தாரணி மலர்களில் தாரகை.!
தண்ணெனும்; அழகு, செழுமை.!
தகுதியாம் அடக்கம், புனிதமுடை!
தாமரை மலர் தெய்வீகம்.!
தடாகச் சேற்றில் மலரும்.!
தண்ணீர்; உயரத் தானுயரும்.!
தற்காலம், ஆதி காலமாய்!
தரையிற் புகழுடை தாமரை.!
ஐந்தாயிரம் ஆண்டுப் பழையது.!
ஐங்கணை என்றும் பெயராம்.!
செந்தாமரை பெயர் கமலா.!
இளஞ்சிவப்பு மலர் பத்மா.!
நீலத் தாமரை நீலோற்பலம்.!
வெண்மைத் தாமரை புண்டரீகா.!
வெய்யோன் கண்டு மலர்ந்து!
வெய்யில் மறைய வாடும்!
ஆத்மிக வாழ்விலும் உயரிடம். !
இதயம் ஒப்புவமை தாமரைக்கு.!
இலைத்தண்டு விளக்கின் திரி. !
இலையோ உணவுத் தட்டு.!
இசைந்த உணவு கிழங்கு வேர்.!
இழைத்தனர் ஆடை நாரிலும்.!
கடவுளர் அமர்ந்த கமலாசனா.!
கடவுளர் கரங்களில் ஏந்தினர்.!
புத்தன் காலடியில் மலர்ந்தது.!
புராணக் கதைகளில் இணைந்தது.!
புத்தம், இந்து சமய அடையாளம், !
பூவின் அடிப்பாகம் பரிசுத்தம்.!
பிரிய உணவு யானைக்கு. !
பாரசீகக் கலைகளில் பாவனை. !
சரித்திரம், இலக்கியம், சமயங்கள்,!
சிற்பக்கலை கையாண்ட தாமரை.!
வேதா. இலங்காதிலகம் !
-அலைகள்.கொம்
வேதா. இலங்காதிலகம்