தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை

வசீகரன்
இரவும் பகலும் இரத்த ஆற்றிலே!
எங்கள் வாழ்க்கை நீச்சல் அடிக்கிறது!
உலகம் முழுதும் தமிழர்களின் வீரவணக்கம்!
செய்திகள் படிக்க உயிரைப் பிழிகிறது!!
எமக்காக எழுந்த தெய்வங்களே!
ஏழு பேரையும் வணங்குகிறோம்!
ஒரு சோதிப்பெரு வெளிச்சம்!
எமக்குச் சக்தியானது போதுமையா!!
முகம் தெரியாத எம் முத்துகளே!
உயிராயுதம் ஏந்துவதை நிறுத்துங்கள்!
எழுத்தாணியைக் கையில் எடுத்து!
எட்டுத் திசையிலும் எழுதுங்கள்!!
உலகத்தின் விழிகளைத் திறப்பதற்கு!
உங்கள் உயிர்களை இழக்காதீர்கள்!
அவலத்தின் காணொளிகளை தொகுத்து!
உலகத்தின் விழிகளுக்கு காட்டுங்கள்!!
தெய்வங்களை நேரிலே பார்த்ததில்லை!
இன்று நெருப்பிலே பார்க்கின்றோம்!!
நேற்றிருந்த முகங்கள் இன்றில்லையே!
நெஞ்சுடைந்து நெகிழ்ந்து போகின்றோம்!!
நிலவெறியும் எங்கள் வீடுகளில்!
நெருப்பெறிந்தால் எப்படித் தாங்குவோம்!
அடுத்து அடுத்து தற்கொடைகள் என்றால்!
அடியெடுத்து விடைகொடுப்பது யார்?!
உங்கள் ஓப்பற்ற தியாகங்களின்!
பின்னே மெல்ல மறைந்து போகும்!
உங்கள் குடும்பத்தின் ஒப்பாரிகள்!
எழுந்து வந்து உயிர்க்குலை அறுக்கிறது!!
கதறி அழுது கண்ணீர்விட்டு அழுது!
அடக்க முடியாத உணர்வுகளில்!
தேடி வந்து சோகம் ஒட்டிக்கொள்கிறது!
இறுதி முடிவுகளே இங்கே தொடக்கமாகிறது!!
அங்கே முத்துக்குமார் எழுதி முடித்த!
மரணசாசனத்தை தினமும் வாசிப்போம்!!
இங்கே முருகதாசன் எழுதி வடித்த!
மரணசாசனத்தை உடனே வாசிப்போம்!!
தீக்குளிப்பை ஆதரிக்க முடியாத எங்களால்!
தீக்குளித்தவனை திட்டித் தீர்ப்பதற்கோ!
விமர்சனம் செய்து பழி தீர்க்கவோ!
எங்களில் எவருக்குமே உரிமையில்லை!!

ந‌ம் வாழ்வு?

ரத்திகா
கட்டிடங்களில் கூடுகட்டப்!
பழகிவிட்டன பறவைகள்.!
கூண்டுகளில் வாழ!
கற்றுக்கொண்டுவிட்டன!
விலங்குகள்.!
பறவைச் சிறகணிந்து!
விலங்கு மனம் தரித்து!
மனிதத் தோல் போர்த்திய!
வாழ்வு நமது!!

எங்கே என் அம்புலி?

டீன்கபூர்
கடல் மடியில் தவழ்ந்து!
கடல் மடியில் உணர்ந்து!
கடல் மடியில் கூடி!
கடல் மடியில் காதல் பொழிந்து??!
எங்கே என் அம்புலி?!
கடல் காற்றில் மூச்செறிந்தாய்!
கடல் வெளியில் உரத்துச் சிரித்தாய்!
கடல் மடியில் எழுதி வடித்தாய்?.!
எங்கே என் அம்புலி?!
அச்சம் முகத்தைக் காய்த்து!
இதயத்தில் செட்டை முளைத்து!
பொழுது பொழுதாய் அடித்து!
தெருவும் திசையும் வேறுவேறாய்?.!
எங்கே என் அம்புலி?!
எங்கே ஒளிந்தாய்!
எங்கே மனசை விதைத்தாய்!
எங்கே தூக்கத்தை அணைத்தாய்!
எங்கே கனவைக் கரைத்தாய்.!
இனி என்ன!
நான் எங்கு செல்வேன்?!
காற்றின் முதுகில் பயணம் செய்து.!
வா.!
அன்பே!!
இனியேனும் வனம் ஒன்றில் வகை செய்வோம்!
ஒரு பெருமரத்தில் தவழ்ந்து பூரிப்போம்!
என் நாள் வரும்!
உன் மூக்கை நுள்ள!
கடலை அணிசெய்ய!
என்றும் உன் உருவம் மறவேன்!
உன் தூக்கணம் மின்னிய கடற் புனலில்.!

குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே

தமிழ் ராஜா
சித்திரப் பெண்ணழகே ! உன்னை!
என் சிந்தையில் வைத்திடவே!
கண்மலர் பூத்தி டம்மா பாவையே!
பார்வை ஒருங்கிடவே !
என்னையே மனதில் வைத்தாய் !
என்னுடன் நினைவையும் சேர்த்து வைத்தாய்!
கண்ணிலே காதலையே கன்னியே!
என்னுள் ஏன் வைத்தாய் !
காலத்தின் வர்ணணையில் கன்னியே!
காதலின் சொல்லினிக்கும்!
வாழும் தீரத்தில் உள்ளதடி!
நம் காதலின் கண்ணியமே !
சேர்ந்து பிரிந்திடினும்!
பிரிந்து சேர்ந்திடினும்!
இருக்கும் பொழுதினிலே!
ஆன்மா இன்பம் களிக்குமடி !
சேர்ந்தப் பொழுதினிலே!
உன் அன்பு சாரம் புரியலையே!
உனை பிரிந்த காலத்தினிலே!
உனை தவிர யாரும் தெரியலையே !
சோகத்தின் ஆழத்திலே !
உயர்காதல் புரியுமடி!
அது காமத்தின் இன்பத்திலே!
ஊறி மகிழுமடி !
மனதில் பாட்டு உதிக்குதடி!
நீ என் பக்கமிருக்கையிலே!
அதனுள் இசையும் இணையதடி!
நீ என்னை விட்டுப் பிரிகையிலே !
உள்ளத்தில் குற்றமேதுவுமில்லை!
உன்னுடன் கூடி மகிழ்வதிலே !
ஊடலில் உனக்கு நிகருமில்லை!
குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே.......... !

அடிமைகளின் காலம்

கவிமதி
இந்நேரத்திற்கு உலகில்!
எத்தனையோபேர் தலையில்!
இறங்கியிருக்கக்கூடும்!
ஏவுகணைகள்!
இரக்கமின்றி!
பிய்த்து எறியப்பட்டிருக்கும்!
இராக்கியர்களின் இதயங்கள்!
கருவறுக்கப்பட்டிருக்கும்!
காசாவின் கனவுலகம்!
குலை குலையாய்!
குதறியிருக்ககூடும்!
ஈழத்தில் ஈரல்கள்!
இன்னும் அநியாயங்கள் அனைத்திலும்!
உன்கையே இருக்குமென்பது அறிந்தே!
வெறுக்கும் ஒருகூட்டம் விளகியிருக்கும்!
உன் நாட்களை கொண்டாடாமல்!
அதற்காகவெல்லாம் கவலைபடாதே!
அடுத்தவன் தலையில் குண்டை போட்டுவிட்டு!
நீ சொல்லும் ஆப்பி நீயு இயர்களை!
அணுகூடபிசகாமல்!
ஆண்டுதோறும் கொண்டாடுவர்!
உன் பிள்ளைகள்!

---
உழைக்கும் வயதில் ஓய்வெடுத்தால்!
ஓய்வெடுக்கும் வயதில் உழைக்கவேண்டியிருக்கும்

நான் அனாதையல்ல

இராமசாமி ரமேஷ்
சுனாமி செய்த கொலையில்!
அப்பா காணாமல் போக...!
போரென்னும் புதைகுழியில்!
நான் அனாதையில்லை.....!
அம்மா புதைந்து போக...!
எறிகணைகள் என் உடன்பிறப்பையும்!
உரிமையோடு பறித்துக்கொள்ள...!
சுற்றம் சொல்கிறது.....!
நான் யாருமற்ற அனாதையாம்...!!!!
இல்லை!
இல்லவே இல்லை!
என்னவர்களின் நினைவுகள்!
என் உயிர்க் கூட்டோடு!
ஒட்டியிருக்கும் வரை!
நான் அனாதையல்ல

ஏமாற்றுக்காரி

த.எலிசபெத்
அன்பை கொண்டுவந்தேன்!
ஆஸ்தியைத் தேடினாய்!
பாசத்தோ டோடிவந்தேன்!
ப‌ணமா வென்று பார்த்தாய்!
பரிவுடன் பக்கத்திலிருந்தேன்!
பதவியெங்கே யென்றாய்!
பிரியத்தோடு நெருங்குகையில்!
பட்டத்தினையும் பெற்றுக்கொள்ளென்றாய்!
காதலோடு வந்தபோதெல்லாம்!
குடும்பத்தை தாண்டமாட்டேனென்றாய்!
ஏழைக்காதலியாய்!
ஓடிவரும்போதெல்லாம்!
ஏளனமா யொதுங்கிப்போனாய்!
சமூகக்கேள்விக்கு!
சர்வாங்கப்பலியாகாமல்!
சம்சாரமாகிவிட்ட எனைபார்த்திப்போ!
என்ன சொல்லப்போகின்றாய்!
ஏமாற்றுக்காரியென்பதைத் தவிர????!

எஞ்சும் ஜீவராசி

சோமா
பெண்டு குஞ்சோடு முத்தம் தழுவிய‌!
நிறைந்த இருளை களைக்கிறது!
மஞ்சலாடை போர்த்தி வெம்மை!
கக்கும் சூரிய நினைவூட்டல்.!
பணிக்கான பயணத்தின்!
அவசரமும் ஆர்ப்பாட்டமும்!
கொன்று குவித்தன!
முந்தைய இரவு இருப்பை!
மிஞ்சி அன்பு பகிர்ந்ததை.!
விஸ்தீரண நகரம்!
வாழ்வாதாரத்தை சுருக்கியிருந்தது!
வட்டம் புள்ளியாய்!
விசாலம் குறுக்கு நெடுக்காய்!
இதயம் விரைப்பைக் கொட்டையாய்.!
அமாவாஸ்யை விரதமிரா நகரில்!
ஆச்சிகளும் வடை சுடுவதில்லை!
தானம் பெற்றோ திருடித் தின்றோ!
பிழைக்கவியலா நகரம்.!
தன்னைக் கொல்லும் வித்தை!
பிடிபடா ஜீவராசியின் எரியும் வயிறு!
பலமைல் தூர பயணத்தில் குளிர்கிறது!
நீடித்திருக்கும் க‌ளைப்பின் இறுதி!
உணவு பகிர்தலில்!
பெண்டின் கொஞ்சலை!
குஞ்சு ஈனலை தனதாக்குகிறது

வாழ்க உன்..முடி வெட்டிய..மன்னித்துவிடு

முல்லை அமுதன்
வாழ்க உன் அரசியல்..முடி வெட்டிய ஒரு நாளில்.. மன்னித்துவிடு!
01.!
வாழ்க உன் அரசியல்!
----------------------!
இருக்கும் வரை!
ஏமாற்றிக்கொள்!
அழகு-!
அரசியல்வாதியாய் இருப்பது..!
கிடைத்தவரை!
வசதியாக!
உட்கார்ந்து கொள்!
கதிரை கவனம்...!
உட்கார்ந்திருக்கையிலேயே!
களவாடப்படும்!
அபாயமும் இருக்கிறது..!
மக்களைப்!
பற்றிய கவலை!
எதற்கு?!
கட்சி சொன்னதைச் செய்..!
விரும்பினால்!
விபச்சாரமும் செய்..!
அடுத்த தேர்தல்வரை!
யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.!
மக்கள் பற்றிய!
கவலை!
இல்லாதபட்சத்தில்!
இனம் பற்றிய கவலை எதற்கு?!
சமயங்களில்!
உன் இனம் என்ன!
என்பதையே மறந்துவிடு..!
எப்போதும் பெட்டி!
நிரம்பியே இருக்கட்டும்.!
கட்சித்தலைவர்!
வனவாசம் போகச் சொன்னாலும்!
தேவைப்படலாம்.!
தலைவர் பதவிக்கும்!
தேவைப்படலாம்.!
உன் பாட்டில் முன்னேறு..!
உலகம்!
அரசியல் பற்றி!
இப்படித்தான்!
சொல்லி வைத்திருக்கிறது..!
அடுத்த தேர்தல் வரை!
உனது ராஜாங்கம்..!
கிரீடம் பத்திரம்..!
சாமரம்!
வீசுபவர்களை!
முடிந்தவரை அதிகரித்துக் கொள்.!
எப்பவும்!
கொன்று வா என்று சொல்..!
பிறகு சொல்!
கொண்டு வா என்று தானே சொன்னேன் என்று...!
கட்சி எவ்வழி!
நீயும் அவ்வழி!
வாழ்க உன் அரசியல்..!
02.!
முடி வெட்டிய ஒரு நாளில்..!
-----------------------------------!
முடியைச் சரிசெய்து!
இப்போதுதான்!
வந்தேன்..!
தொட்டுக்கொள்ள!
எதுவும் இல்லை!
என்று!
மகள் சிணுங்கினாள்.!
முத்தமிடும் பொழுதுகளில்!
கோட்திக் கொள்ளும்!
சுவாரஸ்யம் !
எனி!
இல்லை!
என்று மனைவி!
காதில் கிசுகிசுத்தாள்.!
முன்பு!
ஊரில் அப்பாவும்!
முடி வெட்டிக்கொள் !
என்று!
நச்சரித்தார்.!
முடியுடன்!
அழகாய் தெரிகிறீர்கள்!
என்ற!
அவளின்!
கனவுகளும் கண்களில்!
தெரிந்தன.!
அம்மாவும்!
வசதியாக!
கோபப்படும் போது!
முடியைப் பிடித்திழுத்து!
ஒங்கி அறைவது!
இப்போதும்!
வலிக்கிறது.!
இப்படிப் பரட்டையாய் வராதே!
என்!
கல்லூரி!
அதிபரும் முழங்காலில்!
நிற்கும் தண்டனையை!
அந்!
நாளில்!
தந்ததை!
முழங்காலும் மறக்காது.!
புகைவண்டிப் பயணதில்!
சன்னல்கரையோரம்!
உட்கார்ந்தபடி!
வெளியே தோழிகளுடன்!
நடக்கும்!
அவள்களை!
பார்த்தபடி!
முடியை சரிசெய்யும்!
குதூகலம்!
இப்போதும் இனிக்கிறது...!
நண்பனுடன் சண்டையிடுகையிலும்,!
அக்காளின் !
கோபத்திற்காளாகும் போதும்!
என் முடி தப்புவதில்லை...!
இப்போது முடி!
குறைந்துவிட்டது!
பற்றி!
எனக்கில்லாத !
கவலை இவர்களுக்கெதற்கு?!
முடி இல்லாமல்!
வாழ்ந்து பார்!
கவரிமான் தோற்றுப்போகும்...!
!
03.!
மன்னித்துவிடு!
---------------------!
உனக்கு!
வாழ்த்துச் சொல்லமுடியாதபடி!
முடமாய் நான்..!
77இன் பின் !
தெளிக்கப்பட்ட அரசியல்!
சாக்கடை நாற்றம்!
என் நாசியில்!
ஒட்டிக் கொண்டிருக்கிறது.!
அரசியல் கதிரைகள்!
உன்னால் கழுவப்படுமானால்!
சந்தோசப்படுவேன்.!
ஆனாலும்,!
மக்களின்!
மரணதிற்கு!
உன் அரசியலும் காரணம் தானே?!
இறந்து வீழ்ந்த!
என் குழந்தையின் முண்டத்தை!
தூக்கிய!
கைகளின் குருதி ஈரம் காய்வதற்குள்!
விரல்களைக் கேட்கிறாய்..!
புள்ளியிட-!
விரல்கள் இல்லையே

கவிதையில் காதல்

வித்யாசாகர்
சொக்கவைக்கும் தமிழில்!
சொக்கித் தான் போனது காதலும்;!
சொக்கித் தான் போனேன் நானும்!
சொக்கவைத்தவள் அவள்!!
அவளொரு -!
மரத்த தமிழச்சி,!
அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில்!
இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது..!
தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற!
பனைமரக் காலமது,!
வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும்!
ஒற்றைக் குட 'நீருக்கான பஞ்சமது,!
அந்தக் குழாயின் -!
வாயடிச் சண்டையில்!
கைகட்டி நின்றவளின் பார்வையிலிருந்து!
பூத்ததெம் காதல்.!
கண்களின் -!
காட்சிப் பிழைபோல் தெரிந்த உலகத்தை!
சற்று திருத்தி -!
என் ஆண்டைகளின் வீரத்தை!
போதித்தது காதலே.!
அதோ...!
சல் சல் சலங்கை ஒலியிட்டு!
பவனி வருகிறாள் அவள்;!
அவளின் கால் கொலுசு சப்தத்திலிருந்து!
கரையத் துவங்குகிறது என் மனசும் காதலும்!
அன்றெல்லாம் -!
அவளை காணும் தினமே - நான்!
வாழும் தினமென்றுக் குறித்துக் கொள்வேன்,!
கானாதப் பொழுதுகளை -!
கவிதைகளால் கிருக்கிச் செல்வேன்;!
அதில் -!
கவிதையில் - காதல் பூத்தது;!
காதலில் -!
அவளும் நானும் கரைந்தோம் கலந்தோம்!
காற்றில் நடந்தோம்!
கைவீசி போட்ட ஒய்யார நடையில்!
ஜாதியின் மதத்தின் கண்களில் குத்தினோம்!!
விழித்துக் கத்திய சமூகத்தை!
உடைத்துப் போட்டதெங்கள் காதல்.!
ஆம்;!
ஜாதிக்கு மதத்திற்கு தலைவிரித்தாடும்!
ஆட்டம் சொல்லி என்!
நேற்றைய தலைமுறையை ஒரு நூற்றாண்டிற்கு!
தட்டிவைத்ததிந்த சமுகமில்லையா?!
மனித உயிரின் உயிர்பயமில்லாது!
தன் சுயநல வெறியின் பசிக்கு!
என் இளைய சமுதாயத்து உயிர்களை!
தின்றதிந்த சமுகமில்லையா......?!
இதோ கைகோர்த்துக் கொண்டு!
கிணற்றில் வீழ்கிறோம்!
முடிந்தால் பிரித்துக் கொள் உன் ஜாதியை என்றோம்,!
வாய் பிளந்துப் பார்த்தது சமூகம்!
எண்களின் பிணத்தை!!
அதற்காக -!
இறந்து விட்டோமென்று நினைக்காதீர்........!
என் தம்பி காதலிப்பான்!
என் மகன் காதலிப்பான்!
என் மகள் கூட காதலிப்பாள்!
ஜாதி!
மதம்!
நாற்றமெடுத்துப் போகும்;!
மனிதம் காதலில் மிஞ்சும்; காதல்!
கவிதையாகும்!!
கவிதையில் காதல் பூக்கும்