தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என் சொற்களும் சூழலும்

செண்பக ஜெகதீசன்
உன் பரிகசிப்புக்கிடையே!
பட்டென்று குத்தும்!
ஊசிப் பார்வைகளும்!
உள்ளர்த்தச் சிரிப்புகளும்!
என் பருவகாலத்து!
நினைவுகளை!
ஆசைகளை!
ஆர்வங்களைப்!
பகிரும் கணங்களின்!
நிறையழிக்கும்!
பதங்களின் பலங்குறைத்துப்!
பகரும் நிகழ்வுகளின்!
நிழலர்த்தங் கொண்டு!
குறிப்பிடும் குறிப்புச்சொல்லின்!
நீண்டு மடங்கும் ஒலிக்குறிப்பில்!
நீதேடும் எதிரொளியால்!
இன்னும் சுருங்கிக் கொள்ளும்!
உயிராயிருக்க விருப்பமில்லை!
உன் அரவணைப்பின்!
கதகதப்பினை அர்த்தப்படுத்தி!
அடங்கி நிற்கப் போவதில்லை!
என் சொற்களும் சூழலும்.!
-- செண்பக ஜெகதீசன்

இறைவன்

அகிலன் லெட்சுமணன்
எனக்காக அங்கே தூரத்தில் !
எனக்கான ஆயிரமாயிரம் !
சந்தோஷ மூட்டைகளை !
சுமந்துக் கொண்டு நிற்கின்றான் !
எத்தனை முறை தோற்றுப்போனாலும் !
யாருக்குமே இல்லாத நம்பிக்கை !
என் மீது அவனுக்கு !
எனக்காவது தோற்றுப்போவதற்கும் !
நோக்கம் உண்டு !
அவனுக்கு ? !
- அகிலன் லெட்சுமணன் !
!
தொலைந்த கடவுள் !
தொலைந்துப் போன கடவுளை !
எல்லோரும் தேடினார்கள் !
பிரதிஷ்டை செய்வதற்கல்ல !
மீண்டும் தொலைப்பதற்கு !
- அகிலன் லெட்சுமணன் !
A33-4-38, Jalan Puchong Permai 1/14 !
Taman Puchong Permai !
47100 Puchong, Selangor !
012-2581393

ஒளியென்று சொல்ல எதுவுமில்லை

ஹெச்.ஜி.ரசூல்
ஒளியென்றுசொல்லஎதுவுமில்லை!
-------------------------------------!
எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது.!
மூடிய மண்ணுக்குள்ளிருந்து!
பிரபஞ்சத்தை பார்க்க!
எந்தவித ஜன்னலும் இல்லை.!
இரவும்பகலும் மாறிமாறிச் சுழல்வதை!
அறியமுடியாததொரு தருணத்தில்!
தனிமையின் தீராதவலி.!
பேச்சுத்துணைக்கு ஆளற்ற வனத்தில்!
காற்றின்ஓசையும்!
தலைவிரித்தாடும் மரங்களின் சலசலப்பும்!
விட்டுவிட்டுதொடரும் பீதியென!
விரல்நீட்டிப்பார்க்கமறுத்த!
வேர்களின் நுனியில்!
மெளனம் நிரப்பப்பட்டது.!
இமைவிரித்து மூடும் கணங்களில்!
எவ்வித சலனமுமற்று!
கும்மிருட்டுப்பயம் தேங்கிக்கிடக்கும்!
ஒளியென்று சொல்ல எதுவுமில்லை!
மெல்லகசிந்துவந்த ஊற்று!
என்னுடலை நனத்துக்கொண்டிருந்தது. !
-ஹெச்.ஜி.ரசூல்

மகாசக்தி

வேதா. இலங்காதிலகம்
கார் முகில் வானில் நிலா வெள்ளி தீபம்.!
காசினி வாழ்வில் காதல் பேரொளி தீபம்.!
மனிதனை மாற்றும் மனிதனை அழிக்கும்!
மனிதனைக் காக்கும் மகாசக்தி காதல். !
நீரில் உலாவும் மீனுக்கு நீர் சாசுவதம்.!
பாரில் உலவும் மனிதனுக்குக் காதல் சாசுவதம்.!
மானுட வாழ்வுக் கடலில் இயங்கும்!
மாதுரியம் பொங்கும் இன்பக் காதலோடம். !
மென்மைப் பட்டாம் நுண்ணிழைக் காதல்!
வெண்மை யழகு மலருக் கொப்பாகும்.!
உண்மை, மரியாதை, மதிப்பில் வாழும்.!
பொய், அவமரியாதை, அவமதிப்பில் அழிந்திடும். !
காதலின்றேல் உந்துசக்தி, சாதனைகள் குறையலாம்.!
ஆதலால் வேதனைகள் அலைக்கழித்து ஆட்டலாம்.!
இயல்பு நிலை இயக்கம் இசைகேடாகலாம்.!
இந்திரியங்களும் இறுகு நிலையையடையலாம். !
ஆதாம் ஏவாளோடு இணையம்வரை புரளும்!
அழியாத ஆதர்ச அற்புதக் காதல்!
பழியின்றி பாசமாய் மனமன்றில் ஆடினால்!
வழிகாட்டும் உயர்விற்கு வரமாயும் ஆகலாம். !
12-09-2009

பயம் வளர்க்கும்.. அது மட்டும்..எப்படி முடியும்?

காவிரிக்கரையோன்
பயம் வளர்க்கும் சுதந்திரம்.. அது மட்டும் வேண்டாம்.. எப்படி முடியும்?!
!
01.!
பயம் வளர்க்கும் சுதந்திரம்!
-----------------------------------!
ஏன் இப்படி குரோதமாய் பேசுகிறீர்கள்!
நாய் வளர்த்த ஒருவர் என்னைப் !
பார்த்து கேட்டுப் பார்க்கிறார்,!
கோப நிழல்கள் என்னைத் தொடர்ந்தது!
உண்மைதான் எத்தனை முறை சொல்லியும்!
அந்த நாய் கட்டப்படாமலேயே அலைகிறது,!
இத்தனை முறையும் என் மனைவியின்!
பயம்தான் என்னைப் பேச வைத்திருக்கிறது!
தெரியுமா உனக்கு என் வீட்டிலும் நாயெனும்!
ஜீவன் வாழ்கிறது,!
பயம் பற்றிய ஒருவரிடம் அதுவும் நாய் !
பயம் பற்றிய ஒருவரிடமிருந்து !
அந்த பயத்தை இம்மி அளவு கூட!
நகர்த்திப் பார்க்க முடியாது,!
தடுப்பூசி போட்டு தட்டில் சாதமும் பாலும்!
வைக்கும் உனக்கு தெரிந்திருக்க நியாயமில்லை!
எப்படி துரத்தி பார்க்கும் மற்றவர்களை!
அந்த ஜீவன் என்று,!
அந்த நாய் கடித்து பார்த்ததில்லை!
என்ற உள்ளத்து உணர்வுகள், பயம்!
பற்றிய ஒருவரிடம் எப்போதும்!
செல்ல மறுக்கும் சித்தாந்தங்கள் தான்,!
கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று!
கூட சொல்லத் தயங்குவதில்லை!
உங்கள் சிந்தனைக் கூடங்கள்,!
இத்தனைக்கும் அப்பால் வெளியில் மிரட்டும்!
சுதந்திரம் கொண்டு, சுதந்திரம் !
பறித்த அந்த ஜீவன் கட்டிய இழை!
அறுத்து ஓடிக் கொண்டுதானிருக்கிறது,!
பயத்தினால் அழிக்கப்பட்ட சுதந்திரம்!
சாளரக் கதவிடுக்கில் எட்டிப் பார்க்கிறது,!
பயத்தினால் வளர்ந்த சுதந்திரம்!
கதவுக்கப்பால் நாலு கால் பாய்ச்சலில்!
ஓடி பயமுறுத்துகிறது!!!!
!
02.!
அது மட்டும் வேண்டாம்!
----------------------------------!
காதலை கல்லறையில் புதைத்து!
வைத்து பறந்து போனாய்!
ஒரு புதிய காலையில் என் உலகத்து!
சூரியனை அஸ்த்தமனம் செய்து விட்டு,!
வந்திருந்தது அழைப்பா,!
நம் காதல் பிழை கொண்ட !
படைப்பா?, அச்சில் ஏறாது என்று!
அறிவிக்க வந்தது நம் காதலுக்கு இழப்பா?!
இத்தனை நாட்களாய் உதிக்கும் எண்ணங்களில்!
நாந்தான் முழுதும் தேங்கியிருப்பதாய் !
பகர்ந்து மகிழ்வாய், தேங்கிய எண்ணங்களில்!
கூடவா பாசி பிடிக்கும் நீ வெறுப்பதற்கு,!
தூரத்து நிலவு நம் வாசஸ்தலம் அதில் !
நாம் இருப்போம், நம் சந்ததிகள் இருப்பார்கள்!
உவமை உருவகம் என்ற இலக்கணம் படைத்த !
நாட்கள், இப்படி இலக்கணப் பிழையாய் போகதானா?!
வார்த்தைகள் கூட விரக்தியாய் போய் விட்ட நிலையில்!
உன்னை வாழ்த்த மட்டும் முடியவில்லை என்னால்,!
பின்னொரு நாளில் என் பெயர் தாங்கிய உன் குழந்தை!
மட்டும் வேண்டவே வேண்டாம்,!
அந்த குழந்தைக்கு தெரிதல் வேண்டாம்!
நம் கோழைத்தனம்,!
மறைவில் கிடக்கட்டும் நம் காதல் !
எப்போதாவது தூசு தட்டி சுவாசிக்கிறேன் நான்...!
!
03.!
எப்படி முடியும்?!
----------------------!
சிதறிக்கிடந்த மரத்துண்டு கூட !
மார் தட்டி புல்லாங்குழலைப் பார்த்து!
சொல்கிறது, உன் நாதம் என் தியாகத்தில்!
தான் வெளிவருகிறதென்று,!
காற்றில் மரம் விட்டு போகிற இலைகளும்!
லயித்து சொல்கிறது மரத்திடம், என் !
வீழ்ச்சியும் கூட உன் உயர்ந்தோங்கும்!
வளர்ச்சிக்குத்தானென்று,!
பட்டுப்புழுவும் சட்டென்று சேர்ந்து கொள்கிறது!
பட்டுக்கு நான் தானே அடித்தளம்!
கொடுத்து மிளிரவைக்கிறேனென்று,!
மேகங்கள் மறைந்து போவதால்!
தான் பூமியைக் கூட எட்டிப் பார்க்கிறது!
மழை என்ற பரிமாணம் ஏற்றிருக்கிறேனென்று,!
நான் எப்படி சொல்ல முடியும்!
என் காதல் தோல்வியில் தான் உ(ன்)ங்கள் !
அழைப்பிதழ் அச்சேறியிருக்கிறதென்று

கடவுளின் பி(மு)ன்னே சாத்தான்

பாண்டித்துரை
நிலைக்கண்ணாடியில்!
சாத்தானை தரிசித்தபடி!
புணரும் பொழுதின்!
நீட்சியாய்!
ஆலயம்யாவும்!
கடவுளை தரிசித்தபொழுது!
பயபக்தியுடன்!
சூம்பிப்போன சாத்தான்!
தெரிவதில்லை!
குட்டப்பனிடம் சொல்லி!
பீடத்திற்கு பின்!
நிலைக்கண்ணாடி ஒன்றை!
வைக்க வேண்டும்.!
-பாண்டித்துரை

அழகு

சூர்யா
தனித்தோ கூட்டத்திலோ!
அத்தகைய சாயலை எளிதாக இனம்!
காணுகின்றன கண்கள்.!
அகன்ற ஒட்டுப் பொட்டை!
சரிசெய்துகொண்டிருந்தாள்.!
முகஅலங்காரத்தில் நிறையவே!
வண்ணம் கொட்டிக்கிடக்கிறது.!
புருவங்களுக்கு ஒத்திராத!
கருந்தீட்டிப்புடன்!
விரசங்களோடுப் பொங்கிடும் விழிகளும்.!
கைப்பேசித் துணையும்!
புரிந்திராத பரபரப்புடனும்!
வீசி நடந்து வழித்தடம் தேடுகிறாள்.!
இச்சையின் உருவகங்களில்!
தொலைவிலிருந்து!
நெருக்கமுற்று எல்லைக் கடக்கலாம்.!
பேருந்து புறப்படுகையில்!
அருகில் அமர்ந்துகொண்டாள்.!
வியர்வையில் ஊறிய செண்டு!
பான்பராக் சுவைத்த வாடை!
இருக்கை நிறைக்கிறது.!
காட்சிப்பதிவுகள் எதுவுமின்றி.!
ஒவ்வாமையில் மனம் தனித்தே!
பயணிக்கிறது.!
தொலைவிலிருந்து மிளிரும்!
ஏங்கப்படுபவைகள்!
அருகாமை வசப்படும்போது!
சுவாராசியம் தொலைகிறது.!
-- !
சூர்யா!
Love all, trust a few, do wrong to none

நவின் ஹைக்கூ கவிதைகள்

சென்னை - நவின், இர்வைன்
ஹைக்கூ கவிதைகள்!
சென்னை-நவின்!
இர்வைன், கலிபோர்னியா!
!
1.வாழ்க்கைச் சுமைகளை!
வரிசையாகச் சுமக்கும்!
ஏழை விவசாயி…. !
குட்ஸ் வண்டி!
2.வண்டுக் !
காதலனைக் கண்டதும்!
மலருக்குப் பதட்டம்!
வியர்வையாய்…. !
பனித்துளிகள்!
3.அழுதவானம்!
எழுதிப்பார்க்கும்!
அந்தரங்க வரிகள்….!
நீரோடை!
4.இந்தியத் தாயின் !
இறுதிக் கண்ணீர்த்துளி....!
இலங்கை!

என்ன வேண்டும் உனக்கு?

இ.ஜேசுராஜ்
என்ன வேண்டும் உனக்கு? !
என்ன வேண்டும் !
எண்ணியவை முடிக்க? !
ஏன் தாமதம் ? !
எழு விழி !
எண்திசை நோக்கு !
எண்ணங்களை புடமிடு சிகரம்தனை !
எட்டிடவே ஓட்டமெடு ! !
அகண்ட உலகு !
ஆழ் கடல் !
உயரே வானம் !
உனக்கென்ன வேண்டும்? !
ஊன்றிட பாதத்திற்கா !
இடம் தேடுகிறாய்? நீ !
நிற்குமிடத்திற்கு கீழேயும் !
நிலம்தான் ! நீ !
தொடவேண்டியது உயரம்மட்டுமே! !
நிகழ்கால நிதர்சனம் !
நிலம்மட்டுமே நிற்பதற்காய்! !
உன் காலடியில் நிலம் !
பாதம் நகர்த்து புது !
பாதை கிடைக்கும் !
சிகரமும் எட்டும்! !
!
ஆக்கம் !
இ.ஜேசுராஜ் - கீரனூர்

ஈரக் கனாக்கள்!

எம்.ரிஷான் ஷெரீப்
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்!
நீர்ப்பாம்புகளசையும்!
தூறல் மழையிரவில் நிலவு!
ஒரு பாடலைத் தேடும்!
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்!
மூங்கில்கள் இசையமைக்கும்!
அப் பாடலின் வரிகளை!
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்!
ஆல விருட்சத்தின்!
பரந்த கிளைக் கூடுகளுக்குள்!
எந்தப் பட்சிகளின் உறக்கமோ!
கூரையின் விரிசல்கள் வழியே!
ஒழுகி வழிகின்றன!
கனாக்கள்!
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்!
இன்னபிறவற்றை!
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்!
தூறல் மழையாகிச் சிதறுகின்றன!
ஆவியாகி!
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்!
வெளியெங்கும்!