மின்னல்.... மின்னல் - பட்டுக்கோட்டை தமிழ்மதி

Photo by Paul Esch-Laurent on Unsplash

எங்களூர் இருட்டு வீதியில் !
எரிந்தும் எரியாமலும் !
இமைக்கும் !
குழல் விளக்கின் குளிரொளியா? !
இல்லை !
வானமென்ன உடைந்தாவிட்டது? !
அங்கே !
ஒட்டவைக்க !
மின் பற்றவைப்பா? !
இல்லை !
நிலம் பார்க்கும் !
நிழற்படக் கருவி !
வானிருந்து படமெடுக்க !
வரும் ' பளிச் ' ஒளியா? !
இல்லை !
சூரியன் இழுத்துப்போன !
வெளிச்சம் கொஞ்சம் !
இருட்டில் ஒளிந்ததா? !
அதை யாரோ கண்டுபிடுத்துவிட !
அந்த வெளிச்ச குதிரை விரைந்தெங்கோ !
ஓடுவதின் சுவடொளியா? !
இல்லை !
ஊருக்கு !
கருப்புமேகத்தை கடந்துபோகும் !
வெள்ளை விமானமா? !
இல்லை... இல்லை... !
மேகக் கூடையில் !
பூந்தேனாய் சேர்ந்திருக்கும் !
நீர்த்துளி துளிகள் !
நேர் எதிர் மின்னூட்டம் பெற்று !
நிகழும் !
மின்னோட்டச் சந்திப்பே !
மின்னல்... மின்னல்
பட்டுக்கோட்டை தமிழ்மதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.