சாலை ஓரங்களில் !
இத்தனை காலமாய் !
யாருக்காக இவர்கள் !
காத்து நிற்கிறார்கள்??!
ஒற்றைக் காலில் !
நின்று கொண்டு!
எவரை நோக்கி !
தவம் செய்கிறார்கள்??!
இவர்களது தலைகளில் !
பறவைகள் கூடுகட்டி!
வாழ்ந்த போதும்!
இவர்களது ஆழ்மனத் தியானம் !
கலையவில்லையே ?!
யாருக்காக இவர்கள் வாழ்கிறார்கள்?!
மானுடா...... சற்று சிந்தியேன்....!
தான் வாழும் போது -!
உன்னை வாழ வைத்து !
தான் வீழ்ந்த (வீழ்த்தப்பட்ட ) பின்னும் !
உனக்கு வாழ்வளிக்கும்!
மண்ணின் மைந்தர்களாம் - மரங்களை !
காத்திட உறுதி கொள்ளலாமே
பி.தமிழ் முகில்