ஒளியென்றுசொல்லஎதுவுமில்லை!
-------------------------------------!
எனக்கொரு படுக்கை தயாராயிருந்தது.!
மூடிய மண்ணுக்குள்ளிருந்து!
பிரபஞ்சத்தை பார்க்க!
எந்தவித ஜன்னலும் இல்லை.!
இரவும்பகலும் மாறிமாறிச் சுழல்வதை!
அறியமுடியாததொரு தருணத்தில்!
தனிமையின் தீராதவலி.!
பேச்சுத்துணைக்கு ஆளற்ற வனத்தில்!
காற்றின்ஓசையும்!
தலைவிரித்தாடும் மரங்களின் சலசலப்பும்!
விட்டுவிட்டுதொடரும் பீதியென!
விரல்நீட்டிப்பார்க்கமறுத்த!
வேர்களின் நுனியில்!
மெளனம் நிரப்பப்பட்டது.!
இமைவிரித்து மூடும் கணங்களில்!
எவ்வித சலனமுமற்று!
கும்மிருட்டுப்பயம் தேங்கிக்கிடக்கும்!
ஒளியென்று சொல்ல எதுவுமில்லை!
மெல்லகசிந்துவந்த ஊற்று!
என்னுடலை நனத்துக்கொண்டிருந்தது. !
-ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்