தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கல்வி.. தாமரை.. சாமந்தி

அகரம் அமுதா
01. கல்வி!!
முனைந்திடின் பெயரோ டேவல்!
முன்னிரண் டெழுத்தில் தோன்றும்;!
கனிவுடன் ஒற்றை நீக்கின்!
கவிஞனும் குரங்கும் உண்டாம்;!
மனைதனைக் கூடும் சொல்லே!
மலர்ந்திடும் புள்ளி நீக்கின்;!
உனையெனை சான்றோ னாக!
உயர்த்திடும் கல்வி தாமே!!
02. தாமரை!!
ஏவலே முதலெ ழுத்தாம்;!
எழுத்திதில் கடைத ளைகின்!
காவிய வாலி இல்லாள்;!
கடையிரண் டெழுத்து மானாம்;!
மேவிய இடையை நீக்கி!
விரைந்து ‘கால்’ தனைஒ றுத்தால்!
தாவிலை நிலமாம்; அச்சொல்!
தாமரை என்பேன் கண்டீர்!!
03. சாமந்தி!!
முதலெழுத் திறத்த லாகும்;!
முதல்,கடை இனமே யாகும்;!
முதல்,கடை யிரண்டெ ழுத்தை!
முடிச்சிடின் அமைதி யாகும்;!
முதலற குரங்கே யாகு(ம்;)!
உயர்இரண்டா மெழுத்தி னோடே!
இதன்கடை தளைகின் திங்கள்;!
இச்சொல்சா மந்தி யாமே!!
- அகரம்.அமுதா

இன்று நான்

இளந்திரையன்
உரசி உரசிச்!
சிதறும்!
தீச்சுவாலையாய்!
உருச் சிறுத்துச் சிறுத்து!
விலகி விலகிச்!
செல்லும்!
வானவில்லும்!
வனப்பு அழிந்து!
நீண்ட பயணத்தில்!
சோர்ந்தது!
கால்கள் மட்டுமல்ல!
மனதும் தான்!
அங்கொன்றும்!
இங்கொன்றுமாய்!
சில நட்சத்திர!
சிலிர்ப்புகள்!
நாளை!
என்பதன் பக்கம்!
நலிந்து போக!
வந்த திசை!
நோக்கிய!
இரை மீட்டலில்!
இன்று நான்!
- இளந்திரையன்

கடவுளுக்கு வந்த சோதனை

மு.கோபி சரபோஜி
சும்மாயிருந்த கடவுளை!
அணிகல அலங்காரோத்தோடு !
வீதி உலாவுக்கு!
அழைத்து வந்தான் மனிதன்.!
வீதிக்கு வந்த கடவுளை!
எந்த வழியில் அழைத்துப்போவது!
என்பதில் தொடங்கியது பீதி.!
ஆளுக்கொரு சர்ச்சையில்!
கடவுளின் அர்ச்சனை !
காணாமல் போனது.!
வாய் சண்டை!
கை சண்டையாகி!
கலவரமானது.!
கலவரத்துக்கான !
ஆள் சேர்ப்பு பணியில்!
கடவுள் தனித்து விடப்பட்டான்.!
வீதி உலா போக வந்தவன்!
வீதியிலேயே நின்றான்!
விக்கித்துப்போய்!!
கடவுள் மட்டும் தான்!
சோதிப்பானா? - சமயங்களில்!
மனிதனும் சோதிப்பான்!
கடவுளை

என் மரணம்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
இலையுதிர் காலத்தில் !
சத்தமில்லாமல் !
உதிரும் ஒரு இலைபோல !
எனதுயிரும் ஒரு நாள் !
பிரிந்து போகும் !
மரங்கொத்திப் பறவைகளின் !
டொக் டொக் ஒலியினையும் !
சில் வண்டுகளின் !
இறைச்சல்களையும் !
இன்னும் தேனீ க்கலின் !
ரீங்காரத்தையும் !
எனது செவிகள் அப்போது !
உணரமாட்டா .....!
ஒரு அதிகாலையோ !
அல்லது அந்திப்போழுதோ !
இல்லை ஒரு கும்மிருட்டோ !
எனது உயிர் பிரியும் !
நேரமாக இருக்கலாம் !
இன்றோ !
அல்லது நாளையோ !
இன்னும் சில நாட்களின் பின்போ !
எழுதப்பட்ட பிரகாரம் !
நான் மரணித்துப் போவது உறுதி !
என் மரணம் !
உறவுகளுக்கு !
இழப்பாகவும் !
நண்பர்களுக்கு !
கவலையாகவும் !
என் எதிரிகளுக்கு !
சந்தோசமானதாகவும் இருக்கும் !
தொலைந்தான் சனியன் !
என்று எதிரிகள் !
சந்தோசிக்க !
இறுமாப்பும் ஆணவமும் !
அவர்களுக்குள் !
பிரவாகித்து ஓடும் !
என் மீது சாமரம் !
வீசிய உறவுகள் !
என்கபுருக்கு மேலால் !
பூமரம் நாட்ட முனைவார்கள் !
நண்பர்களோ !
என் இழப்பின் உஸ்னத்திலிருந்து !
வெளிவர முயற்சிப்பார்கள் !
ஊரவர்கள் !
இன்னொரு மரணம் வரைக்கும் !
என்னைப்பற்றி !
பேசுவார்கள் !
எப்போதும் கண்ணீர் விட்டு !
நிரப்ப முடியாத !
குவலையொன்ராக !
தேம்பித் தேம்பித்!
அழும் எனது கவிதைகள் !
அதன் மரணம் மட்டும்

வேண்டும் “வானுவாட்டுக்கு” ஓர் ஒருவழி

இரவி கோகுலநாதன்
பயணச்சீட்டு!!
---------------------------------------------------------------!
லெமூரியா கண்டத்தையும்!
சிந்துச் சமவெளியையும்!
கடல் கொய்ய - மிச்சம் !
விடப்பட்ட எச்சங்களாய்!
இன்றைய நாகரிகம்! !
கற்கால மனிதனாய்க் !
காடுகளில் திரிந்தவனைத்!
தற்காலத் திறனாளனாய் - மாற்றிய!
நிஜங்களின் நிகழ்வு!!
மனிதர்களுடன் மட்டுமே!
அணுக்கமாய் இருந்தவன்!
அணுவைக் கண்டுபிடித்ததன்!
மகத்தான அற்புதம்!!
காடுகள் நகரமாக!
நகரங்கள் நரகமாக!
“கான்கிரிட்” சுவர்களாலேயே!
மூடப்படும் “கான்கிரிட்” சுவர்கள்!!
சுவாசிப்பதற்கு மட்டுமே!
இருந்த காற்றைக் - குளிரூட்டி!
அறையில் அடைக்க!
அகண்ட வான்வெளி !
வெப்பமண்டலமாய்!
மாறிப்போனதன் எதார்த்தம்!!
ஊர்திகளின் நெருக்கத்தால்!
ஊர்ந்து கொண்டிருக்கும்!
மாசுவின் மாட்சி!!
காற்று மண்டலமே !
கரியமில வாயுவாகி!
ஓசோன் படலத்தின்!
ஓட்டை வழியே காணப்படும் !
பூலோக உருண்டை!!
கார்காலம் கோடையாகி!
கோடையிலே “நர்கிஸ்” தாக்க!
தடம்புரண்ட தட்பவெட்பம்!
பூமித் தட்டுகளை இடம்பெயர்க்க!
சீற்றமிகு சுனாமி!
இந்துமகா சமுத்திரத்தை !
முத்தமிட்டு வங்கக்கடலுடன் !
சங்கமித்த சரித்திரம்!
மனித விந்தைகளின் விசித்திரம்!!
நாளை விதிக்கப்படலாம் !
உனக்கும் எனக்கும்!
கற்காலம்! - அதற்குமுன்!
ஒரு நிமிடம்!!
ஏ மனித இனமே!
உனக்குத் தெரியுமா!
உலகில் மகிழ்ச்சி !
நிறைந்த தேசம் எதுவென்று?!
தென் பசிபிக் கடலின் நடுவில்!
எண்பது தீவுகளில் பரவிக் !
கிடக்கும் இரண்டு இலட்சத்து !
இருபத்திரண்டாயிரம் மனிதர்களுடன்!
இயற்கையோடு இணைந்து !
இசை பாடிடும் தேசம்!
வானுவாட்டென்பது...!!
நேரமிருந்தால் சென்றுபார்!
உன் நவீன மடிகணினி!
உதவியுடன் - நீயே!
உனக்கு நெய்து கொண்ட!
வலைகளாகிய இணையதளத்தில்!
அச்சுப்பலகையின் சி வழி!
“ஹேப்பி பிளானட் இண்டெக்ஸ்”!
அந்த தேசத்தின் !
முக்கிய வருமானமே!
விவசாயமென்றால்!
நீ எள்ளி நகையாடுவாய்!!
தனிநபர் சராசரி!
ண்டு வருமானம்!
யிரத்து அறுநூறென்றால்!
நம்ப மறுப்பாய்...!!
“மில்லியன்களிலும் !
பில்லியன்களிலும்”!
வர்த்தகம் புரியும் உனக்கு!
பூலோகம் மட்டும் ஏனோ!
இன்னமும் புரியவே இல்லை...! !
நீ உன் உலகிலேயே!
இருந்து விட்டுப் போ!!
இயற்கையோடு இயற்கையாய்!
இன்புற்றிருக்க - எனக்கு !
மட்டும் வேண்டும்!
“வானுவாட்டுக்கு” ஓர்!
ஒருவழி பயணச்சீட்டு!!
!
-இரவி கோகுலநாதன்

அழகிய பறவை

வெளிவாசல்பாலன்
ஒரு பறவை என்னோடு நட்பாகியிருந்தது!
அதன் சிறகுகள் !
அழகானவை என்றனர் சிலர்!
அவை கம்பீரமானவை என்றேன் நான்.!
அழகிய பறவையின் கூடு !
அதன் வீடு என்றார்கள் அவர்கள்!
வெளியே வீடு என்றாகிய பறவையிடம்!
கூட்டின் எண்ணங்கள் எப்படியிருக்கும்!
விரிந்த கடலும்!
பரந்த வெளியும் !
சுடர்ந்த ஞானமும்!
கொண்ட தப் பறவை!
என்னுடன் நட்பாகியிருந்தது!
அந்திபகல் என்ற பேதங்கள் !
இல்லாத பறவையின்!
பறத்தல் சுகத்தை !
சிறகின் வீரியத்தைக் காணுதலுற்றேன்!
ஆற்றலொடு பறந்து !
வானில் மிதக்கும் அப்பறவையிடம்!
சிறிய வட்டங்களேதுமில்லை!
விர்ரெனப்பறந்து மேலெழும்!
பிறகு !
சட்டென விரைந்து!
கீழே குதித்து !
மடிமீதமரும்!
என்ன ஆச்சரியம்!
இரவிலும் பகலிலும் !
அப்பறவை பறந்து திரிந்தது!
அந்தி பகல் !
என்ற பேதங்களின்றி!
வீரத்துடன்!
கம்பீரத்துடன்!
அதுவே அழகென்றேன் நான்

உறங்காத உண்மைகள்

சத்தி சக்திதாசன்
உண்மைகள் எப்போதும் மறைந்திருக்கும் - அவை!
உலகத்தில் ஏனோ புதைந்திருக்கும்!
நெஞ்சங்கள் அதனால் துடித்திருக்கும் - அவை!
வஞ்சங்கள் கண்டு தளர்ந்திருக்கும்!
பாசத்தை மதிக்கும் உயிர்கள் தானே - புவியில்!
நேசத்தால் உதைபடும் பந்துகள் ஆயின!
வேஷத்தால் மயக்கிடும் மனிதர்கள் - உலகில்!
கோஷத்தால் உயர்ந்திடும் நிகழ்வுகள்!
பொறுமையால் கட்டுண்ட சொந்தங்கள் - வாழ்வில்!
வெறுமையாய் தவித்திடும் பொழுதுகள்!
கருமையை விலக்கிடும் வேளைகள் - என்றும்!
வரும்வழி புரியாத ஜீவிதங்கள்!
இறைவனின் பாதங்கள் தொழுதிடும் - சில!
இதயங்கள் என்றுமே அழுதிடும்!
இதுகூட இயற்கையின் நியதியோ - அவனியில்!
இவர்வாழ்வில் இன்பம் இனிவருமோ ?!
-சக்தி சக்திதாசன்

உன் வரவும் என் மரணமும்!

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
பட்டினத்திற்குத் தொழிலுக்காய்!
போன உன் வருகைக்காக!
காத்துக்கிடக்கிறது பண்டிகை!
பண்டிகைக்காய் வருகின்ற!
உனக்கென்று என்னை முடிக்க !
நிச்சயம் செய்த நாளிலிருந்து!
உன் அம்மா மிகவும்!
ஆதரவோடுதான் இருக்கிறாள் என்னோடு!
உன்னை பிரிந்த தவிப்பில்!
உன் முகம் காணும் நாளுக்காய்!
தவமிருக்கும் உன் அம்மாவுக்குக் !
ஒரு பட்டு சேலையோ இல்லை!
உன் வசதிக்கேற்ப ஒரு!
கைத்தறி புடவையோ கொண்டுவரலாம்!
பண்டிகைகாய் வரும் நீ!
உன் தங்கைக்காய் பாவாடைத் தாவணி !
கொண்டு வரலாம்!
பள்ளிக்கூடப் புத்தகப் பை!
வரும் வீதிகளை!
பார்த்துப் பார்த்துக் காத்திருக்கும்!
உன் தம்பியின் ஏக்கம் தீர்க்கலாம்!
வீட்டைத் திருத்திக்கொள்ளும்!
உன் அப்பா எதிர்பார்ப்புகளுக்கு!
பணம் கொண்டு வரலாம்!
நண்பர்களுக்கு!
வாசனை திரவியமும்!
இன்னோரன்ன பொருட்களும்!
கொண்டு வரலாம்!
இன்னும் நீ!
உன் காதலிக்கும் இரகசியமாய்!
ஏதேனும் கொண்டுவரலாம்!
எல்லோருக்குமான உன் வருகையில்!
எனக்கு மட்டும் பகிரங்கமாக!
நீ கொண்டு வருவதென்னவோ!
மரணம் மட்டுமே!
அத்தனைப் பேருக்கும்!
பெருநாளாக நீ வரும் நாள்!
வந்துவிடக்கூடாது என்பதுதான்!
என் பிரார்த்தனையாய்!
.!
நீ வருகின்ற பண்டிகையில் நாளில்!
உயிரே வந்ததாய் உணரும்!
உறவுகளுக்கு ஆனந்த பந்தியாகி!
நாட்டுக்கோழின்னா நாட்டுக்கோழின்னு!
நா ருசித்து நீ மகிழும் நிமிஷத்தை !
எண்ணிய மரண பீதியில்!
அதிகாலையிலே அலறுகிறேன்!
ஆனாலும் சேவல் கூவிடிச்சு என்று!
எழுந்து அவரவர் கடமைகளில் மூழ்கும்!
உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல!
உனக்கும் கூட எப்படி புரியும்!
பஞ்சரத்துச் சேவல் என் தவிப்பு?!

என்னைத் தொலைத்த

சத்தி சக்திதாசன்
என்னைத் தொலைத்த(தொலைக்கும்) கணங்கள் !
!
அந்த ஒரு கணத்தில் !
அரசமரத்துக் கிளைதனில் !
அன்றில் ஒன்று தாவிய !
அழகு கண்டு நான் !
அந்தக்கணம் எனைத் !
தொலைப்பேன் !
!
அழகுவிழி மலர் கொண்டு !
அம்பொன்று என்மீது !
அவளெய்த போதன்று !
அரைவினாடிப் பொழுதினிலே !
அவசரமாய் நான் எனைத் !
தொலைத்தேன் !
!
பூவிரியும் சோலையிலே !
பூந்தென்றல் வீசுகையில் !
பூவிலந்த வண்டமர்ந்து !
பொழியுமந்தத் தேனருந்தும் !
பொன்மாலையில் நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கைநீட்டி காத்திருக்கும் சிறுவன் !
கண்களிலே ஏக்கத்துடன் !
கருணை எதிர்பார்க்கையில் !
கண்மூடித்திறக்குமுன்னே அவன் கையில் !
கச்சிதமாய் ஒரு நோட்டை !
கைகளினால் கொடுக்கையிலே !
கண்களை நம்பமுடியாமல் திகைத்து !
காற்றாய் அவன் பறக்கும் வேளையில் !
கண்நேரம் வாஞ்சையிலே நான் என்னைத் !
தொலைத்தேன் !
!
காற்றோடு காற்றாய் என் அன்னை !
கலந்து விட்ட பின்னாலும் !
கனவுலகில் சிலநேரம் காட்சியாகிக் !
கதைபேசி என்னோடு சேர்ந்து !
கவிதைகளை ரசித்திருக்கையில் !
கனவு எனும் கானகத்தில் நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
காதலினால் என்னைக் கட்டிப்போட்டு !
கலியாணம் என்னும் பந்தத்துள் அணைத்து !
கருணைமிகு மனதோடு கட்டுண்டு !
கடினமெனும் பாதையூடு கைபிடித்து !
கவலைதீர்ந்த ஊருக்கு அழைத்துச் சென்ற !
கண்மணி என் மனைவி தனை நினைக்கையில் !
காலமெல்லாம் நான் எனைத் !
தொலைப்பேன் !
!
தமிழ் என்னும் கன்னியொருத்தி !
தனைக்காட்டி எனை மயக்கி !
தரணியிலே வாழுமட்டும் மறக்காமல் !
தன்னோடு கலக்க வைத்து !
தாகம் தீருமட்டும் கவிதையென்னும் நீரூற்றி !
தகமதைத் தீர்க்கையிலெ நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கண்ணதாசன் என்றொரு கவிஞனின் !
கவிதையெனும் கானகத்தினுள் !
கண்மூடி நான் நடந்து வேண்டுமென்றே !
காணமல் வழிதொலைந்து !
களைத்துக் கண்மூடும்வரை !
கட்டாயமாக நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
அன்புதனை பயிரிட்டு !
அன்பையே அறுவடை செய்து !
அன்புடன் தமிழ் வளர்க்கும் !
அன்புடன் குழுமத்துக்குள் !
அன்புடனே நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கருவினிலே உருவாகி என் !
கைகளில் குழந்தையாய் !
கண்களில் ஒளியாகி !
கட்டிளம் காளையாக !
கடமையுடன் கல்விகற்கும் !
கண்ணான என் மகனின் !
கவரும் அந்தப் புன்னகையில் !
காற்றாகக் கலந்து நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
என்னைத் தொலைத்த கணங்கள் பல !
என்னைத் தொலைக்கும் கணங்கள் பல் !
எப்போதும் தொலைவதில் இன்பம் !
என்றும் கொடுப்பது தமிழும் கவிதையும் !
சக்தி சக்திதாசன்

ஜெல்லிக் கணங்கள்

தேவமைந்தன்
தேவமைந்தன் !
காலையி லிருந்து !
கணினி இயக்கி !
சொடுக்கி பிடித்து !
அழுத்தி அழுத்தி !
விரல்நுனி, இடுக்கு !
முழங்கை வரையில் !
அரிப்பும் பிய்ப்பும்-- !
டாக்டர் சொன்னார்- !
இதுதெரி யாதா? !
கணினி அலுவல் !
பார்க்கும் பலர்க்கு !
வரும்பதி மூன்று !
நோய்க்குறி தம்முள் !
ஒன்றுதான் இது!என. !
அவர்க்குத் தெரியுமா !
என்றன் ஜெல்லிக் !
கணங்கள் நழுவி !
நழுவிப் போவது? !
அருகில் குறட்டை... !
ஆழ்ந்து தூங்கும்-என் !
அருமை மனைவியை !
எழுப்பி விடாமல் !
மீண்டும் கணினி. !
எனது தோழி !
என்றும் கைவிடா !
உரிமைத் தோழன் !
எல்லாம் அதுவே! !
முகத்தைச் சுழித்து !
மோவாய் இடித்துப் !
பார்த்ததே இல்லை, !
நான் அதை. !
திடீரென மூளையை !
ஜெல்லிக் கணங்கள் !
வழுக்கின. காலம் !
பின்புறம் நகர, !
இதுவரை யில்நான் !
வாழ்ந்த கணங்கள்-- !
என்-கண் ணிமைகளின் !
மேலே அமர்ந்துதம் !
கால்களைக் கீழே !
தொங்கப் போட்டுக் !
கொண்டே என்னை !
ஆட்டி வைத்தன. !
எல்லாம் கொஞ்சம் !
நேரம்தான்! !
ஜெல்லிக் கணங்கள் !
தோற்றுப் போக !
மூளை- வேகம் எடுத்தது... !
மூளையின் வேகம்-முன் !
எந்த ஒன்றின் வேகமும் !
எடுபடக் கூடுமோ? !
சொல்லி விட்டுப் !
போயே விட்டார் !
அருண கிரியார்--- !
சும்மா இரு, சொல் அற! வாம். !
சொல்லற்றுப் போனதன் !
சுமையால் தானோ !
அருணைக் கோபுரம் !
மேலே இருந்து !
வீழ்ந்து பெற்றார்-- !
முருகன் அருளை? !
சும்மா இருப்பதுவே !
சுகம். ஆம்! !
சும்மா இருந்து !
பாருங்கள். தெரியும்! !
சும்மா இருப்பது !
என்பது வேறு !
தம்பீ! புரியுதா? !
என்று உங்களில் !
தத்துவம் யோகம் !
தெரிந்தவர் கேட்பீர். !
புரியும். ஆனால் !
இயலுமா அதற்கு? !
வெறுமனே இருக்கும் !
மூளையுள் ஆயிரம் !
ஆயிரம் எண்ணக் !
குதிரைகள் தாவும்! !
நாமோ எங்கோ !
இழுத்துச் செல்லப் !
படுவோம் மறதியுள். !
ஜெல்லிக் கணங்கள் !
வந்து நம்மைக் !
காத்தால் பிழைப்போம்