ஒரு கடதாசிக்குக் கிடைத்த வெகுமதி!
ஒரு சோடி எண்களுக்குக் கிடைத்த பெறுமதி!
பெருமைமிகு மனிதப் படைப்புப் பணம்.!
அருமைத் திறமை, மதிப்பு, மனிதப் பெறுமதி!
துரும்பாகிறதே இவன் படைப்பின் முன்பு.!
மாறுபட்ட வடிவமாகி நாட்டுக்கு நாடு!
பெறுமதி, பெயர் வேறு ஆகிறது.!
திருவாகி இலட்சுமி கடாட்சம் ஆகிறது.!
பணம் மட்டும் எதுவும் செய்திடாது.!
பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.!
பணம் - மனிதக்குணம் மாற்றும் உரைகல்.!
கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.!
கருமி, உண்ணாமல் உடுத்தாமல் சேர்ப்பான்.!
திருடன், பித்தன், கனவான், விபச்சாரம்,!
திருவோடு ஏந்தி, திருமண் பூசியும்!
திறமையாய்ப் பணம் சம்பாதிப்பார்.!
ரூபா, றுப்பியா, டொலர், றிங்ஙிட்,!
ரூபிள், ஈரோ, குரோணர், பவுன்சென்று!
நாடுவிட்டு நாடு மாறி மனிதர்!
வாடுவதும், மகிழ்வதும் இவைகளுக்காக.!
பணம் பற்றிப் பழைய மொழிகள்,....!
பணமென்றால் பிணமும் வாய் திறக்கும்.!
பணமில்லாதவன் பிணத்திற்குச் சமம்.!
பணம் பாதாளம் வரை பாயும்

வேதா. இலங்காதிலகம்