போர்பூத்த நாகரிகம் - ரவி (சுவிஸ்)

Photo by Daniele Levis Pelusi on Unsplash

பலஸ்தீனத்தைக் குதறுகிறது !
ஏவல் நாயொன்று !
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது !
மோந்து திரிகிறது -தன் சொல்ப் !
'பயங்கரவாதிகளை’. !
காட்சிகளில் லயித்துப்போய் !
அமர்ந்திருக்கிறான் அதன் !
எஜமானன். !
புல்டோசர்கள் கட்டடங்களை !
நிதானமாகத் தகர்க்கின்றன !
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன !
வெளியே வருகின்ற எஜமானன் !
ஜனநாயக முகமூடி அணிகின்றான் !
காட்டமான குரலில் !
மனிதம் பற்றிப் பேசுகிறான் !
பேரழிவின் ஆற்றலுடன் ஈராக் !
பயமுறுத்தி நிற்கிறது !
மனித நாகரிகத்தை என்கின்றான் !
போர்ப் பிசாசுக்கு !
உடை அணிவிக்கப்படுகின்றது !
பேரழிவை நடத்தும் ஏவல்நாயின் !
வெறியாட்டம் !
முற்றுகை, தனிமைப்படுத்தல், !
தற்காப்பு என்றெல்லாம் !
சொல்கொண்டு அதனதன் !
அர்த்தங்கள் களையப்படுகின்றன !
முக்காடு போட்ட அந்தத் தாய் தன் !
மகனுக்காகக் கதறுகிறாள் !
இரத்தம் தோய்ந்த உடல்களை !
காவியபடி !
பலஸ்தீன வீதிகளை மொய்த்த மக்கள் !
விரைகின்றனர் !
மனிதக் குண்டாய் சிதறிப் போனவனின் !
பிஞ்சு மகன் !
மரணத்துக்குப் பயமில்லை என்கிறான். !
எனக்குள் இறங்குகிறது !
காட்சிகள் !
மனித நாகரிகம் இப்படியாயிற்று !
ஜீரணித்துக் கிடக்கிறதா !
மனித இனம்? !
கேள்வி என்னைத் துளைக்கிறது !
பல இலட்சம் யூதர்களின் !
உடலம் சிதைத்த கிற்லரை !
இப்போ ஜீரணித்துவிடுவேனோ நான்! !
அச்சம் என்னைத் துன்புறுத்தி !
எழுகிறது !
இன்றைய !
ஏவல் நாயின் வேட்டையில் !
மனிதத்தைக் குதறிய !
அன்றைய ஓநாயின் !
இரத்தவாடை வீசுகிறது
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.