யாரும் யாருக்காகவும் இல்லை என்றபோது!
இந்தப்பூமியில் இல்லை!
பாதாளமும்!
கோபுரமும்!
நான் தேடினேன்!
பாற்கடலை!
அவன் தேடினான்!
விசமலையை!
கலசங்கள் உடைந்து வீழ்கின்றன!
இருக்கட்டும் வான் வெளியில் பறக்கும்!
நமது கனவுகளும்!
பொய்யும்!
கண்ணீரில் பிரதிபலித்த!
முகங்களை!
கடக்க முடியாமல் திணறிய!
ஒரு காலம்!
பழி நிரம்பி உறைந்தது!
வழியற்ற வெள்ளாடுகளை!
வேட்டையாடுகிறது!
காடு!
நான் நெருப்பைத்தின்கிறேன்!
பாழும்!
சேற்றில் நாற்றமெடுக்கும்!
புழுக்களோடென்னை!
பழகவைக்கிறேன்!
இசை ஒரு நொருங்கிய!
பாத்திரமாக சிதறிக்கிடக்கிறது!
காற்றில் பரவுகின்றன!
நெருப்புத்துகள்கள்!
நாயெங்கே பூனையெங்கே!
என் காலை இழுத்துக் கொண்டு போகின்றன!
கரப்பான் பூச்சிகள்!
பங்கருக்குள் இருள்!
இருளுக்குள் இருக்கிறது பாம்பு!
பங்கருக்கு மேலேயும் சுற்றுகிறது பாம்பு!
சிறகோடு!
கருணாகரன்