ஈழம் உனக்கேயடா - இமாம்.கவுஸ் மொய்தீன்

Photo by FLY:D on Unsplash

ஈழம் உனக்கேயடா!!!
------------------!
எப்படி மாறிவிட்டது உலகம்- மனிதா!
எப்படி மாறிவிட்டது.!
உரிமை கேட்பவன்!
ஒடுக்கப் படுகிறான்!
உரிமை மறுப்பவன்!
மதிக்கப் படுகிறான்.!
தன் இனத்துக்காக!
மொழிக்காக!
நாட்டுக்காகப்!
போராடுபவன் - தெரு!
நாயைப் போல் அடிக்கப்படுகிறான்!!
தீவிரவாதி!
சமூக விரோதி!
அழிவுச் சக்தியென!
நிந்திக்கப் படுகிறான்!!
நிராயுதப் பாணியாய்!
இருப்பவன் பக்கம்!
நியாயமும் நிற்பதில்லை!!
நீதிகேட்கும் போராளிப்பக்கம் !
நித்தம் நித்தம் தொல்லை!!
ஆயுதம் தாங்கி !
அக்கிரமம் செய்பவரை!
எவரும் கேட்பதில்லை!!
அவன் ஊரையழித்தாலும்!
உயிர்களழித்தாலும் - உலகம்!
கண்டு கொள்வதில்லை.!
ஈழம் ஆனாலும்!
ஈராக் ஆனாலும் !
குற்றவாளியாய்க் !
கருதப்படுபவன் !
மண்ணின் மைந்தனே!!
கல்லை எறிந்து!
எதிர்ப்பைக் காட்டுபவன்!
தீவிர வாதியாம்!!
ஆயுதம் ஏந்தி!
உயிரை அழிப்பவன்!
பாதுகாவலனாம்!!
இருளில் மூழ்கி!
உறங்கிக் கிடக்குது!
உலகம் இப்போதடா!!
விழித்துக் கிடந்து!
போர் செய்துக் கிடப்பது!
வீரர் நீங்களடா!!
விடியும் நிச்சயம்!
மடியும் பகைமை!
வெற்றி உன்னதடா! !
விடுதலை கிடைக்கும்!
உலகே போற்றும்!
தமிழீழம் உனக்கேயடா!!!
- இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.