அர்த்தமுள்ள கர்வம் - அருண்மொழி தேவன்

Photo by Marek Piwnicki on Unsplash

என் விடுதி நண்பர்களே!!
நான் ஒரு ப‌ட்டிக்காட்டான் என்று!
ப‌ரிகாச‌ம் செய்ப‌வ‌ர்க‌ளே..!
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்!
நான் ஒரு விவசாயி மகன் என்பதில்!
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்.!
++++++++++++++++++++ !
உங்க‌ள் த‌ந்தைக‌ளோ!
வாரம் இரண்டுநாள் த‌வ‌றாம‌ல்!
செல்வார்க‌ள்!
கோவிலுக்கும்,ம‌ருத்துவ‌ம‌னைக்கும்..!
என் த‌ந்தையோ!
ம‌ழைக்கு கூட‌ ஒதுங்கிய‌தில்லை!
ப‌ள்ளிக்கூட‌த்திற்கும்,ம‌ருத்துவ‌ம‌னைக்கும்..!
+++++++++++++++++++++ !
கணிப்பொறியை கையில்!
வைத்திருக்கும் உங்கள் தந்தையைவிட‌!
கலப்பையை கையில்!
வைத்திருக்கும் என் தந்தைக்கு!
சிவப்பாக‌வே இருக்கும்..!
உள்ளங்கை..!
++++++++++++++++++++++!
உங்களுக்கு ஒன்று தெரியுமா?!
மனிதன் தனக்கான உணவை !
தானே தயாரித்துக் கொண்டபோதுதான்!
நாகரிகம் பிறந்ததாம்.!
அப்படி பார்த்தால்!
இங்கே நான் மட்டும்தான்!
நாகரிக மனிதனின்!
ஒரே வாரிசு.!
+++++++++++++++++++++++!
வாகன‌த்தில் அம‌ர்ந்து!
ந‌க‌ர‌த்தை சுற்றிப்பார்த்த‌ !
நீங்க‌ள் எங்கே புரிந்து கொள்ள்ப்போகிறீர்?!
த‌ந்தையின் சிம்மாச‌ன‌ தோளில் அம‌ர்ந்து!
உல‌க‌த்தையே அர‌சாண்ட‌!
இந்த‌ ம‌ன்ன‌னின்!
கர்வ‌த்தை..!
+++++++++++++++++++++++!
என் விடுதி நண்பர்களே!!
நான் ஒரு ப‌ட்டிக்காட்டான் என்று !
ப‌ரிகாச‌ம் செய்ப‌வ‌ர்க‌ளே..!
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்!
நான் ஒரு விவசாயி மகன் என்பதில்!
எனக்கு கொஞ்சம் கர்வம்தான். !
-- இ.அருண்மொழிதேவன்
அருண்மொழி தேவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.