இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை !
தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது!
வஞ்சக வானம் விதைத்த!
பெருஞ்சீற்றத் திமிர் பிடித்த காற்று...!
பாலின வேறுபாட்டின் மங்கலான ஒளியில்!
நெல்லெனப் பதரைத் தாங்கிய விதைகளை!
விழுங்கி பசலை கொள்கின்றது!
விளை நிலம்... !
விதைக்கப்பட்ட விதைகள்!
பதரென உமிழ்கின்றன!
ஒரு வீணடித்த தலைமுறையை...!
ஆங்கொரு மூலையில்,!
விளை நிலங்களை ஒத்துவிடும்!
தலைமுறையை தேடி உருவாகிறது!
சீற்றத்திமிர் கொண்ட காற்று!
மிகச்சிறியதொரு சுழலென...!
ராம்ப்ரசாத், சென்னை