வாழ்தல் என்பது - ரவி (சுவிஸ்)

Photo by Freja Saurbrey on Unsplash

எனது கண் இறைக்கும் ஒளியை !
ஓர் புள்ளியில் தேக்க !
எனக்கு இஸ்டமில்லை. !
அது படர்வதற்குரியது. !
விரும்பியபோது விரும்பிய இடத்தில் !
ஆடவும் பாடவும் !
அதிகளவு சுதந்திரம் அனுபவிக்கிறது !
ஒரு குழந்தை - !
என்னைவிட. !
அழுதலுக்காக இரங்க ஆயிரம் மனிதர்கள். !
தனிமையாய் !
மனம்விட்டு சிரிக்கும் எனை !
பைத்தியமென பார்வையெறிந்து !
கொல்லும் உலகில் !
சேர்ந்து சிரிக்க நான் மனிதர்களைத் தேடுகிறேன். !
மரணத்தை !
பூச்சாண்டி காட்டி !
பயமுறுத்தும் மதமும் !
எனை வெற்றிகொண்டு நூற்றாண்டுகளாயிற்று. !
வாழ்வின் ஒரு பகுதியே மரணம். !
தடித்த விரல்களால் !
கூனிய முதுகுகளில் !
பிராண்டி எழுதிய விதிமுறைகளில் !
கசியவிடப்பட்டது வாழ்க்கை !
என்றாயிற்று. !
இலேசானவனாய் மிதந்துவிடாமல் !
பாரமேற்றப்பட்டு !
செதுக்கி செதுக்கி அழிக்கப்பட்டவன் நான். !
ஒரு புள்ளி நோக்கி ஓடுவதில் !
இறகுகள் சொடுக !
கிளைவிடாது !
பார்வைகள் நெடுத்துக் கொள்கின்றன - !
அதிகார வெளியைத் தேடி! !
வாழ்தல் என்பது !
ஒப்புவிக்கப்பட்ட பாதையினூடு !
ஒடுங்கிச் செல்வதல்ல !
பரந்து விரிவது அது - !
ஓர் உயிர்ப்பு வெளியாய்
ரவி (சுவிஸ்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.