கவி: அகரம் அமுதா!
ஒருதாயின் வயிற்றுச் சேய்கள்!
ஒப்புரவா வாழ்ந்தி டாமல்!
இருகூராய் பிரிய நேர்ந்தால்!
இன்னலன்றோ வந்து சேரும்!!
மனிதனாய் பிறந்து விட்டு!
மனிதம்மேல் பற்றில் லாமல்!
தனியனாய் வாழ்ந்து வந்தால்!
தாழ்வன்றோ நேரக் கூடும்!!
“ஊர்க்காரன்” என்றே சொல்லி!
உதவாத வார்த்தை பேசி!
சீர்கெட்டுப் போவதாலே!
சிறிதும்நற் பயனும் உண்டோ?!
ஆரடா மனிதன் என்றால்!
மாரடா தட்ட வேண்டும்!
நேரடா எதிர்த்து நின்று !
நீசரை ஒடுக்க வேண்டும்!!
சேரடா மனிதா உன்றன்!
சிறுமதி விட்டோ ழித்தே!
பாரடா பாரில் நம்போல்!
பகைநாடும் இனமும் உண்டோ?!
தங்கைக்கே தீயை வைக்கும் !
தன்மையடா தோழா! நாளும்!
கங்கைபோல் வேர்வை சிந்தி!
கடிதுழைப் போரைச் சாடல்!
தோழரின் வேர்வை தன்னில்!
தோள்களை வளர்க்கும் தோழா!!
கோழைகள் அல்ல யாரும்!
குலைப்பதை நிறுத்திக் கொள்வாய்

அகரம் அமுதா