மலக்குழியில் இறங்கி!
மனமிறந்து!
மலம் அள்ளுபவரும்!
சாப்பாட்டில் கை வைக்க!
சாக்கடை அள்ள!
சமாதானம் செய்துகொண்டோரும்!
சுயகழிவகற்ற முடியாத!
நோய் சுற்றிய மனிதனை!
சுத்தம் செய்வோரும்!
பிணவாடையின்!
வீச்சங்களை விட்டொளித்த !
பிண்டமறுப்போனும்!
கலைக்கென்று சொல்லியே!
காமப் பசியாற்றும்!
கலைச் செல்விகளும்!
சொந்த வீட்டிலும்!
சுத்தமில்லா சுரணையற்றோர்!
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும் !
ஆயிரக்கணக்கானோர்!
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை!
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்!
தொலைத்த காமத்தால்!
வயிற்றில் தொடர்வதை!
வழித்து எடுத்து வழிசெய்வோரும்!
அவசரத்தில் பிறந்ததால்!
அனாதையாக்கப்பட்ட!
அன்பான குழந்தைகளும்!
குப்பையை கிளறி!
குடும்பம் நடத்தும்!
குடியானவர்களும்!
விலைபேசப்படும் உலகில்!
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்!
விவரம் கெட்ட விவசாயியும்!
யார் வாழ்ந்தாலும்!
வாழத் தெரியாத!
மேன்மை கெடாத இந்த!
மேன்மக்கள்!
இன்னும் எத்தனை ஆயிரமோ ?
மார்கண்டேயன்