அழகு - சூர்யா

Photo by Daniele Levis Pelusi on Unsplash

தனித்தோ கூட்டத்திலோ!
அத்தகைய சாயலை எளிதாக இனம்!
காணுகின்றன கண்கள்.!
அகன்ற ஒட்டுப் பொட்டை!
சரிசெய்துகொண்டிருந்தாள்.!
முகஅலங்காரத்தில் நிறையவே!
வண்ணம் கொட்டிக்கிடக்கிறது.!
புருவங்களுக்கு ஒத்திராத!
கருந்தீட்டிப்புடன்!
விரசங்களோடுப் பொங்கிடும் விழிகளும்.!
கைப்பேசித் துணையும்!
புரிந்திராத பரபரப்புடனும்!
வீசி நடந்து வழித்தடம் தேடுகிறாள்.!
இச்சையின் உருவகங்களில்!
தொலைவிலிருந்து!
நெருக்கமுற்று எல்லைக் கடக்கலாம்.!
பேருந்து புறப்படுகையில்!
அருகில் அமர்ந்துகொண்டாள்.!
வியர்வையில் ஊறிய செண்டு!
பான்பராக் சுவைத்த வாடை!
இருக்கை நிறைக்கிறது.!
காட்சிப்பதிவுகள் எதுவுமின்றி.!
ஒவ்வாமையில் மனம் தனித்தே!
பயணிக்கிறது.!
தொலைவிலிருந்து மிளிரும்!
ஏங்கப்படுபவைகள்!
அருகாமை வசப்படும்போது!
சுவாராசியம் தொலைகிறது.!
-- !
சூர்யா!
Love all, trust a few, do wrong to none
சூர்யா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.