சில நேரங்களில் !
என் உறக்கத்தின் போதும் என்னோடு!
உறவாடிக்கிடப்பாயே!
உறங்காமல்....!
நீ ஓட்டப் பந்தய வீரனல்ல இருந்தும் !
நீ ஒடுவதால் தான் உனக்கும் என்னகும் !
ஒர் உன்னத உறவு !
இன்னும் தொடர்கிறது..... !
உன்னைப் படைத்தவனுக்குத் தொரியுமா? !
நான் உன் சொந்தக்காரனென்று..... !
உனக்கு ஞாபகமிருக்கிறதா !
ஒரு நாள் !
உன் முகம் முழுவதும் கண்ணிர்த்துளிகள்.... !
கேட்டதற்குச் சொன்னாயே !
ஒர் காரணம் !
மன்னித்துக்கொள் தெரியாமல் நனைத்து விட்டேன்... !
மனிதருக்குத்தான் நிறைய !
போலி முகங்கள் !
உனக்கு என்றும் ஒர் முகம் தான்.. !
உன்னை என் தாத்தா வைத்திருந்தாராம் பின் !
என் தந்தை வைத்திருந்தாராம் !
இப்போது நீ என்னிடம.... !
உன் துடிப்பும் !
என் இதயத்துடிப்பும் ஓன்றுதான்..!
நீ!
சோம்பிக்கிடந்தால் !
உன் காதைத்திருகுவேன் !
உடனே துடிப்புடன் சுழல்வாயே.. !
என் அருமைக் கை கடிகாரமே... !
இராண்டு !
நாட்களாய் நீ இன்றி !
உன் முகமின்றி !
என் கை தோன்றுகிறது!
விதவையாய்
நிலா மகள்