மனமுடைந்து சிதறிய!
துகள்களின் நிழலில்!
குளிர்காயும் ஞாபகங்கள்...!!
கருவிழி அசையாது அர்த்தமின்றிப்!
பார்த்திருக்கும் கண்முனை வெற்றிடத்தில்!
அர்த்தமிகு ஆயிரம் கனவுகளின் வீதிநாடகம்...!!
சொல்வார்த்தை கேட்காமல்!
சற்று தனிமை விரும்பி முன்னிருந்த!
தேநீர்க் குவளையில் குதித்தது கனவொன்று...!!
கடைவிழி முறைப்போடு மெல்ல மெல்ல!
பருக, தீர்ந்துபோனது கனவல்ல!
சலனமின்றி சில நினைவுகள் மட்டும் தான்...!!
வார்த்தைத் தொகுப்புகள் கைகூடாது!
நழுவிட எட்டிப்பிடிக்கையில்!
விழுந்து நொறுங்கியது தேநீர்க் குவளை....!!
நொறுங்கிய துண்டுகளில்!
என் கனவுகளின் உருவங்களும்!
மிச்சம் சிந்திய தேநீரில் என்!
நினைவுகளின் ஈரமும் கண்டேன்...!!
கருவிழிகள் சலனமுற்று!
சிந்திய விழிநீர் முத்துக்களின்!
பிரிதலும் என்னை மீண்டும் கனவுகளில்!
தள்ளிவிட்டு சிரித்தன
கலாசுரன்