நான் கேளிக்கைகளில்!
திளைக்கின்றேன்!
ஆனாலும் அவர்களைப்!
போரிடுமாறு அழைக்கின்றேன்!
ஏனெனில் அவர்கள்!
அடக்குமுறைக்கு உள்ளாவதால்!
எனது பங்குகளை உரியமுறையில்!
செலுத்துவதாகவும்!
கதை சொல்லுகின்றேன்!
ஆனால் அவர்கள்!
கரங்கள் துண்டிக்கப்பட்டு!
கால்கள் தறிக்கப்பட்டு!
குதத்தால் உண்டு!
வாயால் கழிவுப்பொருட்களை!
வெளியேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!
பத்திரமாக எனது பிள்ளைகள்!
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்!
மகுடங்களைச் சூடிக் கொள்கின்றார்கள்!
வாழாத நாடொன்றின் தலைவிதியைத்!
தீர்மானித்தற்காய்!
மக்களே திரண்டெழுங்கள்!
என்ற கோசத்தை!
அடிக்கடி முழங்குகின்றேன்!
அதன் தொடர்ச்சியாய்!
இப்போது நான்!
மாலைநேர மேடையொன்றிலே!
எழுச்சி உரையொன்றை ஆற்றுதற்காய்!
என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன்

நடராஜா முரளிதரன், கனடா