கல்லும் மண்ணும் !
மறுபிறவி யெடுத்து !
சுயவடிவம் பெற்றதுபோல் !
ஓரமாய் ஒதுங்கிக்கிடக்கிறது. !
எங்கள் வீடுகளெல்லாம் !
வீதிக்கு வந்து !
மாதங்கள் பலவாகிவிட்டன !
வீதியாய்மாறிவிட்ட பல !
வீடுகளும் உண்டு. !
தரை கரையெல்லாம் வெறிச்சோடிக் !
கவனிப் பாரற்றுக் கிடக்கிறது !
அலைகள் மட்டும் !
மீண்டும் மீண்டும் !
சீண்டிப் பார்க்கிறது !
கரையை நக்கி நக்கி. !
ஆயிரம் ஆயிரம் உயிர்களை !
அப்படியே ஏப்பமிட்டும் !
அமைதியாய் அடங்கிக் கிடப்பது !
அந்த ஆழி மட்டும்தான். !
மெல்ல மெல்ல அடியெடுத்து !
மணற்பரப்பை நோக்கி நகர்கிறேன். !
வாசனை - மண்ணின் வாசனை !
வாரி நெஞ்சில் தடவிக்கொள்கிறேன் !
இன்னும் மாறவில்லை !
இந்த மண்ணின் வாசனை மட்டும்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்