பெண் மொழிகள் - வேதா. இலங்காதிலகம்

Photo by FLY:D on Unsplash

மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில் !
நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி, !
மறைவின்றிப் பச்சை பச்சையாகப் பலர், !
இறைக்கிறார் கவிதைகள், இது விடுதலையாம். !
இலையாடைப் பிறப்பு, நிர்வாண நிலையருக, !
தலையெடுப்பு நாகரீகம் பல உயர்படிகளாக. !
அலைபுரண்டது மதிப்பு மரியாதையென !
வலை விரித்தது நாகரீக உறவாடல்கள். !
--------------------- !
மனிதம் நாகரீக உச்சம் கண்டதென்று !
மடங்கி விழுந்ததோ இன்று தொப்பென்று! !
ஆதியில் பேசினோமே பச்சை பச்சையாக, !
நீதியில்லையாம் அதை மூடிமறைப்பது! !
ஆடையெதற்கு இன்று எமக்கு அங்கத்திலே !
ஆதியில் திரிந்தோமே நிர்வாணமாயென்று; , !
வாதிக்கமாட்டாரோ அடுத்த வாரிசுகள்? !
போதிக்கும் வழியோ இப் பெண் மொழிகள். !
------------------------ !
புல்லை, புவியை, புலர்காலை அழகென்று !
சொல்லை உழுத கவியுலகில் பெண் மொழி !
முல்லை மணம் வீசுமோ! கல்லையாகுமோ! !
எல்லையின்றி எங்கு போய் முடியுமோ? !
பெண்களின் கவிதையானால் இன்று சிறு !
பின்வாங்கல் அதில் மேய்ந்திட, ஐயகோ! !
பெண் மொழிகளாற் தலை சுற்றுகிறது. !
என்ன இது! கவியுலகம் எங்கே போகிறது! !
---------------------------- !
பா ஆக்கம் - வேதா. இலங்காதிலகம். !
டென்மார்க்
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.