புதியமாதவி, மும்பை.!
எல்லா இடங்களிலும்!
தேடிப் பார்த்துவிட்டேன்.!
இத்தனைக் காலமும்!
பாதுகாத்துவைத்திருந்த!
சாவிக்கொத்தை.!
எந்தப் பூட்டுக்கு!
எந்தச் சாவி?!
சொல்லவில்லை யாரும்!
சோதிக்கவில்லை நானும்.!
சாவிக்கொத்தை!
இடுப்பில் சொருகிக்கொண்டு!
இருப்பதே பழகிப்போனதால்!
அச்சமாக இருக்கிறது!
சாவிகள் இல்லாத!
இடுப்பைச் சுமந்து கொண்டு!
திறந்தவெளியில் !
எப்போதும் போல!
எழுந்து நடமாட.!
யார் தந்தார்கள்!
என்னிடம் இந்தச் சாவிக்கொத்தை?!
எப்போதாவது!
எந்தப் பூட்டையாவது!
என்னிடமிருந்த !
எந்தச் சாவியாவது!
திறந்திருக்கிறதா?!
யோசித்துப் பார்க்கிறேன்.!
அம்மா,!
அம்மாவின் அம்மா,!
அவளுக்கு அம்மா,!
அம்மம்மா..!
இவர்களுடன் சேர்ந்து கொண்டது!
புதிதாகத் திருமணமாகி!
புக்ககம் வந்தப்பின்!
மாமியார் கொடுத்தச் சாவிகளும்.!
ஒவ்வொரு சாவிகளையும்!
பத்திரமாக வளையத்தில் கோத்து!
அலங்காரமான!
விலையுயர்ந்த வெள்ளிச்சாவிக்கொத்தில்!
தொங்கவிட்டு!
பாதுகாத்துவந்த !
எங்கள் தலைமுறையின் சாவிக்கொத்து!
காணவில்லை..!
தொலைத்துவிட்டேன்.!
இனி,!
எதைக்கொடுப்பேன்!
என் மகளுக்கும்!
வரப்போகும் மருமகளுக்கும்!!
எப்படியும்!
அவர்கள் கண்டுபிடிக்கவேண்டும்!
தொலைந்து போன சாவிக்கொத்தை அல்ல!
சாவிகள் இல்லாமல்!
பூட்டுகளை உடைக்கும்!
புதிய வித்தைகளை
புதியமாதவி, மும்பை