துரோகத்தைப் போர்த்தி வந்தது!
பொய்யானதொரு நேசம்,!
அதனிசை மிகப் பிடித்தமானதாகவும்,!
சாத்தியப்படாச் சுவைகளைப் பூசி வந்ததாகவும்!
இருந்ததைக் கவனித்தபோதே!
சுதாகரித்திருக்க வேண்டும் !!
நீர்வீழ்ச்சிக்குள் தூண்டிலிட்டுக் காத்திருந்த !
மடத்தனத்தை என்சொல்ல ?!
நேசங்களின் மையப்புள்ளி!
தொலைபேசித் துளைகள் வழியே கசிந்திட,!
இணையமும் வாழ்க்கையும்!
பேருவகையைத் தருவதாகத் தோன்றிட!
எல்லைகளுக்குள்ளேயே சுழலச் செய்தது காலம் !!
வார்த்தைகளால் !
பார்த்துப் பார்த்துக் கட்டிய!
அன்பின் மாளிகையை உடைக்க!
கலவரத்தைக் காலத்தின் கரங்கள்!
பொத்திவந்தன ;!
ஒரு நெஞ்சம் ஏமாந்து நின்றநேரம்!
பிளந்து உள்ளே எறிந்திட்டன !!
மறு நெஞ்சம் சிரித்தவாறே !
அதனைப்பார்த்து ரசித்திருந்தது !
சிரித்த அதன் பற்களிடையே!
முன்பு தின்றொழித்த நெஞ்சங்களின்!
சதைத்துணுக்குகள் எஞ்சியிருந்தன !!
செத்துப்போகிறேன் ;!
நாளைய உதடுகளில் நல்லதாகவோ தீயதாகவோ !
என் பெயர் உச்சரிக்கப்படக் கூடும்..!
உடலைப் புதைகுழி !
முற்றாகத் தின்றுமுடித்ததன் பிற்பாடு!
அதுவும் மறக்கடிக்கப்படலாம் !!
இனிமேலும்,!
துரோகத்தைப் போர்த்திப்!
பொய்யானதொரு நேசம் வரும்பொழுதின் !
இசையில் மயங்காமலும்,!
அதன் சுவைகளில் உறையாமலும்!
கவனமாக இருப்பீராக !!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்