சுளரும் கலாச்சாரப் பலம்! - வேதா. இலங்காதிலகம்

Photo by pavan gupta on Unsplash

மூர்த்தியான தேவியர் மூவர்!
முகாந்தரமாகி, மும்மூன்றிரவுகள்!
மூலசக்தியாகி, முகிழ்ந்திடும் நவராத்திரி.!
முறுவலோடு அழைக்கும் சரசுவதி பூசை.!
பாலவயதில் ஆனந்தித்துத் துள்ளி!
பண்டிகை மனதோடு, கடலைக்கும்,!
அவலுக்கும் காத்திருந்த கால!
நவராத்திரி ஒரு சிறப்பானது.!
கலைகள், பேச்சுப் போட்டியென!
கடமையாய்ப் பங்கெடுத்த சிறுமியாய்!
பட்டுப் பாவாடை, கொத்துப் பூச்சூடி!
பட்டாம்பூச்சியாய் மகிழ்ந்தவொரு சரசுவதிபூசை.!
கலைகளின் மகத்துவத்தில் ஊஞ்சலாடி!
இளையோர் மனம் விழித்திட, புலம்!
பெயர் நாட்டில் கலாச்சாரப்!
பலம் தரும் நாட்கள் சரசுவதிபூசை.!
சிறிதேனும் புனித நாட்களறிவை!
சிந்திடும் தேன்தமிழில் பிள்ளைகள்!
சிணுங்கிச்சிணுங்கிப் பெறும் காலம்!
சிரமத்துடன் தமிழையூட்டும் பெரியோரார்வம்.!
கலைவிழா நிகழ்வுகளை ஒலி!
ஒளியாக்கி ஊடகங்களில் ஆடவிட்டுக் !
கலாச்சாரப் பாதுகாவலரா யிங்கு!
கடமை பேணும் ஊடகங்கள்.!
சரசுவதிபூசை முற்றுர் பெற!
கௌரி விரதம் ஆரம்பம்.பெண்களதை!
கௌரவமாய் முடிக்க, தீபாவளி!
கொண்டாட்டமாயச்; சுளரும். !
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.