மஞ்சட் பூக்காடுகளில் பூத்த மப்பில் !
கிழக்கிலிருந்து கொழும்புக்கு !
இந்தப் பிரிவுப் பயணம் !
மழை பெய்து ஓய்ந்து !
நான் மனசார இழைப்பாறிய கொஞ்சக் காலம் !
வாழ்வு கொடுத்த ஊர் !
உன்னைப் பிரிந்து கொண்டிருக்கிறேன் !
இந்தப் பயணம் தருகிற போதை !
எழுதச் சொல்கிறது !
இழந்த வாழ்வையும் வாழ்வின் கவிதையையும் !
கவிதையின் போதையையும் !
எழுதச் சொல்கிறது !
பிரிவில் பூக்கிற ஒரு துயரம் இதில் இல்லை !
வெண்மணல் கொடுக்கிற நதியும் !
காடுகளும் கூட !
என்னோடு தொடர்ந்து வருகிறது !
மீண்டும் மீண்டும் நகரங்களை நோக்கிப் போனாலும் !
நகரங்களை அவாவிய என் கனவுகள் போயிற்று !
நகர வாழ்வும் போயிற்று !
அழிந்துபோன நாகரீகங்களைப்போல !
அந்த வாழ்வு அப்படியே இருப்பினும் !
அங்கிருந்தபோது எனக்கு எழுத முடியவில்லை !
மனசார வாழவும் கிடைக்கவில்லை !
--நட்சத்திரன் செவ்விந்தியன் !
(1996) !
நன்றி: ’எப்போதாவது ஒருநாள்’ !
தாமரைச் செல்வி பதிப்பகம்
நட்சத்திரன் செவ்விந்தியன்