தொலைவானில்.. மின்னல்களில் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Tengyart on Unsplash

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை.. மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்!
01.!
தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை !
----------------------------------------------!
வளைதலும்!
வளைந்து கொடுத்தலுமான!
நாணல்களின் துயர்களை!
நதிகள் ஒருபோதும்!
கண்டுகொள்வதில்லை !
கூடு திரும்பும் ஆவல்!
தன் காலூன்றிப் பறந்த!
மலையளவு மிகைத்திருக்கிறது!
நாடோடிப் பறவைக்கு !
அது நதி நீரை நோக்கும் கணம்!
காண நேரிடலாம்!
நாணல்களின் துயரையும் !
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து!
தான் கண்டுவந்த!
இரயில்பாதையோர நாணல்களின் துயர்!
இதைவிட அதிகமென!
அது சொல்லும் ஆறுதல்களை!
நாணல்களோடு நதியும் கேட்கும்!
பின் வழமைபோலவே!
சலசலத்தோடும் !
எல்லாத்துயர்களையும்!
சேகரித்த பறவை!
தன் துயரிறக்கிவர!
தொலைவானம் ஏகும்!
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்!
கண்டுவரக் கூடும் !
02.!
மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள் !
------------------------------------------!
இருப்புக்கருகே!
மூர்க்கத்தனத்தோடு!
பெரும் நதி நகரும்!
ஓசையைக் கொண்டுவருகிறது!
கூரையோடுகளில் பெய்யும்!
ஒவ்வோர் அடர்மழையும் !
வீரியமிக்க!
மின்னலடிக்கும்போதெல்லாம்!
திரள்முகில் வானில்!
இராநிலாத் தேடி யன்னலின்!
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்!
பிஞ்சு விரல்களை அழுது கதற!
விடுவித்துக் கொண்டோடுகிறாள்!
குழந்தையின் தாய் !
தொடர்ந்து விழும் இடி!
ஏதோ ஒரு!
நெடிய மரத்தை எரித்து அணைய!
நீயோ!
இடி மின்னலை விடவும் கொடிய!
காதலைப் பற்றியிருந்தாய்!
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்!
கருணை மிகுந்த ஓர் கரம்
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.