தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது

தீபச்செல்வன்
குழந்தைகள் பூக்களை நிரப்பி!
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்!
தெயவம் என்ற பக்தியோடு!
உன்மீது!
சனங்கள் பாடி ஏற்றுகிறார்கள்!
குருதி பிறண்ட!
கமராவோடு இருக்கிறது உனது அறை.!
!
சனங்கள் சனங்கள் பாடிய!
எனது அன்புத்தோழனே!
ஒரு நாள் நான் வருவேன்!
சனங்களின்!
கனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.!
சனங்களின் ஏக்கங்களை!
அள்ளி நிரப்பி வரும்!
உனது கமரா!
களத்தில் தோளிலிருந்து!
உதிர்ந்து விழுந்ததை!
நான் நம்பாமலிருக்கிறேன்.!
சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்!
ஒரு துப்பாக்கியோடும்!
உனதான கமராவோடும்!
நீ சமராடிய நிமிடங்களை!
நான் நினைத்துப் பார்க்கிறேன்.!
நஞ்சு நிரப்பிய!
உனது சயனைட் குப்பியில்!
பதுங்குகுழிச்சனங்களின்!
கண்ணீரையும் கோபத்தையும்கூட!
நிரப்பிவைத்திருந்தாய்!
அது உனது கழுத்தில் தொங்கியபடியிருந்தது.!
உனது ஒரு சூரியனின் முகத்தையும்!
குழந்தையாய்!
நெருங்கி வருகிற முகத்தையும்!
உனது அறையில் நிரம்பியிருந்த!
நமது வார்த்தைகளையும்!
நான் எந்த களமுனையில் தேடுவேன்.!
சீருடைகயையும்!
துப்பாக்கியையும்!
கமராவையும் இவைகளுடனான!
உனது கடமையையும்!
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்!
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்!
அழுது கிடக்கிறது.!
நீ களப்பலியானாய்!
என்ற செய்தியை சொல்லிவிட்டு!
ஒரு பறவை துடிக்கிறது!
கனவில் நிரம்பிவிட்ட!
கல்லறைகளில்!
நான் உன்னை தேடியலைகிறேன்.!
உனது கமராவிற்குள்!
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது!
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை.!
!
-தீபச்செல்வன்!
!
--------------------------------------------------------!
மன்னார் களமுனையில் 14 கார்த்திகை 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது!
அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்

மண் வாச(க)ம்

இப்னு ஹம்துன்
இப்னு ஹம்துன் !
* !
காலங் காலமாய் அது- !
காதலைப் போலிருக்கிறது. !
ஆதாரமாக! !
!
சோற்றில் மண்ணைப் போடுபவனும் !
சில பொழுது !
மனம் திறப்பதுண்டு: !
மண் தான் சோறு போடுகிறது. !
!
நிறையவே இருக்கின்றன !
நறுமணத் திரவியங்கள். !
மனம் பூசிக்கொள்வதோ !
மண் வாசனையைத் தான். !
!
மலர்ப்புன்னகை மர்மத்துடன் !
மரம் !
மவுனமாய் தலையாட்டிநிற்க.. !
மனிதன் சொல்லிக்கொள்கிறான் !
'மண்ணின் மைந்தன் நான்!' !
!
இருந்தும்........ !
!
'மண்ணாய்ப் போ...'வதை !
வசவாகத் தான் !
வைத்திருக்கிறான்

கனவு சுமந்த கூடு !

ஆ.மணவழகன்
கடைக்கால் எடுக்கையில்!
ஒதுக்கிவிட்ட வேப்பங்கன்று!
தளிர் விரித்து!
கிளை தாங்கி!
நிழல் பரப்பி!
கூடு சுமக்கும் மரமாய்!
கனவு இல்லமோ!
இன்னும்!
கடைக்காலாய் !

தமிழ்மகள் குடிபுகுந்தாள்

சத்தி சக்திதாசன்
செவ்வாயில் ஓர் புன்னகை!
செந்தமிழில் ஒர் சொல்நகை!
செங்கழுத்தில் பொன்னகை!
கடைக்கண்ணில் ஓர் மின்னல்!
கைதன்னில் பனிக் குளிர்மை!
கருவிழியில் வாட் கூர்மை!
இல்லாத இடை கொண்டு!
இதயத்தை ஆட் கொண்டு!
இப்பொழுதைத் தனதாக்கி!
மென்மையிலே தென்றல் போல்!
மேகத்தின் குழந்தை போல்!
மோகத்திலே தவிக்க விட்டு!
கருத்தினிலே கவிதை போல்!
காதலிலே காவியம் போல்!
கனவுகளில் சுந்தரி போல்!
தாகத்திற்கு குளிர்மோர் போல்!
தவிக்கின்ற நெஞ்சினுள்ளே!
தமிழ்மகள் தான் குடிபுகுந்தாள்!
!
-சக்தி சக்திதாசன்

புனைவிட வாழ்வு

ரவி (சுவிஸ்)
இன்றும் வீடுதிரும்புதல் சாத்தியமாகிப்போக!
உறவுப் பார்வைகள்!
அசைந்து முளைக்கின்றன.!
வீதியில்!
போர்வண்டி ஒலிதேய்ந்து மறைகிறது, இருளில்!
பயத்தை விட்டுச் சென்றபடி.!
இன்றைய வியூகத்தின் பின்னான!
முகாம்திரும்புதலில்!
நிம்மதியுறுகிறான் இராணுவ வீரன்.!
துப்பாக்கி இப்போ சுமையாகிப் போய்!
பிடிநழுவுகிறது.!
இன்றைய தனது முறையில்!
குண்டுகளை அணிகிறது, வெடித்துச்!
சிதறுதற்காய் ஓர் பிஞ்சு - அதன்!
உடல் மனசிலிருந்து அறுபடுதற்காய்!
குலைகிறது.!
திரும்புதல் என்பது சாத்தியமேயில்லை.!
மரணவேதனையின் வாசற்படியில் ஒரு தாய்!
ஏந்திய உயிர் வீரிடுகிறது.!
இரத்தமும் சதையுமான பொசிவில், ஒரு!
படைப்புமையின் பெருமிதமாய்!
அவள் உடல் வலுப்பெறுகிறது.!
மரணத்தை இந்தப் பெருமிதம்!
கொண்டாடுவதேயில்லை.!
ஒரு கிளி, கூண்டு, கதவு, பூனை!
இவற்றோடு!
நீலம், பச்சை, சிவப்பு என நிறங்கள்!
எல்லாமே சிதறிக்கிடக்கிறது ஒரு படைப்புமைக்காய்.!
குழந்தை இவற்றை எப்படி!
அமைத்துக் காட்டப் போகிறது எனக்கு?!
முன்னால்!
வரைவுகளும் புனைவுகளும் கொண்ட நான்!!
-ரவி (03112006)

ஆத்மா

அ. செய்தாலி
கருவறை!
சந்திப்பிலிருந்து!
இன்றுவரையிலான!
கடந்து வந்த!
பருவங்களிலும்!
நேர் கொண்ட !
தருணங்களிலும்!
என்னுடன் பயணித்து!
உடல் முதுமையால்!
களைப்பார!
மண் குடில்!
சென்று விட்டாய்!
உன்பிரிவால்!
அடைக்கலம் இன்றி!
தனிமையாக்கப்பட்டு!
வானுலகம் செல்லுமுன்!
உன் இறுதிசடங்கின்!
ஒப்பரிக்கிடையில்!
சொல்ல மறந்தத!
நன்றியினை !
உன் உறவுகளின்!
கண்ணீரில்!
பதிவு செய்கிறேன்

எலும்புக்கூடுகள் நிறைக்கப்பட்ட வகுப்பறை

தீபச்செல்வன்
தீபச்செல்வன்!
எனது முகத்தின் வெளியில்!
மௌனம் ஒட்டப்பட்டிருந்தது.!
எனது குரலை மடித்து!
புத்தகத்தின் நடுவில்!
ஒளித்து வைத்திருக்கிறேன்.!
ஒரு சிறுவன் மீது!
இராணுவம் துன்புறுத்தி!
தாக்கியதைக் கண்டேன்.!
ஒரு முதியவர் மீது!
இராணுவம் துன்புறுத்தி!
தாக்கியதைக் கண்டேன். !
எனது வெள்ளைச் சீருடைகளின்!
நிறங்கள்!
உதிர்ந்து விழுந்தன.!
எனது கண்களின் மீது!
படர்ந்திருத்த!
அந்த வன்முறைக்காட்சிகள்!
இமைகளை அரித்து!
விழிகளை குடைந்தன.!
குருதி ஓட்டத்தில்!
முளைத்திருந்த உலகம் !
கரைந்து தொலையத் தேடினேன்.!
அவர்களுக்கு.. எனக்கு..!
என்று நீளுகிற!
அந்த சீருடைகளின்!
கொலுத்த அதிகாரம்!
எனது இனம்!
முழுவதுமாய் பரவுகிறது.!
நமது குழந்தைகளின்!
முகங்களை குத்துமளவில்!
நீண்டு கூர்மையாயிருந்தது. !
நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளின்!
களியாட்டம்!
சிறிய சைக்கிளில் போகும்!
சிறுமி மீதான குறியாயிருந்தது.!
எல்லோருடைய முகங்களும்!
சுருங்கியிருக்க!
தீராத வலிகள்!
எழுதப்பட்டிருந்தன.!
மனித நேயமும் உரிமைகளும் பற்றி !
பாடம் நடத்தப்படட்ட!
வகுப்பறையின்!
கூரைகளிலும் சுவர்களிலும்!
கிழிந்த புன்னகையோடு!
எலும்புக்கூடுகள் வரைந்து!
நிறைக்கப்பட்டிருந்தன!
புத்தகத்தின் நடுவில்!
வைத்திருந்த எனது குரல்!
சைக்கிளில் சென்ற!
சிறுமியைப் போல !
கரைந்து கிடக்கிறது

என் புத்திக்குள்

இளந்திரையன்
என் !
புத்திக்குள் !
பழைய !
மொந்தைக் கள் !
புத்தியும் போய் !
புத்தியின் !
தொழிலும் போய் !
நம நமத்த !
பச்சைக் களிமண் !
சுட்டுக் கலயமாக்கி !
கலயமுடைந்து !
கிழிஞ்சலாக.. !
காலம் !
உணர்த்தும் !
தடயமோ !
தாழ்க்கும் !
தாழிக்கலயமோ !
நோக்கம் !
எண்ணத்தின் !
விஸ்தீரணம் !
புதிய வானம் !
வந்து தங்கும் !
மரமல்ல !
சிந்தைப் !
பறப்பன்றி !
இரண்டடியும் !
நாலு அடியானும் !
நமக்கில்லை !
சொற்களின் சோக்கு !
சுந்தரமல்ல !
ஊடு பரவும் !
சிந்தனையும் !
புரிதலும் !
வாழ்வின் !
வழித்தடமும் !
வீசும் தென்றலும் !
வெள்ளை நிலவும் !
மணக்கும் !
மலருமல்ல !
வாழ்க்கை !
ஒரு !
பருக்கை சோறும் !
கிழிசலற்ற !
மேல்த் துணியும் !
நிறம் !
பார்க்காத !
இரத்தமும் !
பயமற்ற !
படுக்கையும் !
இன்னும்... !
என் !
புத்திக்குள் !
பழைய !
மொந்தைக் கள் !
புத்தியும் போய் !
புத்தியின் !
தொழிலும் போய்

ஆழிப் பேரலைகள் (சுனாமி)

s.கிருஷ்ணன்
உன்னை சக்களத்தி என்று இகழாமல்!
சிவனின் சிரத்தில் வைத்து நித்தம்!
அழகு பார்த்து மகிழ்ந்ததால் தானா!
அன்று நீ சினம் கொண்டு!
சீறி எழுந்தாய்?!
சீதையை சிறை வைத்த தேசத்தில்!
எம் தமிழன் சிந்திய கண்ணீர்!
உன்னில் உப்பாய் உறைந்தது!
கண்டு மனம் வருந்தி தானோ!
அன்றே கரை தாண்டி!
கொதித்தெழுந்தாய் ?!
வென்ற தோற்ற!
காதல்களின் அடையாளமாக!
மணல் வெளி எங்கிலும்!
பாதச் சுவடுகள்!
இயற்கை என்னும் மருத்துவச்சி!
உன்னில் இருந்து பல செல்வங்களை!
வெளிக்கொணர முயன்ற பிரசவம்!
தோற்று போனதால் பிறந்து விட்ட!
துயரத்தின் அடையாளச் சுவடு!
தானா நீ?!
எங்கள் பசிக்காக!
உன் வளத்தை!
சுரண்டி விட்டோம்!
என்று கருதி நீ!
வருடக் கணக்கில்!
உண்ணாவிரதம்!
இருந்தாயோ?!
உன் அகோரப் பசிக்குப்!
பருக்கையாய் எங்கள்!
கரையில் ஒதுங்கிய!
பிணங்கள்.!
அழித்த நகரமும்!
வளமும் போதாதா!
உனக்கு?!
வருடம் இரண்டு!
கடந்த பின்னும்!
கரை வேட்டியால்!
கரை சேர்க்க!
முடியாத வாழ்க்கையை!
இன்னும் கரை ஓரம்!
தேடுகின்றனர் சிலர்!
குனிந்து கிளிஞ்சல் பொறுக்கும்!
சின்னஞ்சிறு குழந்தை போல.!
நாளைய பொழுதேனும்!
நல்லதாய் விடியட்டும்!
இனி எங்கள் வலைகளில்!
மீன்கள் மட்டுமே தங்கட்டும்.!
-- s.கிருஷ்ணன்

எனக்கு எத்தனை முகங்கள்

நிந்தவூர் ஷிப்லி
நிந்தவூர் ஷிப்லி!
எனக்கு எத்தனை முகங்கள்!
என்று எனக்கே தெரியவில்லை!
இரண்டு முகங்கள் இருப்பதாக!
நண்பர்கள் குழப்புகிறார்கள்!
எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!
பேரூந்துகளில்!
பெண்களை நெருங்கும்போது!
மூன்றாவது முகமொன்றை!
மெல்லமாய் கண்டுகொள்கிறேன்!
கடன்பட்ட பிறகு!
நான்காவது முகத்தை!
நானே அடையாளம் கண்டேன்!
தனிமையில் ஐந்தாவது!
அழுகையில் ஆறாவது!
அலைபேசியில் ஏழாவது!
இணையத்தில் எட்டாவது!
இப்படி நீண்டுகொண்டே போகின்றன!
எனது முகங்கள்....!
நானாக விரும்பி!
எதையும் அணிவதில்லை!
அவ்வப்போது அந்தந்த முகங்கள்!
என்னை உள்வாங்குகின்றன.!
இவைகள் முகங்களாக அன்றி!
முகமூடிகளாகக்கூட!
இருக்கலாம்.!
என்ன ஒரு வேடிக்கை...!
யோக்கியன் என்று உலகம்!
நம்பிக்கொண்டிருக்கும் எனக்குள்!
அயோக்கியன் ஒருவன்!
நிரந்தரமாய் தங்கியிருக்கிறான்....!
சிரிக்கிறேன்!
கோபப்படுகிறேன்!
தாகிக்கிறேன்!
சலனம் கொள்கிறேன்!
பொய் பேசுகிறேன்!
துரோகமிழைக்கிறேன்!
காதல் செய்கிறேன்!
முத்தமிடுகிறேன்!
கவிதை வரைகிறேன்!
அடேயப்பா!
எனக்குள் இன்னும் எத்தனை முகங்களோ..?!
பாருங்கள்!
எனக்கு ஒரே ஒரு முகம்!
என்பது எத்துணை பெரிய பொய்...!?!
எனக்கு எத்தனை முகங்கள்!
என்று எனக்கே தெரியவில்லை!
- நிந்தவூர் ஷிப்லி