தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என் இரண்டாவது தாய்

இராமசாமி ரமேஷ்
என்னை வளர்த்தவர்களில்....!
இவள் என் இரண்டாவது தாய்!
நான் பள்ளிக்கு!
போகவேண்டும் என்பதற்காய்!
இவள்!
தன் பல்கலையை துறந்தவள்...!
தன் வியர்வை சிந்தி!
என் வாழ்வை!
விடிய வைத்தவள்!
அம்மா அடித்தாலும்!
அப்பா திட்டினாலும்!
அவர்களை ஏசிவிட்டு!
எனக்காக!
அத்தனைபேரிடமும்!
சண்டைபோட்டு!
எனக்கான தோழியாய் இருப்பவள்...!
எத்தனையோ!
எனக்குச் செய்து அக்காவே...!
நீ!
போரிலே இழந்துபோன!
தாரத்தை மட்டுமாவது!
மீட்டுத்தர என்னால் முடியவில்லையே

எழுத்தில் என் மனம்

கோட்டை “பிரபு
எழுத எத்தனிக்கிறேன்!
எதையெல்லாமோ எழுத நினைக்கிறேன்!
எழுதுகோல் எனது கரத்தில் இருக்கும் வேளை!
எந்தச் சொல்லும்!
என் எண்ணத்திலில்லை!!
முயற்சிக்க முயல்கிறேன்..!
என் மன வேகம்!
எங்கோ தொடங்கி!
எங்கெல்லாமோ விரவி!
எதிர்திசையில் திரும்பும் வேளை!
எவ்வளவோ து£ரம் கடந்து வந்த பிரமை!
எதிர்ப்பட கடக்க முயன்றும் பயனில்லை.!
வந்த திக்கில் தொடரலாம் எனும் போது!
நகர மறுக்கும் மனம்!
அவ்விடத்தை இறிய!
அங்கும் இங்குமென விழிகள் திரும்பும்!
அதில் ஒரு மிரட்சி!!
சுற்றிலும் கருப்பு வெளிச்சம்!!!
தொலைவில் புள்ளியாய் ஒளிக்கற்றை!
தானாக அடிபோடுகின்றன கால்கள்!
நடையின் இறுதிக்கட்டம்!
இடைவெளியின் இடைவெளி குறைய குறைய!
நடுங்கும் கால்கள் நடையைத் தளர்த்த!
முழுவதுமாய் மூழ்குகிறேன்!
ஒளியினூடே ஒளியாய் நானும் அங்கே!!
மீண்டு மீண்டும்!
எழுத எத்தனின்கிறேன்!!!
--எண்ணம்: கோட்டை பிரபு

மழை

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
எஸ். ஏ. ஹப்பார் !
மழையின் முதற்துளி !
மண்ணில் விழுமுன் !
முதற்சென்று நிற்பாளென் !
மூத்த மகள். !
காலில் செருப்பிருக்காது !
கையில் குடையிருக்காது !
தலையில் தொப்பியிருக்காது !
தரையில் காலுமிருக்காது. !
மழைதான் அவளுக்கு நண்பன் !
மழைதான் அவளுக்கு உணவு !
மழைதான் அவளுக்கு உறக்கம் !
மழைதான் அவளுக்கு எல்லாம். !
தொப்பாகி நிற்பாள் !
தோணிவிட தொடர்மழையில் !
மிஞ்சாது அந்நாளில் !
மின்சாரப் பட்டியலும் !
தொலைந்து விடும் !
தொலைபேசிப் பட்டியலும். !
புத்தகத்தின் நடுப்பக்க மெல்லாம் !
புதிய மழைக்குச் சொந்தம் !
கதிகலங்கி நிற்பாள் என்மனைவி !
கட்டுப்பாடு பெண்ணுக்கு வேண்டுமென்று. !
என் பிள்ளைப்பருவம் எண்ணிப்பார்ப்பேன் !
பின் நானும் நின்றுரசிப்பேன் !
பிள்ளை வளர்க்கத் தெரியாதென்பாள் !
பின் அவளும் வந்துரசிப்பாள். !
எண்ணிப் பார்த்தது !
நான் மட்டுமல்ல !
என் மனைவியும் தான்

அலாரம் அலற..அன்னைத்தமிழ்..வானூர்வலம்

சத்தி சக்திதாசன்
அலாரம் அலற விழித்தன விழிகள்!
01.!
அலாரம் அலற விழித்தன விழிகள்!
--------------------------------------------!
இரவெனும் நதியிலேகி வண்ணக்!
கனவெனும் படகிலேறி வானில்!
மிதந்து சென்ற உணர்வினையேந்தி!
வியந்து நின்ற வகையிங்கு பகர!
சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்!
சொன்ன பல சுவையான கதைகள்!
வண்ண முழு நிலவது தானும்!
மெல்லத் தேயும் விந்தை விளக்க!
தவழ்ந்து மெல்ல நகரும் வெண்முகில்!
கனத்த பொழுதொன்றில் தானும்!
கறுத்துக் கார்மேகமாய் பொழியும்!
கனத்த மழையின் காரணம் சொல்ல!
அனைத்தும் கலைந்து மறைந்து போக!
ஆதவன் கதிர்களை ஒளியாய்ப் பொழியும்!
வேளை வந்தது என்றே அருகிருந்த!
அலாரம் அலற விழித்தன விழிகள்!
!
02.!
அன்னைத்தமிழ் தந்த அன்புமிகு ஆசியென உணர்ந்திடுவேன்!
--------------------------------------------------------------------------------------!
பாடிடுவேன் என் தாய்த் திரு தமிழ்தன்னை!
பாமாலை சூட்டிப் பாடிடுவேன்!
சூடிடுவேன் அன்னைத் தமிழ் தந்த மொழியை!
சுந்தரமாய் என் நெஞ்சில் சூடிடுவேன்!
போற்றிடுவேன் கண்ணென அவள் தன்!
பண் செய்த பொன் மைந்தர்களை போற்றிடுவேன்!
கற்றிடுவேன் ஓய்வின்றி அன்னைத் தமிழை!
கற்கக் கசடறக் கற்றிடுவேன்!
மீட்டிடுவேன் சிந்தையெனும் யாழெடுத்து அதில்!
சிந்தும் பல கவி புனைந்து மீட்டிடுவேன்!
சாற்றிடுவேன் புகழ்மாலை என் சோதர சோதரியருக்கு!
அவர் தமிழ் பாடுகையில் புகழ்மாலை சாற்றிடுவேன்!
பீற்றிடுவேன் என் அன்னைத் தமிழின் பெருமைதனை!
வாழ்விருக்கும் நாள்வரை ஓயாமல் பீற்றிடுவேன்!
யாத்திடுவேன் அவள் புகழ் கூறும் பாமலை ஒராயிரம்!
சளைக்காது இன்மொழி கூட்டி யாத்திடுவேன்!
சேர்த்திடுவேன் அரிய பல தமிழ் நூல்களை!
பேறாக எண்ணிப் பெரும் செல்வமென சேர்த்திடுவேன்!
உணர்ந்திடுவேன் இவையெல்லாம் என் திறமையல்ல!
அன்னைத்தமிழ் தந்த அன்புமிகு ஆசியென உணர்ந்திடுவேன்!
!
03.!
வானூர்வலம் போகும்!
-------------------------------------!
அந்த நிலவழகா ?!
இல்லை!
வண்ணத்தேர் போல!
ஊர்கோலம் போகும்!
இந்தச் சிலையழகா ?!
இருளென்னும்!
மேடையிலே விரித்த!
நீலவானத் திரையினில்!
கண்சிமிட்டி விளையாடும்!
விண்மீன்கள் அழகா ?!
இல்லை!
ஓர்கணப் பார்வையில்!
மெல்லத் தன் இமைமூடி!
செவ்விதழ் ஓரங்கள்!
மெல்லென விரியப்!
புன்னகை பூத்தே செல்லும்!
பூவையிவள் அழகா ?!
இளம் மாலைப் பொழுதில்!
செந்நிறக் கோலத்தில்!
அகிலத்தின் அந்தத்துள்!
ஆதவன் தனை மறைக்கும்!
அக்காட்சி அழகா ?!
இல்லை!
பார்வையோடுடு பார்வை!
மோதியதால் நாணிக் கன்னம்!
சிவக்கச் சிரிக்கும்!
அச்சிங்காரக் காட்சி அழகா ?!
வியந்தேன் ! வியந்தேன் !!
நான் காணும்!
இயற்கையின் காட்சியோடு!
போட்டி போடும் இந்த!
இலக்கியக் காதலைக் கண்டு!
இரண்டையும் படைத்தது!
இயற்கையோ ?

ரயில் பயணம்

அ. செய்தாலி
தூங்கி எழுந்த!
ஒரு இரவிற்கு பின்!
கண்களில் காட்சிகள்!
மாறியிருந்த்தது!
சுற்றி பேசுபவர்களின் !
பாஷை செவியடைத்தது!
மரமும் செடிகளும்!
பின்னோக்கி ஓடியது!
ஒரு பேரிரைச்சல்!
இடவழியிட்டு!
பயமுறுத்தியது!
சிலர் என்னோக்கி!
செய்கையால் அழைத்தார்கள்!
விசித்திர முகங்கள் !
இருப்பிட அசைவுகள்!
அம்மாவின் மடியிலிருந்த்தும்!
வெம்பி.. வெம்பி ...!
அழுகை வந்தது

மழிக்கப்பட்ட மீசைகள்

முஷாரப் முதுநபீன்
அது நிகழ்ந்த விடக் கூடாதென!
அங்கிருந்த எல்லோருமே விரும்புகிறார்கள்!
மாபெரும் துயரம்!
கவிந்து கொள்ளும் நிலை குறித்து!
யாருக்குத்தான் விருப்பம் இருக்கும்!
துப்பாக்கி, குண்டு வீச்சின்!
ஓசைகளை விஞ்சுமாற் போலமைந்த!
காவிகளின் கை விசிறிகள் திகைப்பையே தருகின்றன.!
கூடவே பயத்தையும்!
தன் முகத்தின் அடையாளம் கூட!
மற்றையவருக்குத் தொந்தரவாகக் கூடாது என்று!
கறுப்புத் துணியால் முகத்திற்குத் திரையிட்ட பெண்கள்!
நினைத்துக் கூட பார்க்கவில்லை!
அக் கறுப்புத் துணியே !
பலருக்கம் உறுத்தலாக அமையுமென்று.!
வன்முறையின் விலை!
அடையாளங்களின் முதுகில் தான் குத்தப்படுகிறது.!
கறுப்புத் துணிகளை கழற்றிவிடத்!
துடிக்கும் காவித்துணிகளை எப்படியேனும் தடுத்தாக வேண்டும்.!
அறையைச் சூழ !
காவல் நிற்கும் ஆண்கள் ஆறுதல்தான்.!
இருந்தும்??!
எல்லோரும் அரசுக்கு !
விரலில் மை பதித்து வாக்களித்த பின்!
வாக்குச் சீட்டைத்தான் பெட்டியில் போட்டார்கள்!
காவல் நிற்கும் நம் ஆண்களோ!
மையோடு சேர்த்து கைகளையுமல்லவா!
போட்டுவிட்டார்கள்.!
கைகளற்ற ஆண்களால்!
என்னதான் செய்ய முடியும்?!
வாய் குறித்து எதுவும் பேசுவதற்கில்லை.!
சமூகத்தின் புதைகுழி மேல் நின்று கொண்டு!
கைகட்டித் தலை குணிந்து!
'குனூத்' ஓத !
அனுமதி கோரும் அஹிம்ஷை வாய்கள் அவை.!
கறுப்புத் துணிகளின் !
கவலைகளும், பயமும் நிரந்தரமாகிடுமோ?!
மார்க்கமே!!
எம் ஆண்களுக்கு !
தாடி வளர்க்கப் பணித்த நீ !
ஏன் மீசை வளர்க்கப் பணிக்கவில்லை?!
!
குறிப்பு: இலங்கை முஸ்லிம் தலைவர்களைப்பற்றியது

ஒற்றைத் திறப்பு

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
ஓய்வெடுக்க கெஞ்சும் பாதத்துண்டு!
விரிவுரைக்கு செவி விற்ற !
முழுநாட் களைப்பு!
கணவரின் வேளைத்தளம் என் பல்கலைக்கழகம்!
அரை மணி இடைவெளி..!
மீண்டும் வீட்டுக்கு இன்னொரு மணித்தூரம்!
வீடு வாடகையானாலும் நம் வீடாயிற்றே!
கொஞ்சம் ஓய்வெடுக்க…!
குளிக்க…..!
ஈரத்தலை சுற்றிய துண்டுடன் ‘காட்டில் ஒரு மான்” வாசிக்க!
சின்னச்சின்னதாய் இடியப்பம் இடித்த சம்பல் சாப்பிட!
செளகரியமாய் உடை மாற்ற!
வீடு தான் தோது.!
அலுங்கிக் கசங்கிய உடையாய் !
தேநீர் கோப்பைப் பின்னணியில் !
மிருதுவான உரையாடல் கனவோடு !
வலிக்கால்கள்!
வீடு வரை கொண்டு சேர்த்தன.!
வாசல் வந்த பின் …!
திறப்பு???!
ஆயிரம் மைல் தொலைவில்!
அலிபாபாக் குகையி்ல்!
பத்திரமாய் கிடந்தது.!
அரக்கப் பறக்க!
அலுவலக நண்பருக்கு அழைப்பு!
அடுத்த பஸ்ஸில் அனுப்பி வைப்பதாய்!
ஒரு மணி நேரம் இரண்டாக!
ஓரிடத்தில் முளைத்துக் கிடந்தோம்.!
தாமதமாய் மேல் வீட்டு ஞாபகம்!
உதிக்க !
எப்போதும் திறக்காத கதவொன்றால்!
ஒட்டடை அலங்காரத்தோடு!
உட் பிரவேசம்!
அப்போது பார்த்து,!
நாற்சக்கர வண்டி, திறப்புடன்!
நம்மூர் தாண்ட !
இரு சக்கர வண்டி!
இப்போது இப்போது என!
இரு மணித்தூரம் கடக்க!
விலைமதிப்பில்லா திறப்பு!
மீண்டும் சாவித்துவாரம்!
கண்டது,!
அப்பாடா?!
இன்னொரு திறப்பு வெட்டல்!
நாளைக்கு நாம் செய்யும் முதல் வேலை !
மாதங்களும் தொலைந்தழிந்தேகின,!
திறப்பு இன்னும்!
ஒற்றையாகவே இருக்கிறது.!

உழவர் மகன் 2

அருண்மொழி தேவன்
பன்னிரெண்டாம் வகுப்பில்!
இர‌ண்டாவ‌து முறையாக‌!
தவறியவுடன்!
என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு!
என்றார் பெரியப்பா!
நிலத்தை விற்று!
வெளிநாட்டுக்கு அனுப்பலாம்!
என்றார் மாமா!
பக்கத்து நகரில்!
பெட்டிக்கடை வைத்துக்கொள்!
என்றார் அப்பா!
கடைசிவரை!
யாருமே சொல்லவில்லை!
விவசாயம் பார் என்று

கைமண்.. கல்லடியாய்.. வேறுபாடற்றது

செண்பக ஜெகதீசன்
கைமண் அளவாய்… கல்லடியாய்… வேறுபாடற்றது…!
01.!
கைமண் அளவாய்…!
------------------------------!
!
கற்றது!
கைமண்ணளவு என்றார்கள்,!
அதனால்தான் அவள்!
படிப்பைப்!
பாதியில் நிறுத்திவிட்டு!
படி ஏறுகிறாளோ-!
சித்தாளாக…!!
02. !
கல்லடியாய்…!
-----------------------!
கல்லடிபடும் என்பார்கள்!
காய்த்த மரம் என்றாலே,!
இங்கே!
காய்க்காத மரம் ஏனோ!
கல்லடிபடுகிறதே…!
மரத்தின் குற்றமல்ல இது,!
மரத்துவிட்ட!
மனித மனத்தின்!
மாறாட்டம்தான் இது…!!
03.!
வேறுபாடற்றது…!
-------------------------!
ஏட்டப்பனின் தாயும்!
கட்டபொம்மனின் தாயும்!
காட்டிய அன்பினில்!
கட்டாயம் இருக்காது,!
கடுகளவு வேறுபாடு…!!
!
-செண்பக ஜெகதீசன்…

அகதி அந்தஸ்து

ரவி (சுவிஸ்)
அவன் கூரைமீது ஏறி நிற்கிறான்!
அச்சத்தின் ஒரு முளைப்பாய்.!
குளிர் குலைத்த அதிகாலைப் பொழுது!
இரவு உடையில் அந்த குர்திஸ்காரன்.!
கூடாய்த் தொங்கியது எமது!
அகதிகள் முகாம்.!
சுற்றிவர பொலிசார்!
மோப்ப நாய்கள்!
அதிகாலை நான்கு மணிய!
தூக்கப் பொழுதின் கிழிசல்களை!
அரவமற்றுக் கடந்து!
கைதுசெய்யும் தந்திரத்தில் தோற்றவர்கள்,!
இப்போ சுற்றிவர நின்றனர்.!
அவன் இறங்குவதாயில்லை.!
மெல்லத் தாவி ஏறுகிறான் தயைகூர்த்து!
மொழிபெயர்ப்பாளன்,!
கையசைத்துக் கையசைத்து.!
~~தம்பி குதிச்சிடாதை! அவங்கள் உன்னை!
நாட்டுக்கு திருப்பி அனுப்ப மாட்டம் என்ற!
உறுதிமொழி சொல்லுறாங்கள்.!
குதிச்சிடாதையும்... மெல்ல கீழை இறங்கி வாரும்.||!
நிராகரிக்கப்பட்ட அரசியல் தஞ்ச விண்ணப்பம்!
அவன் அறையில் தூங்குதல் கூடும்.!
அவன் தூக்கமற்று குளிருற்றான் கூரையில்.!
வானம் இப்போதும்!
தொலைது£ரத்தில்தான்.!
என்ன நடக்கப் போகிறது!!
அண்ணார்ந்தலை விடவேயில்லை நாம்!
வாயைத் திறந்தபடி.!
அவன் போராடினான்!
பொலிசார் மெல்ல நமட்டாய் சிரிப்பதும்!
இரகசியப்படுவதும்!
நிச்சயமற்ற மனிதர்களுக்கு அச்சம் தந்தன.!
எனது மனசில் அவன் உதைத்து நின்றான்!
நேற்றுக் காலைதான் வீட்டுக்கு போட்டோ அனுப்பியிருந்தேன்,!
பனித்திரளுக்குள் புதைந்து நின்று.!
முகத்தில் வரவழைத்த சிரிப்பு,!
கையில் பனித்திரள் ஏந்தல்.!
மனசுக்குள் அவன் சிறகடித்து சிறகடித்து!
மோதி விழுகின்றான்.!
கீறல்களால் அகதி அகதி என!
பிராண்டுகிறான்...!
பிராண்டினான்.!
இந்த இருபது வருடங்கள்!
ஒரு கீறலைத்தன்னும் அழித்து!
ஊதுவதில்!
தோற்றுத்தான் போயின!!
- ரவி (20072006)