தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உயிரில் பூத்ததுங்க‌

த.எலிசபெத், இலங்கை
அடியே கருவாச்சி!
நாந்தூங்கி நாளாச்சி!
உன்னநா(ன்)சந்திச்சி!
உள்மனசும் பித்தாச்சி...!
!
வேல செய்யயில‌!
வேள்விழி ஞாபகந்தான்!
நாள கடத்துறேன்டி!
நானுமுன கைப்பிடிக்க...!
!
பக்கத்தில நீயும்வந்தா!
பக்குனுதான் தீப்பிடிக்க‌!
பார்வ ஒன்னவீசுறியே!
பாவலனா நானுமானேன்...!
!
கூலிவேல செஞ்சிடுவேன்!
கூடைகூட தூக்கிடுவேன்!
கூடவே நீயுமிருந்தா!
குட்டி சொர்க்கம் தந்திடுவேன்...!
!
கால நேரங்கூடிடுமா!
காவல் தெய்வமேவிடுமா!
சாதி ரெண்டுமட்டுமின்னு!
சட்டம் இங்கவந்திடுமா...!
!
அப்பனாத்தா சண்டையில‌!
அஞ்சி நிக்குது பிஞ்சுமனம்!
தப்புதான்னு புரிஞ்சாத்தா!
நாம ஒன்னா சேர்ந்திடலாம்...!
!
எட்டிநின்னு சொல்லிடுவோம்!
தட்டி கேட்டு ஜெயிச்சிடுவோம்!
க‌ட்டிவச்சு அடிக்கவந்தா!
முட்டிதள்ளி முளைச்சிடுவோம்...!
!
நிறத்தப்பார்த்து வந்ததில்ல‌!
நிஜமாய் உயிரில் பூத்ததுங்க‌!
மறக்க சொல்லி எந்திரிச்சா!
மலையக்கூட சாச்சிடுவோங்க

வறுமை

துர்கா
வார்தைகளால் வர்ணித்தறியா!
கொக்கரிக்கும் வறுமைத் தடங்கள்!
நரகத்தின் வாழ்விடமாய் நாளும்!
நசுக்கப்படுகின்ற சுதந்திர போக்குகள்!
சுவாசிப்பை மறந்து நேசிப்பை!
வருத்தி ஒவ்வொரு நாளும்....!
ஒவ்வொரு நொடியும் முடிவை!
நோக்கிப் பயணப்பட!
நெஞ்சம் திளைத்திருந்த பொழுதினில்!
மௌனமே பதிலாய் வெடித்துச் சிதறியது

நிகழ்கணத்தின் வலி

சித்தாந்தன்
எங்களுக்கிடையில் பொம்மை!
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது!
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்!
அதன்கண்கள் !
சூரியனிலிருந்து வந்திறங்குகின்றன!
பொம்மையுடனான சிநேகிதம்!
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது!
நாம் சிரித்தோம்!
அது பொம்மையின் சிரிப்பு!
நாம் அழுதோம்!
அது பொம்மையின் அழுகை!
நாம் கூத்தாடினோம்!
அது பொம்மையின் களிப்பு!
மேலும் புதிய புதிய பொம்மைகளால்!
எமதுஅறையை அலங்கரிக்க விரும்பினோம்!
எமது உலகத்தினது அற்புதங்களை!
பொம்மைகளிலிருந்து ஆரம்பிக்கலானோம்!
பொம்மைகளுக்கிடையில்!
பொம்மைகளாய் வாழ்வதிலும் கொடிது!
மனிதர்களுக்கிடையில்!
பொம்மைகளாய் வாழ்வது!
இன்றைய விருந்தினர்கள்!
பொம்மைகளையே பரிசளிக்கின்றனர்!
ஒரு பொம்மை பற்றிய கவிதையை!
பொம்மையிலிருந்து ஆரம்பிப்பதை விடவும்!
எம்மிலிருந்து தொடங்குவதே நல்லது!
நீண்டோடிய நாட்களின் பின்!
இன்றுதெருவுக்கு வர நேர்ந்தது!
மனிதர்கள் எம்மைச்சூழ்ந்து கொண்டு!
கற்களை வீசினர் தூசித்தனர்!
உடல் கிள்ளிக் கொண்டாடினர்!
எமது அழுகையை !
பொம்மைகளினது அழுகை என்றனர்!
எமது கண்ணீரை !
பொம்மைகளினது கண்ணீர் என்றனர்!
கடைசியில் நாம் !
பொம்மைகளாகவே இறந்துபோனோம்!
- சித்தாந்தன்

குவிதை

பாண்டித்துரை
கவி ஆக்கம்: பாண்டித்துரை!
ஆரம்பத்தில்!
இப்படித்தான் ஆரம்பித்தது!
என்னவளே!
கொஞ்சிக் கொஞ்சி என!
இரண்டுவரி பேசி!
பின்னொரு நாளில்!
மூச்சை இழுத்துப் பிடித்து!
முழுபப்பமாய்.!
முதலியார் பற்றி ஒரு நாள்!
முப்பாத்தம்மாள் பற்றி ஒரு நாள்!
திடிரென ஒரு நாள்!
வெட்டு குத்து இரத்தம் என!
வாடை அடித்தது!
நிறம் மாறும் பச்சோந்தியாய்!
நித்தமும் மாறியது!
சில நாட்கள் வேதாந்தம்!
ஆன்மிகம் அரசியல் என!
என்னொன்னவோ பேசி!
கடைசி வரை பேசவில்லை!
என்னைப்பற்றி!!
!
கவி ஆக்கம்: பாண்டித்துரை!
தொடர்புக்கு: 006597345497

அப்படியொரு.. டிலிட் பாக்ஸில்.. மழை

வித்யாசாகர்
01.!
அப்படியொரு வீடிருந்தது; நான் பிறந்த வீடு!
---------------------------------------------------!
எனக்கொரு வீடு இருந்தது.. !
அங்கே எனக்கொரு போர்வை!
எனக்கென ஒரு தலையணை !
எனக்கென எல்லாவற்றிலும் ஒரு தனியிடம் இருந்தது..!
என் தலையணையிடம் நான் நிறைய!
பேசியிருக்கிறேன், அழுதிருக்கிறேன்!
தனிமையை அதனோடு தொலைத்திருக்கிறேன்..!
வீடு அதையெல்லாம் அமைதியாகப் பார்க்கும்!
நான்கு கைகொண்டு வீடு எனை!
அணைத்துக் கொள்ளும்..!
எட்டி வெளியே பார்த்தால்!
வாசலில் மல்லிகைத் தெரியும்!
மல்லிகை வீடெல்லாம் எனக்காக மணக்கும்..!
மல்லிகை எனக்கெனப் பூத்திராவிட்டாலும்!
தினமும் பூக்கும் மல்லிகைச் செடியொன்று எனக்கென !
அந்த வீட்டில் இருந்தது..!
அந்த வீட்டில் அப்பா எனக்கு!
முத்தமிட்டிருக்கிறார்!
அம்மா என் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சியிருக்கிறாள்..!
நான் எடுத்த முதல்மதிப்பெண்ணின் அங்கீகாரம்!
சந்தோசங்களெல்லாம்!
அந்த வீட்டில்தான் புதைந்திருக்கின்றன..!
என் தோழி என்னருகிலமர்ந்துப் பேசிய மாலைநேரம்!
அவளென் மடியில் சாய்ந்துக் கொண்டு!
எனைப் பார்த்த பார்வையின் தருணசுகம் !
அவள் புரட்டிப் புரட்டிக் காட்டிய புத்தகத்தின் வாசத்தில்!
கலந்திருந்த அந்நாட்களின் ரசனைகள் என!
எல்லாமே அந்த வீட்டின் திறந்த கதவுகளைத் தாண்டி!
காலத்தால் மூடப்பட்டுக் கிடக்கிறது.. !
நான் கண்ட முதல் கனவு!
ஒவ்வொரு முடிச்சாக கழன்று விழுந்த!
எனக்கும் அந்த வீட்டிற்கான நெருக்கம்!
இனி கிடைக்குமா என நான் ஏங்கி நழுவவிட்ட எல்லாமே!
அந்த வீட்டிலிருக்கிறது..!
அந்த வீட்டில் நான் பிறந்த நொடியின்!
கனம் இன்றும்!
சந்தோசத்தால் நிறைந்தேயிருக்கிறது..!
நான் சத்தமிட்டு சிரித்த சிரிப்புகளையும்!
அந்த வீடுவிட்டு வருகையில் அழுத கண்ணீரையும்!
இன்னும் பத்திரப்படுத்திக்கொண்டேயிருக்கிறது அந்த வீடு..!
எனக்கென இன்னும் ரெண்டு மனசு அங்கே!
ஏங்கி அழுது என் கால்மிதிபடும் நாளெதிர்பார்த்து!
என் நிம்மதியை இரைஞ்சிய படியே வாழ்கிறது..!
என் உயிர் எனக்குத் தெரியாமலே!
புதைபட்ட அவ் வீட்டின் இணக்கத்தை இடைவெளிப் படுத்திய!
இச்சமூகத்தை மனம்விட்டு சபித்தால் தானென்ன? !
போகட்டும்,!
போகட்டும்தான் ஆனால் !
அந்த வீடு ?!
அந்த வீடு ஒரு ஏக்கத்தின் பெருமூச்சு!
எனக்கென அப்பா அம்மா அண்ணன்!
அவர்களுக்கென நான் என ஒரு ஒட்டுமொத்தப் பேரின் !
பெருமூச்சில் தான் உயிகொண்டிருக்கிறது அந்த வீடு.. !
இப்போதும் வருடங்கழித்து அங்கே செல்கையில்!
மண்தரையில் கைவைத்து அந்த வீட்டின் நினைவுகளை!
களைத்துப் பார்த்துக் கொள்கிறேன்..!
ஒரு தேம்பிய அழையின் கண்ணீர்சிந்தி!
அந் நினைவுகளையெல்லாம்!
அங்கேயே புதைத்துவிடுகிறேன்..!
அந்த வீட்டை நினைவுபடுத்தும் பாடல்!
திரைப்படம் தொலைக்காட்சியைக் கூட !
இங்கு வந்தால் பார்க்கமறுக்கிறேன்.. !
ஏதோ கலங்கிய உணர்வினைக் கண்டு!
என் குழந்தைகள் கணவர் அத்தையிங்கே விசாரிக்கையில் !
ச்ச ச்ச ஒன்றுமில்லையே என சற்றே உதறி விடுகிறேன் அந்நாட்களின்!
அவ்வீட்டின் நினைவுதனை !
அது கண்ணீராய் அடைபட்டு !
என்றேனும் கத்தியழுதுவிடும் ஒரு நாளிற்குள் புதையுண்டுக்!
கிடக்கிறது; உள்ளிருக்கும் மரணம்போல்!!!
02.!
டிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்..!
-------------------------------------------------------------!
கவிதை வெளிவராததொரு வலி தெரியுமா?!
பேசுபவளின் நாக்கறுத்துக் கொண்டதைப் போல!
அமரும் மௌனத்தின் கணம்!
கவிதை எழுதவராத தவிப்பின் பன்மடங்கு வலி!
கவிதை வெளிவராத போதும் வருவதுண்டு.,!
ஒவ்வொரு வார இதழ்களின்!
பக்கங்களையும் வாரம் முழுதும் காத்திருந்துவிட்டுப்!
புரட்டுகையில்!
தனது கவிதை வெளிவராத இதழ்!
தீயைப் போலே உள்ளே!
இருக்கும் கவிதைகளையும் எரிக்கத் தான் செய்கிறது.,!
பசிக்கும் குழந்தை ஓடிச் சென்று!
சமையலறைப் புகுந்து!
ஒவ்வொரு சட்டியாக இதில் சோறிருக்கா!
இதில் சோறிருக்கா யெனத் தேடுமொரு!
வலி நிறைந்தப் பசியது.,!
என்றாலும், தன்னை புதைத்துக் கொள்ளாமலும்!
எரித்துக் கொள்ளாமலும்!
வாரவாரம் சாகும் பல இதயங்களின் மரணத்தை!
மிதித்துக் கொண்டு யாரோ ஒருசிலரின் கவிதைகள்!
எங்கோ ஒரு சில இதழ்களில்!
எப்படியோ வந்துதான் விடுகிறது.,.!
வெளிவராத கவிதைகளெல்லாம்!
வெறுமனே யாரோ படிக்காத அல்லது!
பிரித்துக் கூடப் பார்த்திடாத தபால்களிலோ!
மின்னஞ்சல் வந்துவிழும் இன்பாக்ஸ்களிலோ!
யாருக்கும் அனுப்பப் படாமலே பெருகிக்கிடக்கும்!
டிராப்டாகவோ நிறைந்து நாட்களை மட்டுமே தின்கிறது.,!
பின் நாளொன்றில்!
மொத்தமாக ஒரு கிளிக் அடித்து!
எழுதியக் கவிஞர்கள் குப்பைகளாய் வந்துக் குவிந்திருக்கும்!
மின்னஞ்சல்களின் பெயரோடு சேர்த்து!
டிலிட் செய்யப்பட்டதில் –!
நானும் பலமுறை இறந்துதான்போனேன்...!
!
03.!
மழை; மழையதை வேண்டு.. !
-----------------------------------------!
மழை; மழையோடு கலந்துக்கொண்டால்!
இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்;!
மழையை இரண்டுகைநீட்டி வாரி!
மனதால் அணைத்துக் கொண்டால்!
இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்;!
மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு!
இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை!
உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை!
மழையில் நனைந்ததுண்டா!
நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை!
வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்..!
நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும்!
மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல்!
சோறில்லை!
மழையில்லையேல் வனமில்லை!
வனமில்லையேல் வறண்டு வெடித்து வெடித்துப் போவோம்!
மழைதான்; மழைதான் நமை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது!
நாமெல்லாம் மழையின் குழந்தைகள்!
மழை நம் தாய்க்கு ஈடு; பெற்றவளைப் பெற்றவளவள் மழை;!
காய்ச்சல் மழையால் வருவதில்லை!
மழைக்கு எதிராக நாம் பழகிவிட்டதால் மழை வலிக்கிறது!
மழையால் குடிசைகள் ஒழுகுவதில்லை –!
குடிசையின் ஈரத்திற்கு நம் மனஓட்டை காரணம்;!
குடிசைகளை குடிசைகளாய் ஆக்கியவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளென்றே பிரித்தவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளாகவேயிருக்க சபித்தவன் எவன் ? அவன்!
காரணம் மழைப் பெய்தலுக்கு நடுவே -!
குடிசைக்குள் ஒழுகும் மழைக்கும்;!
மனிதனின் மனக் கிழிசல்தான் ஆங்காங்கே!
குடிசைகளிலும் உடுத்தும் ஆடைகளிலும் தெரிகிறதே யொழிய!
மழைக்கு குடிசையும் சமம்; கோபுரமும் சமம்;!
உண்மையில் மழை வலிக்காது; மழை வரம்!
மழை வேண்டத் தக்க வரம்!
வெடித்த மண்ணுக்குப் பூசவும்!
வறண்ட நிலத்தைப் பூப்பிக்கவும்!
பேசாது மரணித்துப் போகும் மரங்களை காற்றோடு குலாவி!
கொஞ்சவைக்கவும் மழை வேண்டும்!
தன்னலமற்று பாயும் நதிகள் மனிதனுக்குப் பாடமாகி!
ஊரெல்லாம் நீரூரி!
மக்களைக் காக்கும் சாமியாக நதி பாய!
மழை வேண்டும்;!
சுத்தம் செய்யாத தெருக்களை!
அசுத்தம் அப்பிக் கிடக்கும் மனிதர்களை!
மனமாகவும் வெளியாகவும் கலந்து!
மனிதத்தை நிரப்பி மனத்தைக் கழுவவும் மழை வேண்டும்;!
மழை; ஒரு பாடுபொருள்!
கவிதைக்கு' மழை பாடுபொருள்!
கஞ்சிக்கு' மழை பாடுபொருள்!
கழுனியின் உயிர்சக்தி' இப்பிரபஞ்சத்தின் வேள்வி' மழை;!
மழையை வேண்டுங்கள்!
ஒரு விவசாயியைப் போல அண்ணாந்து கைதூக்கி!
மழையம்மா வாடி என்று கையேந்துங்கள்;!
மழைக்குக் கேட்கும்!
மழை வரும்; மழை வரும்; மழை வரணும்!!மழை; மழையோடு கலந்துக்கொண்டால்!
இப்பிரபஞ்சத்தின் ரகசியசப்தம் கேட்கும்;!
மழையை இரண்டுகைநீட்டி வாரி!
மனதால் அணைத்துக் கொண்டால்!
இப்பிரபஞ்சம் நமக்குள் அடைபட்டுக் கிடக்கும்;!
மழை இப்பிரபஞ்சத்தின் உயிர்ச்சாறு!
இவ்வுயிர்களின் வெப்பத்தில் கலந்து இப்பிரபஞ்ச வெளியை!
உயிருக்குள் புகுத்தும் ஒரு தூதுவன்; மழை!
மழையில் நனைந்ததுண்டா!
நனையாதவர்கள் நனைந்துக் கொள்ளுங்கள்; மழை!
வரும்போது அண்ணாந்து முத்தமிடுங்கள்..!
நாமுண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றுக்ககத்தும்!
மழையே உயிராக கரைந்துள்ளது; மழையில்லையேல்!
சோறில்லை!
மழையில்லையேல் வனமில்லை!
வனமில்லையேல் வறண்டு வெடித்து வெடித்துப் போவோம்!
மழைதான்; மழைதான் நமை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது!
நாமெல்லாம் மழையின் குழந்தைகள்!
மழை நம் தாய்க்கு ஈடு; பெற்றவளைப் பெற்றவளவள் மழை;!
காய்ச்சல் மழையால் வருவதில்லை!
மழைக்கு எதிராக நாம் பழகிவிட்டதால் மழை வலிக்கிறது!
மழையால் குடிசைகள் ஒழுகுவதில்லை –!
குடிசையின் ஈரத்திற்கு நம் மனஓட்டை காரணம்;!
குடிசைகளை குடிசைகளாய் ஆக்கியவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளென்றே பிரித்தவன் எவன்?!
குடிசைகளை குடிசைகளாகவேயிருக்க சபித்தவன் எவன் ? அவன்!
காரணம் மழைப் பெய்தலுக்கு நடுவே -!
குடிசைக்குள் ஒழுகும் மழைக்கும்;!
மனிதனின் மனக் கிழிசல்தான் ஆங்காங்கே!
குடிசைகளிலும் உடுத்தும் ஆடைகளிலும் தெரிகிறதே யொழிய!
மழைக்கு குடிசையும் சமம்; கோபுரமும் சமம்;!
உண்மையில் மழை வலிக்காது; மழை வரம்!
மழை வேண்டத் தக்க வரம்!
வெடித்த மண்ணுக்குப் பூசவும்!
வறண்ட நிலத்தைப் பூப்பிக்கவும்!
பேசாது மரணித்துப் போகும் மரங்களை காற்றோடு குலாவி!
கொஞ்சவைக்கவும் மழை வேண்டும்!
தன்னலமற்று பாயும் நதிகள் மனிதனுக்குப் பாடமாகி!
ஊரெல்லாம் நீரூரி!
மக்களைக் காக்கும் சாமியாக நதி பாய!
மழை வேண்டும்;!
சுத்தம் செய்யாத தெருக்களை!
அசுத்தம் அப்பிக் கிடக்கும் மனிதர்களை!
மனமாகவும் வெளியாகவும் கலந்து!
மனிதத்தை நிரப்பி மனத்தைக் கழுவவும் மழை வேண்டும்;!
மழை; ஒரு பாடுபொருள்!
கவிதைக்கு' மழை பாடுபொருள்!
கஞ்சிக்கு' மழை பாடுபொருள்!
கழுனியின் உயிர்சக்தி' இப்பிரபஞ்சத்தின் வேள்வி' மழை;!
மழையை வேண்டுங்கள்!
ஒரு விவசாயியைப் போல அண்ணாந்து கைதூக்கி!
மழையம்மா வாடி என்று கையேந்துங்கள்;!
மழைக்குக் கேட்கும்!
மழை வரும்; மழை வரும்; மழை வரணும்

வலி

மு. பழனியப்பன்
முதுகில் இருந்து!
வலியின் பயணம்!
உச்சந்தலை வரை பாய்கிறது!
வெந்நீர் ஒத்தடம்!
தேங்காய் எண்ணெய் பூச்சு!
எதற்கும் அடங்காமல்!
வலி பெருகும்!
எதிரில் பட்டவரெல்லாம்!
எதிரியாக எண்ணுகிறது மனது!
வலியின் உக்கரம்!
கூடுகிறதே அன்றி குறையவே இல்லை!
வலியோடு எத்தனை நாள்தான்!
பொழுதுகளை நகர்த்துவது!
வலிக்கும்போது தான் தெரிகிறது!
இந்த உடம்பு எவ்வளவு கனம் என்று!
வலிக்கும்போதுதான் தெரிகிறது!
இந்த உடம்பு எவ்வளவு வலிமையற்றது என்று!
வலிக்கும்போதுதான் தெரிகிறது!
இந்த உடம்பு இனி வேண்டாம் என்று!
வலி உடம்புக்கு மட்டுமல்ல!
உள்ளத்திற்கும்!
-மு. பழனியப்பன்

பெண்ணுரிமை

ஜான் பீ. பெனடிக்ட்
ஆணுக்குப் பெண்ணை!
அடிமையாக்குதல் பாவம்;!
பேனாக்கள் போர் முழக்கமிட!
பெருமையாய் எழுதுகின்றன!
ஆண் கவியும் பெண் கவியும்!
ஆதரிப்பார் யாருமின்றி!
அலைந்து கொண்டிருக்கின்றன!
ஆண் பிணங்கள் சில...!
சமபங்கும் வேண்டாம்!
சமத்துவமும் வேண்டாம்...!
எங்களையும் வாழவிடு!
என்ற எளிய கோரிக்கையோடு!!
-ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

பெண்

நவஜோதி ஜோகரட்னம்
போகம்;!
தெய்வம்,!
போர்த்திவைப்பு,!
மாறுபாடுகள்,!
அழகு; சில நியதிகளின்!
குறியீடு.!
தவிர்ப்புகள் தவிர்த்த பூரிப்பு!
அது இயற்கை.!
அழகை ரசிக்குமாப்போல்!
ஆண்களின் கோரத்துக்குள்!
சிக்கும் ஒரு இயந்திரமாகி!
சில நேரம்!
நாக்கிளிப் புழு போலவும்…!
ஒரு!
அருவருப்பாகவும்…!
குழந்தைகளை உற்பவிக்கும்!
இயந்திரம் போலவும்;!
வெறுப்பிலும் கலவி வேண்டும்,!
ஆண்குறிகளினால் அழுத்தப்படும்போது!
வலியோடும்…!
உடைந்து அடங்கும் போது!
இயலாத வளாகி…!
மாதம் மாதம்!
மாதவிடாய் கூட ஒரு அவஸ்தைதான்.!
பெண்;!
கண்ணீர்;!
வலி!
மனங்கள்…!
என் யோனி… வெறுப்ர்டன்!
போகம் மறுக்கும்!
என்னாலும் முடியும்!
உன்னை நிராகரிக்க…!
எனக்கும் ஒரு அருகதையிருக்கிறது.!
ஏனெனில்!
நான்!
ஒரு பெண்.!
!
-நவஜோதி ஜோகரட்னம்.!
லண்டன்!
6.2.2009

பாண்டித்துரை குறுங்கவிதைகள்

பாண்டித்துரை
01.!
புன்னகைளை அனுப்பிய வண்ணமாக!
இருக்கிறாள்!
தன்னை யாரும் கவனிக்கக் கூடுமென!
வண்ணாத்திப் பூச்சியை!
எட்டிப்பிடிக்க!
மேலே உயரும் கைகள்!
ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள!
இசை பிறக்கிறது!
ஆமோதிப்பதாய்!
நீளும் நாவினில்!
உதிக்கும் நீர் குமிழிகள்!
உடைந்து சிதறுகிறது!
கண் சிமிட்டலுடன்!
புதிதாய் மனிதன் கடந்து செல்கிறான்!
உலகம் சுற்றும் மருண்ட விழிகளுடன்!
மீண்டு வருகிறாள்!
இம்முறை!
கால்களும் உயர்ந்த வண்ணமாய்!
வண்ணாத்திப் பூச்சியை எட்டிப்பிடிக்க!
!
02.!
என் பேச்சை!
செவிமடுக்க!
யாரும் விரும்புவதில்லை!
நான் சின்னப்பையனாம்!
வாழ்வின் எதார்த்தம் புரியாதவர்கள்!
அத்தகு நிலைக்கு!
நானும் வரக்கூடும்!
என்முன் சென்ற!
யாரும் இருக்கப்போவதில்லை!
அப்பொழுது.......!
03.!
எப்பொழுதும் நமக்குள்!
ஒளிந்து கொண்டிருக்கும் உற்சாகம்!
நாம்- அவ்வளவாய் கண்டுகொள்வதில்லை!
நம்மை கடந்து செல்லும்!
துன்பம் மட்டும்!
கட்டாயப்படுத்தலால்!
கொஞ்சமாய் நம்முள் ஒட்டிக்கொண்டு!
முகம்முன் மொழிகிறது!
விசாரிப்புகளுக்கு ஆசைப்பட்டவனாய்!
நானும்.......!
04.!
அம்மாவிற்கும் அப்பாவிற்குமாக!
விட்டுத்தராத பழக்கவழக்கங்கள்!
புன்னகைகளப் புறக்கணித்து!
உனக்காக காத்திருந்தது!
இருவரும் ஒருவரை விரும்பி!
இடப்பக்கம் வலப்பக்கமாக!
இடைவெளிவிட்டுப் பயணித்தது!
ஜாலிடே மச்சான் என்று!
உள்ளே வெளியே!
உதட்டோர புகை!
புட்டி சப்தம் ஊறுகாய் என!
எல்லாமுமாய் சயனித்த பொழுதுகள்!
பிரியும் தருணத்தில் கண்ணீர் இருந்தாலும்!
மீண்டும் சந்திப்போவல்லவா என்று!
எட்டிப்பார்த்த மிச்சப்புன்னகை!
மின்னஞ்சல்!
தொல்லைத் தொடர்பு என கொஞ்ச காலம்!
பின் எப்போதாவது!
உன் ஞாபகம் இருப்பதாய்!
இறந்துபோன் என்னை நானே உயிர்ப்பித்தல்!
கடந்த மாதத்தில் பாபுவைப் பார்த்தேன்!
என்னை அவன் பார்த்தும் பார்க்காததுமாய்!
பேருந்தை விரட்டிப்பிடித்த நிமிடங்கள் மட்டும்!
இதுவரை 40 முறையாவது!
மறு ஒளிபரப்பாயிருக்கும்!
எல்லோருக்குள்ளும் பிளவுகள்!
முகுமூடியை அணிந்த வண்ணம் கடந்து செல்கிறேன்!
இன்னும் மழைத்தூறல் நின்றபாடில்லை.!
!
-பாண்டித்துரை!
நன்றி : பெப்ரவரி 08 யுகமாயினி பக்கம்: 43

அந்தநாளுக்காய்

இராமசாமி ரமேஷ்
நீ உதைத்த போதெல்லாம்!
உள்ளம் மகிழ்ந்து!
உணர்வுகளோடு வாழ்ந்தபடி!
நீ!
கைகளில் தவழும்!
நாளுக்காய் காத்திருந்தேன்!
என்!
ஜீவநாடியை அடக்கி!
உன் வருகையின்!
வலியைப் பொறுத்துக்கொண்டு!
பூரிப்படைந்தேன்!
உன் பூமுகத்தை!
தரிஷிக்கப் போகும் திருப்தியில்...!
என்!
உணவுதனை சுருக்கி!
உன் பசிக்காய்!
ஓய்வில்லாமல் உழைத்தேன்!
தந்தையில்லா வலி!
உனக்கு!
வந்துவிடக்கூடாதென்று...!
நீ!
வாலிபம் தரித்தபோது!
உன் வாழ்க்கைக்காய்!
என் முதுமையைப் பாராது!
கல்விக்கும் செலவுக்கும்!
விழி மூடாமல்!
வழி தேடினேன்...!
என்!
எதிர்பார்ப்பைக் கலைத்து!
என்னவள் இவளென்று!
நீ காட்டிய பெண்ணை!
சேர்த்து வைத்தேன் உன்னோடு!
விருப்பப்பட்டு விட்டாயே!
என்பதினால்...!
குடியிருந்த வீட்டையும்!
சோறு போட்ட நிலத்தையும்!
கூறுபோட்டேன் உனக்காக!
என் பிள்ளை!
வசதியாக வாழ வேண்டும்!
என்பதற்காக...!
நீயோ...!
தலைநகரம் ஓடினாய்!
தொழில் செய்தாய்!
கை நிறையச் சம்பாதித்தாய்!
மழலைகளைப் பெற்றெடுத்தாய்!
மனநிறைவோடு வாழ்கிறாய்;...!
நான்!
உன் உழைப்பையோ!
உனதான சொத்துக்களையோ!
கேட்கவில்லை...!
ஒருதடவை!
ஊர்வந்து!
அம்மா என அழைத்து!
ஒருவேளை ஒன்றாக!
என்னோடு உணவருந்தினாலே!
போதுமடா மகனே!!
போதும்...!!
அதற்காகத்தான்...!
இத்தனை நாட்களாய்!
பிரியப்போகும்!
என்னுயிரைப் பிடித்தபடி!
காத்திருக்கிறேன்...!
நீ வரும்!
அந்தநாளுக்காய்