குழந்தைகள் பூக்களை நிரப்பி!
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்!
தெயவம் என்ற பக்தியோடு!
உன்மீது!
சனங்கள் பாடி ஏற்றுகிறார்கள்!
குருதி பிறண்ட!
கமராவோடு இருக்கிறது உனது அறை.!
!
சனங்கள் சனங்கள் பாடிய!
எனது அன்புத்தோழனே!
ஒரு நாள் நான் வருவேன்!
சனங்களின்!
கனவு நிரம்பிய நீயான கல்லறைக்கு.!
சனங்களின் ஏக்கங்களை!
அள்ளி நிரப்பி வரும்!
உனது கமரா!
களத்தில் தோளிலிருந்து!
உதிர்ந்து விழுந்ததை!
நான் நம்பாமலிருக்கிறேன்.!
சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்!
ஒரு துப்பாக்கியோடும்!
உனதான கமராவோடும்!
நீ சமராடிய நிமிடங்களை!
நான் நினைத்துப் பார்க்கிறேன்.!
நஞ்சு நிரப்பிய!
உனது சயனைட் குப்பியில்!
பதுங்குகுழிச்சனங்களின்!
கண்ணீரையும் கோபத்தையும்கூட!
நிரப்பிவைத்திருந்தாய்!
அது உனது கழுத்தில் தொங்கியபடியிருந்தது.!
உனது ஒரு சூரியனின் முகத்தையும்!
குழந்தையாய்!
நெருங்கி வருகிற முகத்தையும்!
உனது அறையில் நிரம்பியிருந்த!
நமது வார்த்தைகளையும்!
நான் எந்த களமுனையில் தேடுவேன்.!
சீருடைகயையும்!
துப்பாக்கியையும்!
கமராவையும் இவைகளுடனான!
உனது கடமையையும்!
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்!
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்!
அழுது கிடக்கிறது.!
நீ களப்பலியானாய்!
என்ற செய்தியை சொல்லிவிட்டு!
ஒரு பறவை துடிக்கிறது!
கனவில் நிரம்பிவிட்ட!
கல்லறைகளில்!
நான் உன்னை தேடியலைகிறேன்.!
உனது கமராவிற்குள்!
இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கிறது!
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை.!
!
-தீபச்செல்வன்!
!
--------------------------------------------------------!
மன்னார் களமுனையில் 14 கார்த்திகை 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது!
அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்
தீபச்செல்வன்