01.!
எதார்த்தம்!
---------------!
!
நான் இருந்தேன்!
நீ வந்தாய்!
நாம் ஆனோம்.!
!
நீ சென்ற பின்னும்!
நான் இருக்கிறேன்.!
!
ஒன்று நீங்கிடில்!
மற்றொன்றும்!
உயிர் துறப்பது!
!
பறவைகளில் !
வேண்டுமானால்!
பழக்கமாய் இருக்கலாம்.!
!
மனிதனுக்குத் !
தெரியும்!
சேர்ந்துபோவதில் உள்ள!
சிக்கல்கள்.!
02.!
விட்டுக்கொடுத்தல்!
-----------------------!
எவருக்கும்!
இயலக்கூடும்.!
காதலுக்காக !
காதலியை !
விட்டுக்கொடுத்தல். !
!
எவருக்கேனும் !
இயன்றதுண்டோ?!
காதலுக்காக !
காதலையே !
விட்டுக்கொடுத்தல்.!
!
03.!
தடங்கள் !
------------ !
எப்போதும் போல்தான் !
இருக்கிறது. !
என்னையும் உன்னையும்!
பிரித்த நிலா.!
!
இப்போதும் முத்தமிட்டுக்கொண்டுதான் !
இருக்கின்றன. !
எதிர்வரும் அலைகளோடு!
உள் வாங்கும் அலைகள்.!
!
நீ விட்டுப்போன !
தடங்களோடு நான். !
இங்கேயும் அங்கேயும்.!
!
இன்றும் நீ வராமலே !
இருந்திருக்கலாம். !
ஏனைய நாட்களைப் போல.!
!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி