அன்னையின் .. ஒலிச்சிகிட்டே
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்னையின் தபோவனத்தில்.. ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
01.!
அன்னையின் தபோவனத்தில்!
-----------------------------------------!
ஒரு நீர்த்துளிக்குள் கடல்... !
என்று அறிந்தும் இந்த வாழ்க்கை!
ஒரு மௌனத்தின் பிரவாகம் !
என்பதை யாவரும் அறிந்திலர்! !
இருட்டறைக்குள் உயிர் கொடுத்து !
தவமிருந்து பெற்றெடுத்த தாயுள்ளம் !
ஒரு தபோவனம்! !
வம்ச விருட்சத்தின் நாற்றங்கால்கள்!
இன்றளவும் நாம்தான் என்று பறைசாற்ற.... !
உன்னுள் இன்றளவும் எதை சாதித்தாய் !
என்று மனம் மௌனமாய் கேட்பது !
யாருக்கு தெரியப்போகிறது! !
ஆனால் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது !
இந்த மானுடம் வென்ற மௌன நித்திரை !
மரணமென்று!........!
இனிமேலாவது அன்னையின் தபோவனத்தில் !
ஒரு நிரந்தரப் பணியாளனாய் இரு!!
02.!
ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
--------------------------------------!
நெனவிருக்குதா பொன்னுத்தாயி !
நீயும் நானும் ஒண்ணா சேந்து !
நாலாவது படிக்கிறப்போ !
களத்துமேட்டுல ஓடிப்பிடிச்சி !
விளையாடும் போது.....!
என்ன மாடு முட்டி கீழ தள்ளுனத!!
கையில கட்டுபோட்டு !
வீட்ல இருந்தப்போ !
ஒன்னோட அம்மாவோட!
என்ன பார்க்க வந்தப்போ....!
'ஒங்க பொண்ணாலதான்!
எம் புள்ள கைய ஓடிச்சிகிட்டான்' !
அப்படின்னு ஆத்தா உன் ஆத்தாகிட்ட !
சண்டை போட்டு அனுப்பிடுச்சி! !
ஆனா....நீ ....எங்கிட்ட சொல்லிட்டுப் போனே...!
நான் விழுந்த எடத்துல !
ஒரு புளியங்கன்னு நட்டுவச்சி தண்ணிவூத்தி!
வளக்கறேன்னு........!
அதுக்கப்பறம் உங்க ஆத்தாவோட !
வேற ஊருக்கு போயிட்ட....!
இப்ப சரியா முப்பத்தஞ்சு வருஷமாச்சி....!
நம்ம ஊர் அங்காளம்மா கோயில்ல !
திருவிழாவுக்கு வந்தப்போ பாத்தேன்...!
நீ நட்டுவச்ச புளியமரம் வளந்து!
பூவும் பிஞ்சியுமா பாக்கறப்போ.....!
உன் நெனப்பு வந்துடுச்சி பொன்னுத்தாயி!!
ஆமா.... பொன்னுத்தாயி! !
இப்ப என் கை நல்லா இருக்கு!!
உன்னோட வேண்டுதல் பலிச்சிடுச்சி!!
ஆனா உன்னோட வாழ்நாள்ள...!
இந்த புளியமரமும் நம்மோட !
கண்ணாமூச்சியும்.....மறக்கமுடியாத !
பாதிப்ப உண்டுபன்னிடிச்சி.....!
அக்கம் பக்கத்துல சொன்னாங்க....!
போன வாரம் நீ உன் புருஷன் கொழந்தையோட !
ஊருக்கு வந்து இந்த புளியமரத்தடியில !
பொங்கல் வச்சி சாமி கும்மிட்டேன்னு.....!
மனசு தாங்காம என் நெஞ்சுலே!
ஒரு கேள்வி மட்டும் திரும்ப திரும்ப !
ஒலிச்சிகிட்டே இருக்கு.....!
என் சாமியே சாமி கும்பிடனுமா?