ஞாயிற்றுக்கிழமை!
நேரம் நான்கு மணிதான்!
மனிதர்கள் இருப்பதாக!
தெரியவில்லை !
காற்றுடன் !
போராடிக் கொண்டிருக்கும்!
மரங்களும் !
குளிரும் மழையும் !
நானும்தான்.. !
அயல் வீடுகளில் !
இருள் குடிவந்திருக்கிறது!
வாகனங்களுக்குக்கூட!
இன்று ஓய்வுபோலும்!
தொலைபேசி அடிக்கடி !
சிணுங்கிக்கொண்டிருக்கிறது!
எப்பவோ நான் !
மறந்துபோன!
காதலன் இன்றும்!
அழைக்கிறான்!
நண்பியின் சலிப்பான !
வார்த்தைகள் !
ஒலிப்பதிவு நாடாவில்!
யாருடனும் !
பேசவேண்டும்போல் !
இல்லை!
எதைப்பற்றியும் அறியவோ!
சிந்திக்கவோ!
ஆசையும் இல்லை!
போர்வையின் !
கணகணப்பான !
அணைப்பிலிருந்து!
உடல் அசைய மறுக்கிறது
றஞ்சினி