ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்!
நீர்ப்பாம்புகளசையும்!
தூறல் மழையிரவில் நிலவு!
ஒரு பாடலைத் தேடும்!
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்!
மூங்கில்கள் இசையமைக்கும்!
அப் பாடலின் வரிகளை!
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்!
ஆல விருட்சத்தின்!
பரந்த கிளைக் கூடுகளுக்குள்!
எந்தப் பட்சிகளின் உறக்கமோ!
கூரையின் விரிசல்கள் வழியே!
ஒழுகி வழிகின்றன!
கனாக்கள்!
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்!
இன்னபிறவற்றை!
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்!
தூறல் மழையாகிச் சிதறுகின்றன!
ஆவியாகி!
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்!
வெளியெங்கும்!

எம்.ரிஷான் ஷெரீப்