எனக்குள்!
ஒரு நதி ஓடுகின்றது!
அந்த நதியை நான் விரும்புகிறேன்!
என் கண்ணீர் தீர்ந்து!
நதி வறறி!
இறுதி இரங்கலோடு!
மீன்கள் எனக்குள் துடிக்கும் போது!
நான் மீண்டும் அழுவேன்!
எப்போதும் வற்றாத என் நதியை!
நீங்கள் என்றாலும்!
கடந்து செல்லுங்கள்!
அதுவரை என் அறையின் கதவுகளை!
அடைத்துக் கொள்கிறேன்!
நீங்கள் ஓசை எழாமல்!
கால்களில் ஈரம் படாமல்!
என் இதயத்தின் மீது!
நடந்து செல்லலாம்!
தயவு செய்து என் நதியில் ஓடும்!
மீன்களை உங்கள் கண்களுக்குள்!
நிரப்பிச் செல்ல முடியுமா!
இந்த மீன்களின் உயிர்!
என் கண்ணீரில்தான் இருக்கிறது!
கண்ணீரை இந்த மீன்களுக்காக!
விரும்பி ஏத்றுக் கொண்டிருக்கிறேன்!
இல்லை என்றால்!
எனக்குள் ஓடும் இந்த நதி!
எப்போதோ வற்றியிருக்கும்!
ஸமான்