காற்றுகள் பல வந்தும் !
கலங்கிடாமல் நிற்கின்ற !
ஆற்றலுள் ளொன் நானென்று !
அகங்காரம் கொண்ட ஒரு !
வாட்டமுள்ள ஆல மரம் !
வாழை யொன்றை நோக்கியது!!
சிறியவனே நீ இந்தச் !
செகத்தினிலே வாழ்ந்து விடும் !
அரு கதையோ சில காலம் !
அறிவாயோ என்று ரைத்துப் !
பெருஞ் சத்தம் போட்டுத் தன் !
பேரிரைச்சலைக் காட்டியது !
வாழை மரமோ வாய்திறவா(து)!
வருத்தமுடன் நிற்கையிலே !
காலையிலே வீசிய புயற் !
காற்றதனால் எதிர் நின்ற !
அவவால மரம் விழுஞ் சத்தம் !
அவ் வாழைக் கொலித்ததுவாம் !!
கலைமகள் ஹிதாயா றிஸ்வி