அப்பாவும் அம்மாவும்!
கவனிப்பாரற்று காலத்தைக்கடத்துகிறார்கள்!
அடிப்படை வசதியுமற்ற!
என்!
கிராமத்தில்!!
எனக்கிணையானவளும்!
வெளியிலும் சொல்லமுடியாமல்!
வெட்கி!
வெட்கி!
சோகத்தில் கழிக்கிறாள்!
தன்!
விடியாத இரவுகளை !!
வாரிசுகளும்!
நாலு இடம் அழைத்துச்செல்ல!
நல்லது கெட்டதுகளைச் சொல்லித்தர!
ஆளின்றி!
புழுங்கி!
புழுங்கி!
நகர்த்துகிறார்கள் நாட்களை !!
எனக்கும் எவருமில்லை!
இந்த!
அந்நிய மண்ணில்!
இருந்தும்!
வெட்கமற்று சொல்லிக்கொள்கிறேன்!
“நான்!
குடும்பக்காரன்'

இ.இசாக்