகில்!
முழுதாய் தலைவிரித்தாடுகையில்!
முகத்தில் களிப்பில்லா மாந்தர்தனைக் கண்டு!
முத்தமிழ் துணையால் மனமிங்கு இயம்புது!
பத்தரை மாற்றுத் தங்கமென மிளிரும்!
பழுதற்ற தலைவர்கள் இல்லையெனும்!
பழுத்த அனுபவக் கூற்றிங்கு உண்மையென!
படித்து முடிக்கையில் வாழ்வும் முடியுதே!
முழுத்திரை போட்டு உண்மைகளை மறைக்கும்!
முகத்திதிரை போட்ட மனிதர்கள் மத்தியில்!
முட்டாள் எனப் பெயர் எடுத்ததும் இவ்வையகத்தில்!
மனத்தினை சிதைக்கும் வேதனைகள்!
புற்றினில் மறைந்துள்ள பாம்பினைப்போல!
புறத்தினில் குத்தும் உறவுகள் எத்தனை!
பெற்றவை அனைத்தும் விலையிலா அனுபவங்கள்!
பெற்றவள் அறிந்தால் துடித்திடுவாள்

சோகங்களின் விரல்கள்

கே.பாலமுருகன்
ஒவ்வொரு விரல்களும்!
சுரண்டும் பாணியே!
தனித்துவம்!!
இரண்டாம் விரல்!
உச்சந்தலையில் கிடக்க!
மூன்றாம் விரல்!
வாய்க்குள் நுழைந்து!
உயிரை அசைக்கிறது!!
உடல் முழுவதும்!
பரவிய விரல்கள்!
உயிரை அறுத்து!
துண்டாக்கியது!!
நான்காம் விரலின்!
அபூர்வம்!
இருதயத்தைப் பிளிந்து!
குருதியை உறிவது!!
ஐந்தாவது விரல்!
பிறப்புருப்பில் ஊடுருவி!
ண்மையைச் சேகரித்து!
அடிவயிற்றைத் துழாவுகிறது!!
நிமிர்த்த முடியாத!
தேகத்தை!
சோகத்தின் விரல்களிடம்!
பறிக்கொடுத்துவிட்டு!
மனம் பிதுங்கி!
எரியும் உடலுடன்!
மடிகிறேன்!!
சோகப் பொழுதுகளில்!
வெறொன்றும்!
தெரிவதில்லை!!
-கே.பாலமுருகன்!
மலேசியா

எப்போது காண்பேன்..?

சிலம்பூர் யுகா துபாய்
பூ வைப்பதை!
புறக்கணித்துவிடு!
கூந்தலுக்கு வலிக்கும்!!
உடைச்சுமை தாங்குமோ!
இந்த நுரைச்சிலை?!
இவையெல்லாம்!
நீயெழுதிய காதல்கடிதத்தின்!
ஞாபகப்பிரதிகள்.!
செல்லமே!
கண்ணே!
இதயமே!
இவையெல்லாம்!
காதலியாயிருந்தபோது.!
முண்டமே!
சனியனே!
நாயே!
இவை!
மனைவியானபின்பு!
அறிவுரை கூறியும்!
ஏற்றாய் அன்று!
ஆலோசனை கூறினாலும்,!
முறைக்கிறாய் இன்று.!
உன்னை காதலித்தபோது!
தாலியை நேசித்தேன்.!
உன் தாலியை சுமந்துகொண்டு!
இப்போது!
காதலை நேசிக்கிறேன்.!
தாலி கட்டினால்-காதல்!
தார்மீகம் இழந்துவிடுமாயென்ன?!
கரிசனம் எதிர்பார்க்கும்!
சமயத்திலும் கடுஞ்சொற்கள்!
அரவணைப்பு அவசியப்படும்!
நேரத்திலும் அவசரம்.!
எழுதியவனின்றி!
எவருக்குமே விளங்காத!
சில கவிதையின் உள்ளீடுமாதிரி!
உன் படைப்பும்.!
பிடிக்கவில்லை பிரியமானவனே!
இப்போதெல்லாம்!
உன்னையும்,!
வாழ்க்கையையும்.!
எப்போது காண்பேன்!
உன்னுள் தொலைத்த!
என் காதலனை?

காலம் எதிர்பார்த்த கலங்கரை

த.சரீஷ்
நினைப்பதில் பாதியும்!
கனவுகளின் மீதியும்!
உடைந்து உடைந்து!
கரைந்து கொண்டே இருக்கிறது!
முன்பனியில் கலந்து...!!
பனிமழைச் சாலையில்!
நனைந்த பாதங்களுடன்!
கரைந்த சுவடுகளுக்குப்பின்னே!
தொலைந்த....!
தடயங்களைத் தேடி!
நீயும் நானும்!
ஒவ்வொரு இரவிலும்!
ஒரு நடைபயணம்...!!
இன்னும்...!
கொஞ்சம் நடந்தால்!
அந்த மரத்தடி வரும்!
அதையும் தாண்டிச்செல்ல!
கால்நடைகளும்!
கௌதாரிகளும் கொண்ட!
ஒரு மழைக்காலப்புல்வெளி...!!
அந்த வெளிகடந்து!
தொடர்ந்து நட...!
கல்லறைகள் தாண்டி!
இன்னும் கொஞ்சத் தூரம்தான்!
அதோ....!
கண்களில் கலங்கரை...!
கறுப்பு யுகங்கள் பல கடந்தபின்பு...!!
கடலோரப் பாதைவழி!
சிறுதூரம் செல்ல!
தென்னஞ்சோலை!
அதையும்தாண்டி நட!
ஆட்காட்டிக்குருவி கத்த...!
அடர்ந்த காடுவரும்!
மரக்கிளைகளில் இருந்த!
குருவிகள் மனிதநடமாட்டம் கண்டு!
திடுக்கிட்டு... சிறகடிக்கும்...!!
அங்கே...!
சிதறிக்கிடக்கும்!
உடைந்த!
மண்பானைத்துண்டுகள்கலந்த!
மண்ணை அள்ளி!
கையில் எடுத்துப்பார்!
முடிந்த வாழ்வொன்றின்!
தடயங்கள் தெரியும்...!!
நிற்கும் இடத்திலிருந்து!
கொஞ்சம்...!
பின்னே திரும்பிப்பார்!
பாசியும் புழுதியுமாய்!
அசைக்கவே முடியாமல்!
இதுதான்...!
என் தாத்தாவுக்கு!
முந்தையரும்!
தாத்தாவும்!
அப்பாவும்!
நானும்!
வாழ்ந்த வீட்டின் அஸ்திவாரம்...!!
!
த.சரீஷ்!
15.02.2007 (பாரீஸ்)

நீதானா என்னை அழைத்தது ?

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
!
கண்மூடி சயனித்திருந்த வேளை!
கருத்தொடு கலந்திருந்த பொழுது!
கற்றாக மிதந்திருந்த நேரம்!
கண்ணே ... நீதானா என்னை அழைத்தது ...?!
இயற்கையின் வனப்புகள் தந்த!
இன்பத்தின் திளைப்புக்குள்!
இதயத்தைப் பறிகொடுத்து, என்னையே!
இழந்திருந்த வேளை ... கண்ணே ....!
நீதானா என்னை அழைத்தது .... ?!
சிந்தனை மாளிகையினுள்!
சில்லென்று தென்றல் அடிக்கும் போது!
சந்தடி எதுவுமின்றி இந்த உலகச்!
சச்சரவுகள் வேண்டாமென்றிருந்த போது!
சத்தமின்றி உள்ளே நுழைந்து ... பெண்ணே...!
நீதானா என்னை அழைத்தது .... ?!
சமனில்லா வாழ்க்கையிது என்!
சனமில்லா உலகத்தினுள் நான்!
சமவாழ்வு தனை கண்மூடி கண்டவேளை!
சலங்கையொலி கேட்காமலே... எழில் நிலவே ...!
நீதானா என்னை அழைத்தது ..... ?!
கற்றவர்கள் சொல்லுகின்ற!
கருணையற்ற வாழ்க்கைதன்னை!
கழித்துவிட்டெந்தன் அழகிய!
கனவுலக சம்ராஜ்ஜியத்தில்!
கலந்திருந்த அன்பெனும் ஆழிதனில்!
களவாக நீந்தி வந்து மங்கை நீயா ...!
நீதானா என்னை அழைத்தது ...!
உள்ளத்தைக் கிள்ளி என்னைக் காதல்!
வெள்ளத்தில் தள்ளி, ஆசையெனும் வானத்தில்!
வேகமாய் பறக்க விட்டு ஜயகோ.....!
வேஷம் போட்டு பின் ஏன்தான்!
வேண்டாத நிஜ உலகத்தின்!
வேதனையைப் பரிசளித்தாய்....!
நீயா .... நீதானா.... அது நீயேதானா

விடையற்ற வினாக்கள்??

மகேந்திரன்
மனம் திறக்கிறேன் - உறுத்தலுடன்!
என் மனதை ஊனமாக்கும்!
விளங்காத வினாக்களை!
விளக்கிக்கொள்ள மனம் திறக்கிறேன்!!!
ஆயிரம் ஆயிரம் வினாக்கள்!
அழகான விடைகள் தேடி!
கேணியில் ஊறும் நீராய்!
கொட்டிக் கிடக்கிறது!!
தினமும் நாளேடு படிக்கும்போது!
தகாத செய்திகளை காண்கையில்!
குற்றம் புரியும் இவர்களுக்கு!
பகுத்தறியும் தன்மை இல்லையா? - என்று!!
தவமிருந்து உயிர்கொடுத்து பெற்றெடுத்து!
தரணியில் தன்னிச்சையாய் செயல்படவைத்த - தாயை!
முதுமையில் காப்பகம் அனுப்புகையில்!
மனசாட்சி மரத்து விட்டதோ?? - என்று!!
ஓர் வயிற்றில் உருவான உயிர்கள்!
நிலையில்லா நிலத்திற்காய் நிதர்சனமின்றி!
சண்டையிடுகையில் - உன்னதமான!
உறவுகளுக்கு உயிர்மை இல்லையா??? - என்று!!
ஈட்டியது காணாமல் இன்றைய பொழுதை!
கொஞ்சமும் மிச்சமில்லாமல் விரட்டும் உழைப்பாளரை!
காண்கையில் - கண்மறைத்து வித்தைகாட்டும்!
கறுப்புப் பணங்களை மீட்ட வழியில்லையா?? - என்று!!
ஊனுருக்கி உயிர்கொடுத்து ஓய்வில்லாமால்!
உழைத்து சேர்த்த பொருளுக்கு - கட்டிய வரியை!
கூச்சமின்றி கூட்டத்தோடு கொள்ளையடிக்கும்!
ஊழலுக்கு மரணம் ஏகுமா?? - என்று!!
பிறரின் உணர்வுகளை மதியாமல் - அவரின்!
தன்னிலை தெரியாமல் சுயநலம் போற்றி!
புற்றீசலாய் பெருகியிருக்கும்!
கையூட்டிற்கு காலன் இல்லையோ?? - என்று!!
இச்சமுதாயம் நமக்காகவா? - இல்லை!
நாம் இந்த சமுதாயத்துக்காகவா?!
விடையற்ற வினாக்களுக்கு!
விடை கிடைப்பதெப்போது???

இருப்பு

திருமாவளவன்
சிறு தொட்டி !
சுவர் நான்கும் கண்ணாடி !
நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர் !
நீரிடை மிதக்கும் செயர்க்கைத் தாவரங்கள் !
மட்டுப்படுத்தப்பட்ட மின் வெளிச்சம் !
மின் சூடாக்கியின் கணகணப்பு !
பதனிட்டு தயார்செய்யப்பட்ட உணவு !
நேரம்தவறாத உபசரிப்பு !
சொகுசு சிறைக்குள்ளிருந்து !
தன் வாழ்வின் துயரைப் பாடுகிறது !
மீன்குஞ்சு !
!
பின்பனிக்காலம் 2001. !
!
பனியில் கூத்து !
மயான வெளி !
பனி விரித்த பாயில் !
துயில்கிறது !
பௌர்ணமி நாளின் முன்னிரவு !
மயானத்தின் பின்புறம் !
கீழ் வானத் தொடுவிழும்பில் !
கடல் கொணர்ந்து எறிந்துவிட்டுப் போன !
பிணம் !
உடல் உப்பிப் பருத்து !
எற்றுண்டு கிடக்கிறது !
நிலவென்ற பெயரில் !
நிலாப்பிணத்திருந்து !
சதை அழுகி வழியத் தொடங்குகிறது !
நல்ல பால் போல !
ஊன் !
கண்களை மூடித் திறக்கிறேன் !
இலை சொரிந்து நிமிர்ந்த மரங்கள் !
எலும்புக்கூடுகளாக !
பிணத்தின் மீது கெலியுற்று !
கைகளை உயர்த்தி அசைத்து !
அங்கலாய்த்து !
பிணத்தின் ஊனை அழைந்து !
அள்ளிப் பருகப்பருக !
உச்சம் கொள்கிறது போதை !
காற்று மெல்லெழுந்து !
குழலெடுத்தொலிக்கிறது !
தொடங்கிற்று !
எலும்புக்கூடுகளின் கூத்து !
ஊழியோவென ஐயுறு வண்ணம் !
உக்கிர தாண்டவம் !
அன்று மின்கம்பத்தில் !
உயிரைப் பறிகொடுத்தது பறித்தது !
இரண்டும் கட்டிப்பிடித்து களிகொண்டாடுகிறது !
வல்லுறவில் மாண்டது வல்லுறவு !
செய்தவன் கன்னத்தில் மாறிமாறி முத்தமிடுகிறது !
கூத்தின் உச்சத்தில் !
போதையேறிய !
சின்னஞ் சிறிய பாலன் கூடுகள் !
அறியாப் பருவத்தில் வீழத்தப்பட்டோமெனக் !
கண்ணீர் வடிக்கின்றது !
வெள்ளி முழைக்க மெல்ல இறங்குகிறது !
பனித்திரை !
காலையிலே !
வானத்தின் மறுபுறத்து மூலையிலே !
எலும்புக் கூடாய் கிடக்கிறது !
நிலவு !
முன்பனிக் காலம்-2001 !
போர்க்காலக் கனவு !
!
அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த !
நீண்ட இரவுகள் !
இரவெல்லாம் கனவு !
கனவில் இராஜ நகரியின் !
நெடுமுடிக் கோபுரமிரண்டும் நொருங்கிப் பொடிபட !
நீறு கவிந்த சிதை நடு நின்று !
விரிசடை சிலுப்பி !
நெடுந்தாள் பரப்பி !
போர்த்தினவெடுத்த அரசனின் சன்னதம் !
வரன் யார்? எவன் அசுரன்? !
என்பதறியா முப்பத்து முந்நு}றுகோடி தேவரும் !
பூதகணங்களும் நடுங்க !
உச்சங் கொள்கிறது !
உருத்திரனின் ரௌத்ரத் தாண்டவம் !
நெற்றிக்கண்ணிருந்து நிரவித் ததும்பும் !
எரிமலைக் குளம்பு !
தீயின் நாவும் !
சதை பொசுங்க எழும் நாற்றமும் வீசும் இடிபாடுகளிடையே !
குருதி வழியத் தனித்திருக்கிறேன் !
வானை நிறைத்து மொய்க்கிறது !
ராஜாளிப் பறவைகள் !
சவக்களை படிந்த முகத்துடன் !
தன் சவக்குழியை தோண்டுகிறான் !
அந்திச் சூரியன் !
தொலைவிலிருந்து சிறுகீற்றாய் தொடங்கி !
வியாபித்து !
மிகநெருங்கி விரிகிறது !
சுடலைக் குருவியின் துயரப்பாடல் !
அத்துயரில் இணைகிறது !
எனது குரல் !
!
இலையுர்காலம் 2001

புத்த ஜோதி

ஷீ-நிசி
பச்சைக் கிளியொன்று!
மிச்ச சிறகுகளோடு!
வெளியில் வந்து..!
அடுக்கிவைத்த!
கட்டுகளைச் சுற்றி உலாவி,!
கலைத்துபோட்ட!
சீட்டுகளுக்குள்ளே துலாவி,!
ஆறரிவு உயிரொன்றின்!
எதிர்காலத்தை,!
ஐந்தறிவு உயிரொன்று!
தேடிக் கண்டெடுத்தது.!
சொன்ன சொல் கேட்டால்,!
தின்ன நெல் தருபவனிடம்!
கொடுத்துவிட்டு,!
மீண்டும் திரும்பியது!
கூண்டுக்குள்ளேயே!!!
போதிமரத்தின் கீழே,!
புத்தனமர்ந்தான்!!
ஞானியாகினான்...!
மீதி மரத்தின் கீழெல்லாம்!
இவனமர்ந்தான்.....!
??????!
ஷீ-நிசி

விடையற்ற வியப்புக் குறிகள்

ராமலக்ஷ்மி
'உன் வயிற்றில்!
உதித்த நான்-!
உத்தமனாய் வாழ்ந்து காட்டி-!
உன் பெயரை!
ஊர் உலகம்-!
உயர்வாகப் போற்றிடச்!
செய்வேனம்மா!'!
**!
மரித்திட்ட!
தன் தாய்க்கு-!
தந்திட்ட வாக்குதனை-!
வேதமெனக் கொண்டு;!
வேலை தேடி-!
வீதி வழி நடந்தானே!!
**!
நெஞ்செல்லாம்!
இலட்சியக் கனவோடு-!
அஞ்சாது செய்திட்ட!
சத்தியத்தின் நினைவோடு-!
சென்றவனின்!
கண்ணிலே பட்டவன்தான்-!
பிக்பாக்கெட் தொழிலினிலே!
பிரபலக்கேடி!!
**!
விழிமுன்னே மற்றவரின்!
பர்சு ஒன்று-!
பரிதாபமாய்!
பறி போவதைப்!
பார்த்திட்ட அவனுமே;!
'எவன் சொத்தோ போகுதடா!
எனக்கென்ன கவலையடா?'!
என்று-!
இன்று இப்!
புனிதப்!
பூமியிலே-!
போற்றிக் காக்கப்படும்!
பொன்னான கொள்கை-!
புரியாதவனாய்-!
பாய்ந்தோடிக்!
கேடியினைப் பிடித்தானே!!
**!
கேடியெனும்!
பட்டமெல்லாம் சும்மாவா ?!
கில்லாடியான அவன்-!
கிட்டத்தில் ஓடிவந்த!
காவலரின்!
கரத்தினையே-!
தேடிப் பற்றி!
சம்திங் தந்தானே!!
**!
நீதி!
காக்க வேண்டிய!
காவலரோ-!
கரன்சி செய்த வேலையினால்-!
கமுக்கமாகச் சிரித்தபடி-!
கயவனவன் முதுகினிலே-!
'செல் 'லுமாறு!
செல்லமாகத்!
தட்டி விட்டு;!
அப்பாவியான இவன்!
கழுத்தினிலே கை போட்டு-!
'அட!
நடடா, இது புது கேசு '!
என்றாரே!!
****!
மலர வேண்டிய பருவத்திலே!
மடிய நேரும்!
மொட்டுக்கள்!!!!
**!
கலர் கலராய்!
கண்ட கனவுகள்!
கருகிப் போகும்!
சோகங்கள்!!!!
**!
பழி ஓரிடம்!
பாவம் ஓரிடம்-!
பரிதாபப் பட!
யாருமின்றி!
பரிதவிக்கும்!
பலியாடுகள்!!!!
**!
'அவரவர் விதி'யென்றும்!
'அவன் தலைச் சுழி'யென்றும்-!
ஆராய அவகாசமின்றி!
அவசர கதியில்!
அள்ளித் தெளிக்கப் படும்!
ஆழமற்ற!
அனுதாபங்கள்!!!!
**!
ஆங்கோர் பக்கம்-!
சி.பி.ஐ!
ஆதாரங்களுடன்!
கைதாகும்!
கனவான்கள்-!
சில மணியில்-!
சிரித்தபடி!
சிறை விட்டு!
விடுதலையாகி!
வெளியேறும்!
விநோதங்கள்!!!!
**!
அவருக்காக!
குரல் கொடுத்துக்!
கவலைப் படக்!
கணக்கற்றக்!
கூட்டங்கள்!!!!
**!
இப்படி!
ஏராளமாய்!
இருக்கின்றன-!
விடையற்ற!
வியப்புக் குறிகள்!!!!

அன்பின் தாழ்

இரவி கோகுலநாதன்
சுட்டெறிக்கும்!
சூரியனையே!
சுட்டெறித்தது - அந்த!
று மணிநேர !
அக்னி விவாதம்!
அவை நடுவே...!!
நீயும் நானுமாகிய !
செம்புலப்பெயல் நீர்!
அன்பும் அறனுமாக!
நீதிமன்றத்தின் !
கூண்டுகளில்...!!
சபை நடுவே !
அன்பின் தாழ்திறந்த!
அற்புத நேரங்கள்...!
சிலகேள்விகளுக்கு நீயும் !
பல கேள்விகளுக்கு நானும்!
உள்ளும் புறமும்!
அழுத தருணங்கள்...!!
அப்போது தான் !
புரிந்தது...!
“நாம்” என்பதை மறந்து!
நீயும் நானுமாகி நின்று !
அன்பின் தாழை !
அடைத்துவிட்டோம் என்று...!!
வள்ளுவம் பொய்த்ததும்!
வாழ்வியல் பொய்த்ததும்!
அன்பின் தாழ்!
அடைபட்டதாலா?!
- இரவி கோகுலநாதன்