01.!
ராணி தொலைந்து!
----------------------!
ராணி தொலைந்து!
மலர் வைத்தாடும் சதுரங்கத்தில்!
உறைந்த பிறையின் நிழல்!
ஓதமென!
பாதி எரிகையில் பெய்த மழைக்கு!
பிரேதம் எரிப்பவள் வைத்த பெயர்!
புணர்கையில் புறம் முட்டிய பன்றி!
நான்!
கருணை!
மட்கிக் கரையாத ஆணுறைகள் அடைத்த!
கழிவுத்தொட்டியில் இறங்க மானிட்டருக்கு பிரதியாய்!
நச்சினிக்க கஞ்சா!
அலகில் துள்ளும் மீனுக்கு ஒரு கண்ணில் ஆகாயம்!
பிதுக்கி எடுத்த தோட்டா!
நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது யுத்தத்தை !
02.!
ஒரு போதும்!
---------------!
தன் கடைசித் துளியை உணரத் தராத!
மழையைப்போல்!
நிறைவுறாதவையாய்!
இருக்கின்றன நம் உரையாடல்கள்!
மீன் தொட்டியின் தவளை பொம்மையை!
ஒத்திருக்கிறது சுவாசம்!
நீயனுப்பும் பரிசுப் பொருட்களிலெல்லாம்!
முளைக்கத் துவங்குகிறது ஒரு வன்மிருகத்தின் நகம்!
இந்த நீண்ட தனிமையின் வெம்மை பொங்கும்!
இரவுகளில்!
தளர்ந்து கொண்டிருக்கின்றன உள்ளாடைகளும்!
காத்திருப்பின் மீதான நம்பிக்கைகளும்!
இருப்பும் இன்மையும்!
அவதானிக்கக் கூடுவதாய்!
இல்லை கடவுளைப் போல
நேசமித்ரன்