01.!
மழைக்கடுதாசி !
--------------------!
அன்றும் மழை!
பெய்து கொண்டிருந்தது!
நீர்த்திவலைகளை வாரி!
இறைத்துக்கொண்டு,!
மூடிய கதவின் பின்!
தபால் பெட்டியில்!
சிறு ஓட்டை வழி!
கடிதங்களும் சிறிது!
நனைந்து தான் விட்டது.!
அனுப்புனர் விலாசம்!
எழுதும் இடத்தில்!
முழுதும் மழைத்துளிகள்!
அன்றும் மழை!
பெய்து கொண்டிருந்தது!
!
02. !
ஆர்வமழை !
---------------!
மழையில்!
எந்த மழை சிறந்தது?!
சிறு தூறலா,!
இல்லை அடித்துப்பிளக்கும் மழையா?!
வெறுமனே போக்குக்காட்டி விட்டு!
போகும் மழையா?!
அல்லது!
சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில்!
கிளையிலிருந்து!
சட்டெனப்பறந்து போகும்!
பறவை போல,!
தூறிக்கொண்டிருந்து விட்டு!
சட்டெனக்கலையும் மழையா? !
அல்லது!
நேற்றுப்பெய்த மழையா ?!
இல்லை, அது கொஞ்சமே பெய்தது.!
இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா?!
அது இன்னும் பெய்து முடியவில்லையே!
பிறகெப்படி சொலவது ? !
அன்று பெய்த மழை,!
நேற்று பெய்த மழை!
இன்றும் பெய்யும் மழை!
நாளைக்கு பெய்தாலும்!
பெய்யும் மழை !
எதுவானால் என்ன ?!
அதுவும் மேலிருந்து!
கீழிறங்குவதைப்!
பார்ப்பதில் தான்!
நமக்கு!
எத்தனை ஆர்வம்...?
சின்னப்பயல்