என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள்!
வாசல் கதவுகளை!
வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு!
ஒரு துரோகத்தின் அரங்கேற்றம்.!
சட்டைப் பாவாடை அணிந்திருந்த!
விளையாட்டு பொம்மைகள் எழுப்பிய!
அபயக் குரல்கள் தேய்ந்துபோயிருந்தன.!
கிணற்றில் விழுந்த பொறி பரவி!
நீரிலும் நெருப்பு வளர்ந்தது.!
ஒவ்வொரு இரவுதோறும்!
என் முத்தத்தாலும் கனவுகளாலும்!
நிரப்பப்பட்டிருந்த தலையணை!
பதறியடித்துக் கொண்டு!
தப்பித்து ஓட முயன்று சோர்கிறது.!
எனது புத்தக அலமாரியில்!
மிகவும் பாதுகாப்போடு உட்கார்ந்திருந்த!
மார்க்ஸும் செல்வாவும்!
எரிந்து கொண்டிருந்தார்கள்!
சாம்பலின் புதை மேட்டு அனலில்!
உதிர்பிச்சிகளின் மரணவாசம்!
இடைவிடாது துரத்த!
விடாது நெருப்பு பரவுகிறது எங்கும்.!
என்னுடலின் நெருப்பைக் கழற்றிஎறிய!
பலதடவை முயன்றும் தோற்றுப் போகிறேன்
ஹெச்.ஜி.ரசூல்