சுனாமி - நல்ல தருணம் - மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Photo by Patrick Perkins on Unsplash

அழகிய அக்பர் கிராமம்!
அன்பான மௌலானா வீட்டுத்திட்டம்!
இன்னொரு இருபத்தைந்து மீனவர்திட்டம்!
இன்றைய மக்பூலியாபுரம் (அன்றைய பஞ்சாப்) என!
ஆண்டாண்டுகாலமாக எங்கள் முதியோர்!
ஆதியில் தடம் பதித்த!
சுவடுகளையெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்!
சுருட்டி எறிந்து விட்டாய்.!
பணம் நகை பாத்திரங்கள்!
பத்திரப் படுத்திய ஆவணங்கள்!
வீடுவாசல் எதுவும் வேண்டாமென!
வீதிக்கு ஓடிவந்த எம்மக்களை,!
உடுத்த உடைகள் கூட!
உடலில் காக்க விடாமல்!
உக்கிரமாய்ப் பிய்த் தெடுத்து!
உள்வாங்கிக் கொண்டாய் நீ!!
பிறக்கப் போகும் பிள்ளையையோ!
இறக்கப் போகும் தறுவாயையோ!
கண்டுகொள்ளாமல் குருவிக் கூட்டுக்குள்!
குண்டு வைத்ததுபோல் ஆக்கிவிட்டாய்!!
ஆக்குவதும் அழிப்பதும் நீதான்!
அவனியிலே அதற்கு இணையில்லை!
எனவுணர்த்தவா ஆழிப்படைகளை அனுப்பி!
அரைமணிக்குள் ஆக்கிரமித்து விட்டாய்!!
ஆகாயம் கடல் தரையென!
அதி நவீன ஆயுதங்கள்!
அதிலும் உயர் தொழிநுட்பம்!
அத்தனையும் இருந்தென்ன பயன்?!
கடல் ஆகாயம் தரைகளையே!
படைகளாக்கி ஆட்டங் காணவைப்பேன்!
என நீ உணர்த்திவிட்டாய் -!
அகிலத்தையே நடுநடுங்க வைத்துவிட்டாய்.!
கடலில் கால் பதித்து!
அலைகளை அள்ளி முத்தமிட்டு!
அணைத்து புரண்டு விளையாடி!
ஆனந்தப் பட்ட நாங்கள்,!
ஆலை என்றதும் அலறி அடித்துக்கொண்டு!
ஏறுதற்கு இடம் தேடுவதையும்!
ஓடுதற்கு வழி பார்ப்பதையும்!
வேடிக்கை பார்ப்பதற்கா எங்களுயிர் காத்தாய்?!
இல்லையில்லை இது எச்சரிக்கை மட்டும்தான்!
இன்னும் உன் தண்டனை இறங்கவில்லை!!
இரவு பகலாகவும் பகல் இரவாகவும்!
சூரியன் மேற்கிலும் விழிகள் உச்சியிலும்,!
மாறும் நாள் வருவதற்குள் எங்களை!
மாற்றிக் கொள்ள ஒரு சந்தர்ப்பம்!
இது ஒரு நல்ல தருணமும்கூட!
உன்னை நன்கு புரிந்து கொள்வதற்கு
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.