டி வி -யைப் பார்த்தபடி-!
நான் பார்க்கவில்லை!
அது ஒரு இன்டெராக்டிவ் கருவி!
நான் அதனுள்....!
என் மகனே!
நீ எப்போது போனாய்,!
உன் பள்ளியின் இறுதியிலா!
முன்னமேயா!
சரியாக எனக்குத் தெரியவில்லை!
உன்னுடைய பறத்தல்!
அவ்வளவு கரவாக!
நானறியாது...!
அறிந்தது!
இது மட்டு மெ!
நீ சென்றுவிட்டாய்!
மெய்யாலுமே...!
அவசியாமான!
(கட்டாயமான?!
இல்லை- தவிர்க்கவியலாத!)!
இழப்பு!
நான் அழுவதா?!
ஏதோ ஒரு சலனம்!
டி வி யில்!
என்னை பங்கேற்க அழைப்பு-!
நான்!
பார்வெர்ட் பொத்தானை அமுத்தி!
உன்னைப் பிடிக்க முடியுமா?!
இன்னொரு எபிசோடில்!
வேறொரு நேரத்தில்!
உன்னையே போன்றதொரு!
சாயலில்?!
இல்லை..!
இது சாத்தியம் இல்லை!
எனக்குத் தெரியும்!
நீ தனி.. !
நகலில்லா ஒரே பிரதி!
எதன் சாயலும் அற்ற!
எதன் பிம்பமாயும் இல்லாமல்!
என்ன்ன மிச்சம்!
என்னிடம்!
ஆவிகள் தவிர!
பூதமோ (பிசாசா?)!
தவிர?!
செல்லுலாய்ட்!
பிரதிபலிப்புகள்!
தவிர....!
- அ.தியாகராஜன்

A. தியாகராஜன்