முழுதும் முகங்கள் வரையப்பட்ட!
ஒரு புத்தகத்தை!
பாதுகாக்க வேண்டியிருக்கிறது!
காலத்திடமிருந்து!
நினைவின் ஆதிப்பக்கங்களை!
கரையானாகிக் கரைத்திருக்கிறது!
காலம்!
சில முகங்களின்!
சிரிப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது!
சில கண்களின்!
ஓளியைக் காணோம்!
சில முகங்கள்!
பளிச்சென இருக்கின்றன!
யாருடையதென்ற குறிப்பைக் காணோம்!
சில பக்கங்களை திறக்கையில்!
ஒரு குரல் ஒலிக்கிறது!
பல வார்த்தைகள் நினைவுக்கு வருகிறது!
ஒரு பாவனை உயிர் பெறுகிறது!
சில முகங்களை!
முழுதும் நீக்கி விட்டாலும்!
கருணையுடன் சிறு குறிப்புகளை!
எழுதி வைத்திருக்கிறது காலம்.!
ஐந்தாம் வகுப்பு!
நண்பனுக்கான பக்கத்தில்!
பள்ளியை விட்டு விடுதலையாகும்!
பரவசத்தை மட்டும்!
விட்டு வைத்திருக்கிறது.!
சில பக்கங்கள்!
தண்ணீர் ஊற்றப்பட்ட!
தெளிவின்மையுடன்!
பரிதவிக்கிறது!
அடுத்த முறை பார்க்கையில்!
எது எது இருக்குமோ!
காலம் முழுமையாக!
வெற்றி பெற்றிருக்கும்!
வெள்ளைப் பக்கங்களை!
மீண்டும் தடவித் தடவி!
பார்த்து விட்டு!
படுக்கச் செல்கிறேன்!
முகங்கள் மறத்தல்!
ஒரு மென் வன்முறை
எம்.அரவிந்தன்