நெஞ்சமெனும் வானத்தில்!
எண்ணமெனும் தூரிகையால்!
வர்ணம் தீட்டிய வானவில்லாய்!
விளைந்து நின்ற பொன்மயிலே!
உள்ளமென்னும் தடாகத்தில்!
வெள்ளமான அன்பினிலே!
மலர்ந்து நின்ற தாமரையாய்!
மிதந்த வண்ணப் பூங்கொடியே!
பசுமையான இதயத்தினுள்ளே!
பயிராய் வளர்ந்த காதலுக்கு!
மழையாய் உந்தன் புன்னகையால்!
உயிரைத் தந்த மான்விழியே!
விரும்பாக் குணங்கள் மலிந்த!
இதயம் இரும்பாய் ஆனவரிடையே!
கரும்பாய் இனிக்கும் பூங்கொடியே!
காதலுக்கு அருமருந்தாய்ச் சுரந்தவளே
சத்தி சக்திதாசன்